Wednesday, July 18, 2012

கீதை 10 விபூதி யோகம் !!

(இங்கு க்ளிக் செய்து சுலோகங்களை கேட்டுக்கொண்டே வாசிக்கவும்)


கீதை 10 : 1 உன்னதமான இறைவனின் தூதுவர் கூறினார் : வலிமையான புஜங்களையுடைய அர்ச்சுணா ! நீ என் மனங்கவர்ந்த சிநேகிதன் ஆதலால் உனக்கு மேலும் நன்மை விரும்பி இதுவரை நான் உனக்கு விளக்கியதைக்காட்டிலும் சிறந்ததை உணர்த்துகிறேன் !!

கீதை 10 : 2 தேவதூதர்களும் மகா மகரிஷிகளும் ஒவ்வொரு சிறு விசயங்களுக்கும் ஆதாரமாய் என்னையே சார்ந்திருந்தாலும் அவர்கள் கூட என் தோன்றலின் மூலத்தையும் என் மகிமையையும் முழுமையாய் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை !!

கீதை 10 : 3 யாறொருவன் என்னை பிறக்காதவனாகவும் உருவாக்கப்படாதவனாகவும் பிரபஞ்சத்தின் அதிபதியாகவும் அறிந்து உணர்கிறானோ அவன் மட்டுமே அசுரர்களால் கலப்படமடையாமல் பாவங்களிலிருந்து விடுபடத்தகுதியடைவான் !!

கீதை 10 : 4 புத்திக்கூர்மை , ஞானம் , சந்தேகத்திலிருந்தும் குழப்பத்திலிருந்தும் தெளிவுறுதல் , மண்ணிக்கும் மாண்பு , உண்மை , புலணடக்கம் , மனக்கட்டுப்பாடு ,பேரானந்தம் , அஹிம்சை , எதிலும் சமநிலையடைதல் , நிறைவு , புண்ணியம் , செழிப்பு , மங்காத புகழ் ஆகிய அனைத்தும் ஒருவனில் என்னாலேயே உருவாக்கப்படுகிறது ; மாறுபாடான மகிழ்ச்சி துக்கம் , பிறப்பு இறப்பு ,பயம் பயமின்மை , புகழ் இகழ் ஆகிய சுழலுக்குள்ளும் ஒருவன் என்னாலேயே அமிழ்த்தப்படுகிறான் !!

கீதை 10 : 5 சப்த (ஏழு) மகாரிஷிகளும் ; அவர்களுக்கு முந்தய நாலு ரிஷிகளும் ; மனித இனங்களின் மூதாதைகளான மணுக்களும் என்னிலிருந்தே வந்தனர் !!

கீதை 10 : 6 எல்லா லோகங்களிலும் வாழும் சகல ஜீவராசிகளும் என்னிலிருந்தே வந்தவை !! அதாவது எனது சித்தத்தாலேயே உறுவாக்கப்பட்டவை !!

கீதை 10 : 7 யாறொருவன் இந்த உண்மையை -- எனது மறைசக்தியை ; மகிமையை உணர்ந்து விசுவாசிக்கிறானோ அவன் சந்தேகம் தெளிந்தவனாக திடமான பக்திதொண்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வான் !!

கீதை 10 : 8 எல்லா பவ்தீக மற்றும் அமானுஸ்ய உலகங்களின் ஆதாரம் நானே ! ஒவ்வொன்றும் என்னிடமிருந்தே வெளிப்படுகின்றன ! மிகச்சரியாக புரிந்துகொண்ட ஞானவான்கள் முழு இதயத்தோடு என்னை பின்பற்றி பக்தி தொண்டாற்றுவார்கள் !!

கீதை 10 : 9 தூய்மையான எனது சீடர்களின் சிந்தை எப்போதும் என்னிலேயே நிலைத்திருக்கிறது ! அன்றாட வாழ்வையே பக்திதொண்டாக வேள்வியாக்கி ஒருவரை ஒருவர் உபதெசித்துக்கொள்ளுவதிலும் என்னைப்பற்றியே பேசிக்கொள்வதிலும் பேரானந்தமும் பரம திருப்தியும் அடைகிறார்கள் !!

கீதை 10 : 10 உள்ளார்ந்த அன்புடன் அத்தகைய பக்திதொண்டாற்றுபவர்களுக்கு நானே என்னை அடைவதற்கு உணர்வை அருளுகிறேன் ! எங்களுக்கிடையிலான புரிதலை அதிகப்படுத்துகிறேன் !!

