Wednesday, July 18, 2012

யோகம் 3`கடமையைச்செய் பலன் விளைவில் பற்றுவைக்காதே! `----கர்ம யோகம்!!

(இங்கு க்ளிக் செய்து சுலோகங்களை கேட்டுக்கொண்டே வாசிக்கவும்)



கீதை 3:9 கடவுளுக்கு அர்ப்பணம் என்பதாக வேலை செய்யப்படவேண்டும்;இல்லாவிட்டால் வேலைகள் இந்த லவ்கீக உலகில் மனனோவு உள்ளவைகளாக மாறிவிடும்!ஆகவே குந்தியின் மகனே!உனக்கு விதிக்கபட்ட வேலைகளை கடவுளின் திருப்திக்காக என ஈடுபாடோடு செய்வாயாக;இதனால் எப்பொதும் விடுதலை பெற்றவனாக இருப்பாய்!

பொதுவாக ஒரு வேலையை நாம் பிறருக்காக செய்ய வேண்டிய சூழ் நிலை வரும்போது அதனால் நமக்கு என்ன ஆதாயம் என்று சிந்தித்து அதில் ஈடுபாடில்லாமல் ஏனோதானோ என சொதப்புவது உலக வழக்காக இருக்கிறது

அரசுத்துறைகளில் ஆதாயம் வந்தால் அதற்கு ஒரு வேலை இல்லாவிட்டால் அதை ஒலட்டோஒலட்டு என்று ஒலட்டுவது ஒரு கலையாக கற்றுக்கொண்டு கடைபிடிக்கப்படுகிறது!

அது தற்காலிக வெற்றியே தவிற நீடித்த நோக்கில் நமக்கு நாமே நம் சந்ததிகளுக்கு வரவேண்டிய நன்மைகளின் அளவை குறைத்துகொள்ளுகிறோம்! பல வேலைகளில் நாம் உழைத்தும் பலனில்லாமல் போவது நம் முன்னோர்கள் இப்படி சொதப்பியதன் விளைவு   என்பது உண்மை!

ஒரு வேலையில் நமது சூழ் நிலையின் காரனமாக ஈடுபடாமலேயே இருந்து விடலாம் அல்லது அவர்களுக்காக பிரார்த்தனை செய்து விட்டு சும்மா இருந்து விடலாம்! ஆனால் செய்யத்தொடங்கி அதனை சொதப்ப கூடாது!

செயலுக்காக செயலை ஈடுபாடுடன் செய்ய வேண்டும்! முடிந்த அளவு நேர்த்தியாகவும் முழுமையாகவும் செய்வது `கர்ம யோகம்` ஆகும்!

செயல் செயலுக்காக செய்யப்படுவது கர்ம யோகம்!

அதில் ஒரு ஆத்மதிருப்தி என்பது உள்ளே விழைவது! நம்மால் செய்யப்பட்ட செயலுக்கு உடனடி பலனை எதிர்பார்க்க வேண்டியதில்லை!

நம்மால் பலனடைந்தவர்கள் நமக்கு பதில் செய்வார்கள் என்றோ  ;குறைந்தது உணர்ந்தவர்களாக இறுப்பர்கள் என்றும்  எதிர்பார்க்க வேண்டியதில்லை!


கீதை 3:19 எனவே விளைவுகளின் பலன்களில் பற்றுவைக்காமல் ஒருவர் கடமையை கைக்கொள்ளவேண்டும்! யார் பற்றற்று கடமை செய்கிறார்களோ அவர்கள் கடவுளை அடைவர்!


கடவுளுக்காக எதையும் செய்வதாக நினைக்கிற கர்மயோக மனநிலையை அடைந்தவர்க்கு கடவுள் எல்லாவற்றிர்க்கும் ஏற்ற காலத்தில் பலனளிப்பவர்; அவர் கடனாளியல்ல என்பது நன்கு தெறியும்!

குரான் 11:51. "என் சமூகத்தார்களே! இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி எல்லாம் என்னைப்படைத்த அல்லாஹ்விடமே இருக்கிறது. நீங்கள் இதை விளங்கிக் கொள்ள மாட்டீர்களா? --முகமது நபி!

6:160. எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.

4:173. ஆனால் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழுமையாக (அல்லாஹ்) கொடுப்பான்; இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான்; எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணி கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான்; அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணமாட்டார்கள்.

