Wednesday, July 18, 2012

தன்னுரை




ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் கடந்து விட்டது
கீதையை மறு பொழிப்பு செய்ய ஆரம்பித்து .
உண்மையாகவே இதைப்பற்றிய எந்த திட்டமும் எனக்கு இல்லை . வள்ளலாரைப்பற்றி கொஞ்சம்

அனுபவப்படவேண்டும் என்ற உணர்வு அப்போது இருந்தது .

ஆகவே நான் தைப்பூசம் அன்று வடலூர் சென்றேன் . எல்லோரும் ஜோதி பார்க்க முட்டி கொண்டிருந்ததால் நான் சித்தி வளாகம் சென்றேன் . கூட்டம் இல்லை . ஆகவே ஏகாந்தமாக தியானத்தில் ஆழ்ந்தேன் . .சற்று நேரத்தில் சிவந்த ஒளி ஒன்று தோன்றி என்னை நோக்கி வந்து என் நெற்றியின் ஊடாக எனக்குள் கலந்து விட்டது . உள்ளே ஒரு குரல் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரேல் தேசத்தில் முதல் முதலாக ஒளி தேகம் அருளப்பெற்றேன் . என்னைப்பற்றியும் அதில் உன்னைப்பற்றியும் கூட பைபிளில் எழுதப்பட்டுள்ளது . வரப்போகிற சமரச வேதத்திற்கான தரிசனத்தை முன்னெடு என்றது .