கீதை 10 : 11 எனது தனிப்பட்ட கருணையை காட்ட நானே அவர்களுக்குள் வாசமாகி ; அவர்களின் இதயத்தில் பிரகாசிக்கும் ஞான சுடர் விளக்காகி அறியாமையின் இருளை அகற்றுகிறேன் !!

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

சகலங்களின் ஆதாரம் நானே ! சகலமும் என்னிலிருந்தே வந்தவை என்கிறார் கிரிஸ்ணர் ! பக்தர்களின் இதயத்தில் வாசமாகி ஞான சுடர் விளக்காகவும் பிரகாசிக்கிறேன் என்கிறார் ! இக்குணங்களெல்லாம் கடவுளின் குணமாகவும் அவரது இயல்பாகவுமல்லவா இருக்கிறது !!

சகல பவ்தீகமும் வெளிப்பாடுகளும் படைக்கப்பட்டவை அனைத்தும் அவரிலிருந்தே வந்தவை ! அப்படியாயின் படைத்தவர் அவர்தானே ! மேலோட்டமாக பார்த்தால் அது சரியே ! ஆனால் இன்னும் கொஞ்சம் ஆழமாக நிதானித்தால் படைப்பின் ரகசியம் புரியும் ! ஒன்றுமேயில்லாத வெற்றிடத்தில் படைக்கப்பட்டது ! அப்படியாயின் படைப்புக்கு முன்பு படைத்த ஒருவர் அங்கிருந்திருக்க வேண்டும் ! அவர் அரூபமாகவும் இருந்திருக்க வேண்டும் ! அவர்தான் கடவுள் ! ஆதிமூலம் !


சரி அவர் படைப்பிற்கு என்ன செய்தார் ?

படைப்பிற்கு தெவையான மூலக்கூறுகளை தயார் செய்து அவற்றை கலந்து ஒன்றை உறுவாக்கினாரா ? கடவுள் மனிதர்களைப்போல அப்படி செய்யவேண்டியதில்லை ! அவர் செய்வதெல்லாம் `` ஆகுக `` என பேசினால்போதும் ! அது ஆகிவிடும் !

குர்ஆன் 36:82. எப்பொருளையேனும் அவன் படைக்க நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; ஆய்விடுக என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.

2:117. வானங்களையும், பூமியையும் இல்லாமையிலிருந்து உண்டாக்கினான்; அதனிடம்  ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.


உலகில் வந்த எந்த வேதங்களும் நிலை பெற்றுள்ள மதங்களும் கடவுள் அருளில்லாமல் வந்தவையல்ல ! மனித முயற்சியாலும் அசுர ஆவிகளாலும் வந்தவை நிலைப்பதில்லை நிலைத்துள்ளவை அனைத்தும் கடவுளால் வந்தவையே !

ஆனால் இந்திய வேதங்களை அப்படியே புறந்தள்ளி பைபிளை தூக்கிவைத்து ஆடுவதும் ; பைபிளை புறந்தள்ளி குரானை தூக்கிவைத்து ஆடுவதும் ; இரண்டையும் ஓரக்கண்ணால் கூடப்பார்க்காமல் இந்திய வேதங்களை தூக்கிவைத்து ஆடுவதுமான மனித தவறுகள் தவறான வியாக்கியாணங்கள் பகையை தூண்டி விடுகின்றான !

ஆனால் வர உள்ள சமரச வேதம் எல்லா வேதங்களின் சரியான உண்மைகளை மட்டும் சுவீகரித்து அவைகளின் அடிப்படைகள் ஒன்றிற்கு ஒன்று ஒத்தே இருப்பதை நிலைனாட்டி முழுமையான ஞானத்தை எட்டுவதுவே !


யோவான் 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது !

ஆக அரூபமான கடவுள் வெற்றிடமும் இருளுமான இடத்தில் முதலாவதாக பேசினார் ! முதல் வெளிப்பாடு சத்தம் ! அந்த சத்தமே நாராயணன் !

நரல் என்றால் சத்தம் ! நரல்+ ஆய +நன்= நாராயணன் !


நரணாய் ஆன அதாவது அருப இறைவனிடமிருந்து பௌதீகமாக வெளிப்பட்டவர் நாராயணன் -- நரணாய் ஆனவன் !