நிறை பக்தன்; தான் செய்கிற செயலை ஆத்ம திருப்தியோடு நிறைவேற்றுகிறான்! இன்றைய வாழ்வு,சூழ்நிலை,முன்னேற்றம் இவற்றிர்க்கு கடவுளை நம்பியிருக்கிரான்

தனது அறிவையும் திறமையையும் ஆழமாக அவன் நம்புவதில்லை!

தனக்கு வருகிற வளர்ச்சிக்கு அவன் நன்றி செலுத்துகிறவனே தவிற குதுகலம் அவனை நிறப்புவதில்லை! தன் தோல்விகளுக்கோ ,தடங்கள்கலுக்கோ அவன் மனம் கலங்குவதுமில்லை! ஒரு குழந்தையைப்போல் அவன் மனம் கடவுளிடத்து நிலைத்திறுக்கிறது!


கீதை 2:150 மனிதர்களில் சிறந்தவனே!யாரொருவன் இன்பத்திலும் துன்பத்திலும் பாதிப்படையாதவனோ;இரண்டிலும் சமநிலை அடைந்தவனோ அவனே விடுதலை பெற தகுதி உள்ளவன்!

அணுபவத்தில்; ஒரு விசயத்தில் ஆவலும் எதிர்பார்ப்பும் நமக்கு  இருக்கும் வரை அதில் நாம்தான் ஒளப்பிக்கொண்டு இருப்பதாக இருக்கும்!ஆனால் எதிர்பார்ப்பு இல்லாத மனச்சம நிலையை அடைந்து விட்ட விசயத்தில் விரைவில் வெற்றி வந்து சேரும்!ஏனெனில் அதில் கடவுள் செயல்பட தொடங்கி விடுகிறார்!

எங்கே நம் சுயம் அடங்குகிறதோ கர்மயோகம் ஆகுதியாக --வேள்வியாக --பிரார்த்தனையோடு செய்யப்படுகிறதோ அதில் கடவுளே விளைவுக்கு நிர்பந்தப்படுத்தப்படுகிறார்!

கீதை 18:6 எல்லா செயல்களும் பற்றற்று செய்வாயாக!விளைவுகளில் எந்த எதிர்பார்ப்பும் கூடாது!செயலுக்காக செயலை செய்!இதுவே என் முடிவான கருத்து!


யோகம் :3    கர்ம யோகம்!!!

கடவுளுக்கு அர்ப்பணம் என்பதாகவே வேலை செய்யப்படவேண்டும் !!!

கீதை 3;1 அர்ச்சுனன் கேட்கிறான் : ஜனார்த்தனா !கேசவா ! உலகியல் ஆதாய செயல்களை விட ஞானம் கருதிய செயல்களே சிறந்தது என உபதேசிக்கும் தாங்கள் பின்னை எதற்காக கொடூரமான இந்த யுத்தத்தில் ஈடுபடுத்துகிறீர்கள் ?

கீதை 3;2 எதிரெதிராக தோன்றும் உமது உபதேசத்தால் என் புத்தி குழம்புகிறது ! ஆகவே தீர்க்கமாக இவை இரண்டில் எது எனக்கு மேண்மையானது என தெரிவிப்பீராக!!

கீதை 3;3 உன்னதமான கடவுளின் தூதர் கூறுகிறார் : தன்னை உணர்கிற அறிவில் வளர்கிற மனிதர்களில் பொதுவாக இரண்டு வகைப்பட்டவர்கள் உள்ளனர் ! சிலர் புற உலக செயல்பாடுகளின் தர்க்கவியல் நுட்பங்களை கண்டுணர்ந்தும் ;சிலர் பக்தி சேவையின் மூலமாகவும் அறிவில் வளர்கிறார்கள் !!

கீதை 3;4 செயல்களை விட்டு விலகியோடி தவம் செய்வதால் மட்டும் ஒருவன் பாவவினை; எதிர்வினைகளிலிருந்து தப்பிக்க முடியாது ! அல்லது செயல்களை அர்ப்பணிப்பதால் மட்டும் பக்குவ நிலையை எய்தவும் முடியாது !!