பைபிளில் யாராவ்து ஒளி தேகியாகி பரலோகம் போனாரா என தேடினால் எலியா என்றொரு தீர்க்கதரிசி கர்மேல் என்ற மலையில் ஆசிரமம் அமைத்திருந்தார் எனவும் செத்தாரை எழுப்பினார் எனவும் ; குஸ்ட்டாரோகியன சிரியா நாட்டு படைத்தளபதியை குணமாக்கினார் எனவும் கடைசியாக உடலோடு பரலோகம் அழைக்க அக்கினிமயமான ரதங்களும் குதிரைகளும் பலர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே வானத்திலிருந்து வந்தன எனவும் அப்படி ஏறிப்போகும் போது அவரது சால்வையை எலிஜா என்ற சீடர் மீது போட்டார் எனவும் ; பின்பு எலிஜாவும் நிறைய சாதித்தார் எனவும் எழுதப்பட்டிருந்தது
தியான நேரம் போக நான் அங்கொரு குடிலில் ஓய்வெடுக்க படுப்பேன் . அப்போது அங்கே சிவனடியார் போல ஒருவரும் மற்றொருவரும் ஓய்வெடுப்பது போல இருந்துகொண்டு உரையாடுவது போல சன்மார்க்ககிகள் கூட அறியாத பல விஷயங்களை வள்ளலாரைப்பற்றி பேசிக்கொண்டே இருந்தார்கள் . இப்படி இரண்டு நாளாளவும் எனக்கு தகவலாக தந்து எனக்குள் ஏற்றிக்கொண்டே இருந்தார்கள்
எதற்காக சமரச சத்திய என்று சங்கத்திற்கு பெயர் வைத்திருக்கிறீர்கள் என வள்ளலாரை கேட்டபோது தனக்கு பின்பு வருகிற தனித்தலைமைப்பதி சமரச சத்தியத்தை உங்களுக்கு அறிவிப்பார் .
இப்போது அதற்கான காலம் கணியாததால் தான் சொல்வதற்கில்லை எனவும் சமரச வேதாந்தி ஒருவர் வள்ளலாருக்கு பின்பு வருவார் எனவும் . தன்னை இன்னார் என நிரூபிக்க கலபட்டு ஐயா முதலானோரை உயிரோடு எழுப்பி வள்ளலார் கட்டியுள்ள எழுவார்மேடையில் சாட்சி சொல்ல வைப்பார்
அவரே வள்ளலாருக்கு பின்பு சமரச சத்திய சன்மார்க்க சங்கத்திற்கு தலைமையேற்று உலகம் சமரச சத்தியத்திற்குள் சுபீட்சம் பெருகும் .
சமரச வேதம் எப்படியிருக்கும் என மற்றவர் வினவ கீதை ; பைபிள் ,குரான் இவைகளுக்கிடையில் ஒன்றினால் ஒன்று செழுமையாகும்படியாக வசனங்கள் விரவி கிடப்பதாகவும் ; அந்த நபருக்கு அது தானாகவே வெளிப்படும் என்றும் சொல்லி முடித்துவிட்டு பின்பு அவர்கள் வரவில்லை
நானும் மூன்றாம் நாளில் எல்லோரும் சித்தி வளாகத்தில் முட்டி மோதிக்கொண்டிருக்க சத்திய ஞான சபையில் தியானித்து விட்டு ஊர் வந்து சேர்ந்தேன்
பின்பு முகநூலில் யாரோ கீதையின் ஒரு குறிப்பிட்ட சுலோகம் பற்றி விசாரம் செய்ய அதற்கு நான் விளக்கம் எழுத ; இப்படி தற்செயலாக கீதை மறுபொழிப்பு பணி ஆரம்பிக்கப்பட்டது .
ஒரு சுலோகத்தை பற்றி எழுதும் முன்பு அது தொடர்பாக அனுபவம் காரியம் வாய்க்கும்
அப்புறம் எழுத உள்ளுணர்வு பல முறை வந்த பின்பே எழுதுவேன்
கொஞ்ச நாள் கழித்து அதை வாசித்தால் அதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லாதது போலவே இருக்கும்
கீதை உபதேசிக்கப்பட்ட காலத்தில் கிறிஷ்ணர் ; அர்ச்சுணர் ; சுற்றிலும் இருந்த கொஞ்ச பேர் மட்டுமே கேட்டார்கள்
அதை ஞான திருஸ்ட்டியில் சஞ்சயர் கண்டு திருதராஷ்ட்ரருக்கு கூறினார்
அதை பிற்காலத்தில் பல ஆண்டுகள் கழித்து எழுதினார்கள்
ஆகவே அது எழுதப்படும் முன்பே எவ்வளவோ கலப்படம் அடைந்து விட்டது
அதனால் முழுமையான கீதை இப்போது இல்லை என்பதே உண்மை
அதற்கு விரிவுரை எழுதியவர்களோ அவரவர் சம்பிரதாயங்கள் என்ற கண்ணாடியை போட்டுக்கொண்டு அந்த பார்வையிலேயே எழுதியதாலும் அதிலும் முழுமையான விளக்கம் இல்லை
கடைசியாக பொழிப்புரை சொன்ன பிரபுபாதா கூட கிறிஷ்ணரே முழு முதல் கடவுள் என நிரூபிப்பதே வேலை என்பதுபோல மாஞ்சு மாஞ்சு பக்கம் பக்கமாக எழுதியிருப்பார்
மார்க்கங்கள் ; சமயங்கள் ; யார் கடவுள் என ஆராய்வது என்பதற்கு அப்பாற்படு கீதை யோகங்களை ஆழ்ந்து விளக்கும் இலக்கண நூல்
இன்று உலகத்தில் அப்பியாசத்தில் உள்ள ; அத்தோடு இனிமேல் வரப்போகிற எந்த யோகக்கலையையும் 18 வகையான யோகங்களுக்குள் கிறிஷ்ணர் வரையறுத்துள்ளார்
அந்தந்த யோகத்தின் அடிப்படை என்ன ; அதன் கூறுகள் என்ன ; சிறப்புற கடைபிடித்து தேர்ந்து முன்னேறி செல்ல என்ன வழி என மிக அருமையாக உபதேசித்துள்ளார்
18 வகை யோகங்களே 18 அத்தியாயங்கள்
அந்தந்த யோகங்களை அந்தந்த யோகங்களில் நின்று நான் உணர்ந்தது எதுவோ அது பயன்படக்கூடிய யாருக்கேனும் பயன்படட்டும் என்பதற்கு மேலாக இந்த எழுத்தாக்கத்தில் எதுவுமில்லை
சில சுலோகங்களுக்கு பொழிப்புரை எழுதப்பட்டால் ; இதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என 10 நிமிடமாவது தியானித்து மறந்தும் விடுவேன்
மும்மத சமரச வேதம் என்ற ஒப்புவமையும் எனக்கு வெளியாக்கப்பட்டதும் ஆங்காங்கு ஒன்றை ஒன்று செழுமைப்படுத்துகிறது . வரப்போகிறவரைப்பற்றிய பல வெளிப்பாடுகள் ; அவருக்கு இறைவன் கொடுக்கப்போகிற வாரங்கள் ; அற்புத அடையாளங்கள் என பல விபரங்கள் உணர்ந்துகொண்டேன்
இறைவனால் முன் குறிக்கப்பட்ட அந்த மகோன்னதமான ஆத்மா வெளியரங்கமாக வேண்டுமானால் அதற்காக பிரார்திக்கிற ஆத்மாக்கள் சிலர் முன்பு வந்து பிரார்திப்பார்கள் ; பரப்புரையும் செய்வார்கள்
பலரால் எதிர்பார்க்கப்பட்ட பின்பே அவரது வருகை சம்பவிக்கும் என்பதால் அந்த முன்னோடிகளில் நான் ஒருவன் என்ற பொறுப்பு இறைவனாலேயே சுமத்தப்பட்டே இந்த திசையில் பயணித்திருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயம்
நிச்சயமாக இதற்கும் எனது சிற்றறிவுக்கும் எந்த சம்மந்தமுமில்லை
இறைவனால் சுமத்தப்பட்ட பொறுப்பு என்னை இயக்கியிருக்கிறது என்பதை தாழ்மையோடு இறைவனுக்கு சமர்ப்பிக்கிறேன்
ஒவ்வொரு சம்பிரதாயிகளும் அவரவர் சம்பிரதாயம் என்ற கண்ணாடியை போட்டுக்கொண்டு கீதையை விளக்கம் செய்தது போல மும்மத சமரச வேதம் என்ற அடிப்படையில் இறைவனால் உணர்த்துவிக்கப்பட்ட படியே வசனங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன

1 comment:

kirubarp said...

கீதை மறு பொழிப்பு - தன்னுரை