அதனால்தான் சங்கை கையில் போட்டார்கள் ஆக்கமும் அழிவும் அவருக்கள்ளிருந்து தோன்றி அவருக்குள் மறைவதால் சக்கரத்தை போட்டார்கள் !

இந்த நாராயணனே கடவுளிடமிருந்து முதலாவது வெளிப்பட்டவர் ! அந்த ஆதாரத்தின் மீது ஆதாரத்திலிருந்து சகல படைப்புகளும் வெளிபட்டு அவருக்குள்ளேயே அழிந்தும் விடுகின்றன !

அதாவது கடவுள் சகலவற்றையும் நாராயணனுக்குள் நாராயணனிலிருந்தே படைக்கிறார் ! ஆனாலும் நாராயணன் பிறக்காதவர் உறுவாக்கவும் படாதவர் ! ஏனென்றால் அவர் கடவுளின் வார்த்தையாய் கடவுளிடமே இருந்தவர் ! குரானின் பைபிளின் வெளிச்சத்தில் இந்த உண்மையை உணரவேண்டும் ! (கீதை 10 : 1 - 8)

அதனால்தான் நாராயணனுக்கு கடவுளின் குணாதிசயங்கள் உள்ளன ! ஆனாலும் ஆழமாக படைப்பு நாராயணன் என்றால் அந்தப்படைப்பையும் விஞ்சி வெளியேயும் கடவுள் இருக்கிறார் என்பது உண்மை !!

நரன் + ஆயணன் படைக்கப்படவைகளை தேற்றுகிறவன் ! (கீதை 10 : 9 - 11)

யோவான் 15:7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். !

மீண்டும் இந்த நாராயணனும் அமானுஸ்யமே ! அதாவது மாயோன் ! அவர் யுகங்கள் தோறும் பூமிக்கு இறங்கி அவதரிப்பது சேயோன் அல்லது குமாரன் அல்லது இறைதூதன் !

அவ்வாறு அவதரித்த திரேதா யுக ராமனும் துவாபர யுக கிரிஸ்ணனும் கலியுக இயேசுவும் ஒருவரே !! -- நாராயணனே !

குர்ஆன் 4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். கடவுளைப் பற்றி உண்மையைத் தவிர வேறெதையும் கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் கடவுளின் தூதர் தான்; இன்னும் ஆகுக என்ற கடவுளின் வாக்காகவும் அதனால் உண்டானவராகவும் இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, கடவுளின் மீதும் அவன் தூதர்கள் மீதும் பக்தி கொள்ளுங்கள்;

சடங்காச்சார முஸ்லீம்கள் குரானின் வசணத்தையே சரியாக புரிந்துகொள்ளாமல் இயேசுவை வழிபடும் கிரிஸ்தவர்களை கொண்றொழித்தது கொஞ்சநஞ்சமல்ல ! ஆனாலும் குரான் அவரை கடவுளின் வார்த்தையானவர் அதாவது நாராயணன் என்றுதான் குறிப்பிடுகிறது ! பைபிளும் அதைதான் குறிப்பிடுகிறது !!

யோவான் 1:14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம் !

யோவான் 12:44 அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.

யோவான் 12:46 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.

யோவான் 14:1 உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; கடவுளிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.

ராமர் , கிரிஸ்ணர் , இயேசு அல்லது நாராயணன் மூலமாக கடவுளை வழிபடுவதே வேதங்களால் அங்கீகரிக்கப்பட்டது !

யோவான் 16:23 அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். !!


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கீதை 10 : 12 அர்ச்சுணன் கூறினார் : நீரே அரூப கடவுளின் உயர்தரமான முதல் வெளிப்பாடானவர் ! மனிதர்கள் அடையக்கூடிய உன்னதமான பரமபதமும் நீரே ! பரிசுத்தரும் பரிபூரண உண்மையும் நீரே ! அழிவற்றவரும் நித்திய ஜீவனும் வழிகாட்டியும் நீரே ! சகல ஆத்துமாக்களுக்கும் மூலமான பரமாத்துமாவும் , அதிபதியும் , பிறப்பிறப்பை கடந்தவரும் நீரே !

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் கடவுளிடத்தில் வரான். என்றார் !


யோவான் 10:7 இயேசு அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.