கீதை 3;5 மனிதர்கள் இயற்கையாகவும் சுற்றுபுற சூழ்னிலைகாளாலும் உருவாக்க பட்ட இயல்புகளால் பந்தப்பட்டு தப்பிக்க முடியாதளவு கிரியை--ஏதாவது செய்துகொண்டே உள்ளனர் ! எனவே யாராலும் ஒரு நிமிடம் கூட சும்மா இருக்கவே முடியாது !!

கீதை 3;6 செயல்படும் புலன்களை  உலகிற்காக கட்டுபடுத்தினாலும் மனதை புலன் நுகர்ச்சி பொருட்களின் மீது அலைபாய்வதிலிருந்து தடுக்க இயலாதவர்களாய் இருப்பவர்களும் தன்னைதானே ஏமாற்றி கொள்ளும் பொய்யர்களே !!

கீதை 3;7 இதற்கு மாறாக கர்மயோகம் செய்கிறவர்கள் --அல்லது கிரிஷ்ண தெளிவில் நிலைத்தவர்கள் பலன் விளைவுகளில் பற்றை களைந்தவர்களாய் கடமை உணர்வோடு செயலாற்றி மனதாலும் செய்கையாலும் புலனிச்சைகளின் பந்தத்தை கடற முற்சி செய்கிறார்கள் !! அவர்களே சிறந்தவர்கள் !!

கீதை 3;8 ஆகவே உன் மேல் விழுந்த கடமையை மனப்பூர்வமாக செய்வாயாக ! அதுவே செயல்மறுப்பை  விட சிறந்தது ;ஏனெனில் ஸ்தூல உடலை செயலில்லாமல் ஒருவனால் நிர்வகிக்கவே முடியாது !!

கீதை 3:9 கடவுளுக்கு அர்ப்பணம் என்பதாக வேலை செய்யப்படவேண்டும்;இல்லாவிட்டால் வேலைகள் இந்த லவ்கீக உலகில் மனநோவு உள்ளவைகளாக மாறிவிடும்!ஆகவே குந்தியின் மகனே!உனக்கு விதிக்கபட்ட வேலைகளை கடவுளின் திருப்திக்காக என ஈடுபாடோடு செய்வாயாக! இதனால் எப்பொதும் விடுதலை பெற்றவனாக இருப்பாய் !!


பொருட்களின் வழி யாகங்களா ? யோகங்களின் வழி யாகங்களா ? 

கீதை 3:10 படைப்பின் துவக்கத்தில் கடவுள் தேவதூதர்களையும் மனிதர்களையும் படைத்து மனிதர்களுக்கு உண்ணத்தக்க கால்நடைகளையும் படைத்து ஆசிர்வதித்தார் ! அவற்றை கடவுளுக்கான யாகங்களாக -- பாவ நிவாரண ;குற்ற நிவாரண பலிகளாக  செலுத்தி கடவுளோடு ஒப்புறவாகும் மார்க்கத்தையும் உயிர்ப்பலி இட்டு அவற்றை உண்டு மகிழ்ந்திருக்கவும் அருள் செய்தார் !!

கீதை 3:11 தேவதூதர்களில் அசுரர்கள் ஆனவர்கள் மனிதர்கள் தங்களுக்காக பலிசெலுத்தி வழிபடுவதில் மகிழ்ந்து மனிதர்களின் பலவகை இச்சைகளை நிறைவேற்றுவதும் ;அதனால் அசுரர்களுக்கும் மனிதர்களுக்கும்  இணக்கம் உண்டாகி அசுரர் ஆளுமை செய்வதுமாய் ஆயிற்று !!

கீதை 3:12 உலகியல் வாழ்வின் மோஹங்களுக்காக ;  அசுரர்களை யாகங்காளால் திருப்தி படுத்துவதும் அசுரர்கள் மனிதர்களின் ஆடம்பர அலங்கார, ஆட்சிகளை நிறைவேற்றுவதுமாய் ஆனது ! அது கடவுளுக்கு சேரவேண்டிய மஹிமையை அசுரர்கள் திருடுவதாயிற்று !!

கீதை 3:13 அப்படியில்லாமல் முழுமுதல் கடவுளுக்கே முதல்மரியாதையாக யாகங்கள் --உயிர்ப்பலி செலுத்தி அதனை உண்ட அவரது நல்லடியார்கள் எல்லா பாவங்களிலிருந்தும் வீடுபேறு அடைந்தார்கள் ! மற்றவர்களோ தங்கள் சுய இச்சைகள் நிறைவேற யாகங்கள் செய்து பாவத்தையே உண்டார்கள் !!

கீதை 3:14 அதனாலேயே விதிக்கபட்ட கடமைகளில் யோகங்களாக யாகங்கள் நிலைமாற்றம் செய்யப்பட்டன !இத்தகைய யோகங்கள் வழியான யாகங்களே மழை பெய்ய காரணமாகிறது ;அந்த மழையினால் உணவுதாணியங்கள் உண்டாகி அனைத்து உயிரிணங்களுக்கும் ஆதாரமாகிறது !!

கீதை 3:15 ஒழுங்குபடுத்த பட்ட கடமைகள் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன !அந்த வேதமோ முழுமுதல் கடவுளால் வெளிப்படுத்தபட்டவை !அத்தோடு உண்ணதமான தெய்வீக இயல்புகள் யோக நெறிமுறைகளில் பொதிந்துள்ளன!!

கீதை 3:16 எனதருமை அர்ச்சுணா ! வேதங்கள் காட்டுகிற யோக நெறிமுறைகளை வாழ்வின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் கடைபிடிக்காதவர்கள் பாவம் நிறைந்த பாதையிலேயே நடந்து வெறும் புலனிச்சைகளுக்காகவே வாழ்ந்து துக்கசாகரத்தில் மூழ்குகிறார்கள் !!

கீதை 3:17 யார் வாழ்வு நெடுகிலும் தன்னை தானே உணர்கிறவனாய் ; தன்னில்தானே நிலைத்து திருப்தியுற்று ; தெய்வீக சமாதானம் எய்தியவன் பரிபூரணத்தை  எட்டுகிறான் !அவன் செயல் செயலின்மையை கடந்தவனாகிறான்!!

கீதை 3:18 பரிபூரணமடைந்த மனிதனுக்கு ; விதிக்கபட்ட கடமைகளை நிறைவேற்ற பாடுபடுதல் என்ற நிர்ப்பந்தம் ஏதுமில்லை ! அல்லது அக்கடமைகளை நிறைவேற்றாமலிருக்க காரணங்களும் இல்லை ! அல்லது எதற்காகவேனும் பிறரை  எதிர்பார்த்திருக்க வேண்டிய அவசியமுமில்லை !!

 கீதை 3:19 ஆகவே பலன் விளைவுகளில் பந்தப்படாமல் செயலுக்காக செயலை ஒருவன் செய்துவரவேண்டும் !அப்படி பற்றில்லாமல் செயல்படுவதால் ஒருவன் கடவுளை அடைகிறான் !!
 கீதை 3:20  விதிக்கபட்ட செயல்களை செய்வதன் மூலமாக ஜனகர் போன்ற அரசர்கள் பூரணத்தை எய்தினார்கள் ! நீயும் அதுபோல பொதுமக்களுக்கு கற்றுகொடுக்கும் பொறுப்போடு கடமையை செய்வாயாக !!

கீதை 3:21 தலைவர்கள் எவ்வழியோ பொதுமக்களும் அவ்வழியே செல்கிறார்கள் ! முன்னுதாரமான செயல்பாடுகளில் தலைவன் என்ன தரத்தை வெளிப்படுத்துகிறானோ  அதனையே அனைவரும் பின்பற்றுவார்கள் !!

கீதை 3:22 பிரதாவின் மகனே !மூவுலகங்களிலும் எனக்கு விதிக்க பட்ட கடமைகளும்  ஏதுமில்லை ! நான் விரும்புகிறவைகளும் ஏதுமில்லை ! எதையாவது பெற்றுகொள்ள வேண்டிய அவசியமுமில்லை ! இருப்பினும் செயல்களில் ஈடுபட்டவனாகவே இருக்கிறேன் !!

கீதை 3:23 பார்த்தா ! என் மேல்வந்த கடமைகளை அக்கறையுடன் செய்துகொண்டிருப்பதை ஒருவேலை நான் நிறுத்தினால் முழு உலகமும் என்னை பின்பற்றி பொறுப்புகளை தட்டிகழிக்காதா ??

கீதை 3:24 நான் செயல்படுவதை நிறுத்தினால் முழு உலகமும் சீரழிவில் விழுந்து வேண்டாத குழப்பங்கள் உருவாக காரணமாகிவிடுவேன் ! அதனால் உயிரிணங்கள் அனைத்தினதும் நிம்மதியை கெடுத்தவனாவேன் !!

கீதை 3:25 ஞானமில்லாதோர் பலன் விளைவுகளில் பற்று கொண்டோராய் செயல்பட்டால் ; வெளிப்பார்வைக்கு அறிவுள்ளோரும் அதேமாதிரியாகவே செயல்பட வேண்டும் ---உள்ளார்ந்து பலன் விளைவுகளில் பந்தமில்லாதவராக ! ஏனெனில் பொதுமக்களை உய்விக்கும் கடமை ஞானமுள்ளோர் மீதே உள்ளது !!

கீதை 3:26 கிரிஸ்ண தெளிவை கற்றுணர்ந்த ஞானமுள்ளோர் ; பலன் கருதி பணியாற்றும் ஜனங்கள் மேலும் கெட்டுபோகாதபடி கடமையை தட்டிகழிக்க பழக்கலாகாது ! மாறாக கடவுளுக்கு அர்ப்பணமாக ; செயலுக்காக செயல் புரிந்து ஜனங்களை எல்லா வகையான செயல்களையும் செய்கிறவர்களாய் பழக்கவேண்டும் !!

கீதை 3:27 மூவகை(சத்துவ, ரஜோ &தாமச) குணங்களால் மயக்கமுற்றிருக்கும் ஆத்துமாக்கள் ; உலகிலே  நால்வகை தொழிலிருந்து இயற்கையாக எழும்பும் செயல்பாடுகளை தாமே திட்டமிட்டு ; நிர்வகித்து செயல்படுவதாக நம்பிக்கொண்டுள்ளனர்  !

கீதை 3:28 போர்க்கலையில் வல்லவனே !மெய்யறிவில் நிலைத்த ஆத்துமாக்களோ கடவுளுக்கு அர்ப்பணமாக செயல்படுவதற்கும் பலன் விளைவில் பற்று கொண்டு செயல்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தவர்கள் !  புலன்களுக்கும் புலன்இச்சைகளுக்கும் ஆட்பட்டு அதற்காக செயல்படுவதிலிருந்து தம்மை விடுவித்து கொள்கிறார்கள் !!

கீதை 3:29 நால்வகை தொழிலின் இயல்புகளால் குழம்பிய ஆத்துமாக்கள் ;அறியாமையால் உலகியல் செயல்பாடுகளை சாசுவதம் என நம்பி அதற்கு பந்தப்பட்டு கொள்கிறார்கள் ! ஞானமின்மையால் கீழ்னிலையடைந்த அவர்களின் செயல்பாடுகளை ஞானமுள்ளோர் ஒருபோதும் தடைசெய்யலாகாது !!

கீதை 3:30 ஆகவே அர்ச்சுணா ! கடவுளின் மீது மனம் நிலைத்தவனாய் ; அவரை முற்றிலும் சரணடைந்து தான்தனது என்ற அகம்பாவத்தை விட்டுவாயாக ! மனதாழ்மையுடனும் கவணத்துடனும் போரிடுவாயாக !!

கீதை 3:31 யார் எனது அறிவுறுத்தல்களை மனமுரண்பாடின்றி பக்திபூர்வமாக நம்பிக்கையுடன் கடைபிடிக்கிறார்களோ அவர்களே  பலன்விளைவில் பற்று கொண்ட செயல்பாடுகளின் பந்தத்திலிருந்து நிச்சயம் விடுதலை பெறுவர் !!

கீதை 3:32 யார் மனமுரண்பாட்டால் இந்த அறிவுறுத்தல்களை அவமதித்து  ; பின்பற்ற மறுக்கிறார்களோ அவர்கள் எல்லா அறிவையும் இழந்து மதியீணராய் இருளுக்குள் அமிழ்ந்து அழிவை அடைவது திண்ணம் !!


உலகில் அழிவை உண்டாக்கும் எதிரி--இச்சை !! 

கீதை 3:33 எல்லா மனிதர்களும் தங்களிடமுள்ள மூவகை குணங்களிலிருந்து எழும்பும் செயல்களை இயற்கையாகவே  தன்னையறியாமல் செய்கிறார்கள் ! அதுபோலவே தன்னை உணர்ந்த ஞானியரும் தங்கள் இயற்கையின்படியே செயல்பட்டால் யாரை போய் கண்டிப்பது??

கீதை 3:34  தன்னை சுற்றிய பொருட்களின் மீது ஈர்ப்போ வெறுப்போ கொள்ளுவது புலன்களின் இயல்பாகும் ! அதனை கட்டுப்படுத்தி முறையான வழிகளில் பழக்கவேண்டும் ! மாறாக புலன்களின் ஈர்ப்புக்கும் வெறுப்புக்கும் அடிமையாகக்கூடாது ! ஏனெனில் தன்னை உணர்வதற்கான பாதையில் அவை பெரும் தடைகற்களாகும் !!

கீதை 3:35 ஒருவன் அடுத்தவர் கடமைகளை மிகசரியாக செய்வதைகாட்டிலும் தனக்கு விதிக்கபட்ட கடமைகளை தவறுதலாக கூட செய்வது நல்லது !அடுத்தவர் கடமைகளில் சிக்கிகொள்வதை காட்டிலும் தனது கடமைகளை செய்து அழிவதாயினும் அதுவே தலைசிறந்தது !!

கீதை 3:36 அர்ச்சுணன் கூறினான் : விரிஸ்னி குலத்தோனே ! முழுமனதில்லாமலேயே பலவந்தப்படுத்தப்பட்டது போல ஒருவன் சிலசமயங்களில் பாவகாரியங்களை செய்ய ஏன் தூண்டப்படுகிறான் ??

கீதை 3:37 இறைதூதர் கிரிஸ்ணர் கூறிணார் : இச்சைகள் தான் காரணம் அர்ச்சுணா !  புற உலகாலுண்டாகும் மோகம் ரஜோ குணத்தால்  மூர்க்கமாய் மாற்றமடைகிறது ! அந்த மூர்க்கமே எல்லா பாவத்திற்கும் காரணமாகி உலகில் அழிவை உண்டாக்கும் எதிரியாய் விளங்குகிறது !!

கீதை 3:38 நெருப்பு புகையால் சூழப்பட்டிருப்பது போல ;கண்ணாடியில் தூசி படிந்திருப்பது போல ;அல்லது கரு கருவறையால் சூழப்பட்டிருக்கிறது போல இப்பூவுலகின் எல்லா உயிரிணங்களும் இச்சைகளின் பலவகைப்பட்ட படிமானங்களால் சூழப்பட்டுள்ளன !!

கீதை 3:39 எல்லா மனிதர்களின் அறிவும் ஆண்மாவின் எதிரியான இச்சைகளால் நெருக்கி அமிழ்த்தப்படுகிறது ! அது ஒரு போதும் திரிப்தியடையாதது ;பற்றியெரிகிற நெருப்பாக தூய உணர்வுகளை சுட்டு பொசுக்குவது !!

கீதை 3:40 புலன்கள் , மனம் மற்றும் மதினுட்பம் ஆகியவைகளே இச்சை அமர்ந்து ஆட்சிபுரியும் இடங்களாகும் ! அவைகளை தூண்டி எல்லா மனிதர்களின் அறிவிலும் குழப்பத்தை உண்டாக்குகின்றன !!

கீதை 3:41 அர்ச்சுணா ! பாவத்தின் பெரிய அடையாளமான இச்சையை முளையிலேயே கிள்ளி எறிவாயாக ! பரதவர்களில் சிறந்தவனே ! தன்னை உணர்தலையும் ஞானத்தையும் அழிக்கிற இச்சையை முயற்சித்து வீழ்த்துவாயாக !!

கீதை 3:42 கர்ம இந்திரியங்கள்--புலன்கள் ஜடப்பொருள்களை விட உயர்ந்தவை ! மனம் புலன்களை விட உயர்வானது !அறிவோ மனதையும் விட உயர்வானது !ஆனால் ஆத்துமாவாகிய மனிதனோ அறிவையும் விட மிகமிக உயர்ந்தவன் !!

கீதை 3:43 உலகம் ,புலன்கள் ,மனம் மற்றும் அறிவு எல்லாவற்றையும் விட தனது உண்ணதத்தை ஒருவன் உணரவேண்டும் ! யுத்தத்தில் வல்ல அர்ச்சுணா ! ஆண்ம உனர்வை விரிவடைய செய்து மனதை கீழ் நிலையினின்று உயர்த்தவேண்டும் ! இவ்வாறாக ஆண்ம பலமடைந்து வெல்லவே முடியாத எதிரியாகிய இச்சையை வெல்லவேண்டும் !!