யோவான் 10:9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.


யோவான் 10:14 நானே நல்ல மேய்ப்பன்; கடவுள் என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் கடவுளை அறிந்திருக்கிறதுபோலவும்,


யோவான் 7:29 நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார்.


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கீதை 10 : 13 நாரதர் , அசிதர் தேவலர் மற்றும் வியாசர் போன்ற மாமகரிஷிகளும் இந்த உண்மையை உறுதிப்படுத்தியுள்ளனர் ! இப்போதோ தங்களைப்பற்றி தாங்களே எனக்கு உணர்த்தும் பாக்கியத்தைப்பெற்றேன் !!

கீதை 10 : 14 கிரிஸ்ணா ! நீர் கூறிய யாவையும் சத்தியமானவை என அப்படியே ஏற்றுக்கொள்ளூகிறேன் ! சற்குருவே ! இவ்வுண்மையை - உமது இயல்பை மகிமையை தேவதூதர்களும் அசுரர்களும் கூட முழுமையாக புரிந்திருக்கமாட்டார்கள் !!

கீதை 10 : 15 பரமாத்மனே ! சகல படைப்புகளுக்கும் மூலமே ! சகலவற்றின் அதிபதியே ! பிரபஞ்சத்தின் தலைவனே - ஜகநாதரே ! தேவதூதர்களுக்கும் அதிபதியே !

கீதை 10 : 16 இந்த அகிலம் முழுமையும் நீர் விரவி நிற்கும் உமது அமானுஸ்ய மகிமையை -- தெய்வீக இயல்பை அடியேனுக்கு உணர்த்துவீராக !!

கீதை 10 : 17 உன்னதமான கடவுளின் பிரதினிதியே ! அதிசயத்தின் உச்சமே ! உம்மை நான் எவ்வாறு உணர்ந்தறிவது ? உமது பல்வேறான படிமானங்கள் எவற்றையெல்லாம் நினைவுகூற வேண்டுவது ? சதா உம்மையே சிந்தித்து உம்மிலே முழ்கித்திளைப்பது எங்கனம் ?

கீதை 10 : 18 ஓ ஜனார்த்தனா ! உமது மகிமையின் அமானுஸ்ய சக்திகளைப்பற்றி விபூதிகளைப்பற்றி மீண்டும் எனக்கு உணர்த்தியருளுவீராக ! கிரிஸ்ணா ! உம்மைப்பற்றி எவ்வளவுதான் அறிந்தாலும் போதுமென்று தோன்றவில்லை ! அமுதம் போன்ற தெவிட்டாத விசயங்களால் இன்னுமின்னும் என உந்தப்படுகிறேன் !!

கீதை 10 : 19 கடவுளின் உன்னதமான வெளிப்பாடாகிய கிரிஸ்ணர் கூறிணார் : குரு குலத்தில் சிறந்தவனே ! நூதனமான எனது வெளிபாடுகள் உனக்கு அறியத்தக்கனவே ! இருப்பினும் எனது அமானுஸ்ய மஹிமைகள் கணக்கிலடங்காதவை ஆதலால் முக்கியமான சிலவற்றை விவரிக்கிறேன் !!

கீதை 10 : 20 அர்ச்சுணா ! தனித்த பரமாத்துமாவாக நான் இருப்பினும் ஒவ்வொரு மனிதனிலும் ஜீவாத்துமாவாகவும் நானே குடிகொண்டிருக்கிறேன் ! படைப்பினங்கள் அனைத்திற்கும் துவக்கமும் நடுவும் முடிவுமாக நானே இருக்கிறேன் !

கீதை 10 : 21 ஆதித்தியர்களில் நானே விஸ்ணு ! சுடர்களில் நானே ஒளிவீசும் சூரியன் ! வாயுபுத்ரர்களில் மாருதி ! கிரகங்களில் நான் சந்திரன் !!

கீதை 10 : 22 வேதங்களில் நான் சாமவேதம் ! இந்திரலோக வாசிகளில் நான் இந்திரன் ! புலன்களில் நான் மனம் ! எல்லா உயிரினங்களிலும் நான் உணர்வுகளாக - இயல்பூக்கமாக இருக்கிறேன் !!

கீதை 10 : 23 ருத்திரர்களில் நான் சங்கரனாக இருக்கிறேன் ! யக்ஸரர்களிலும் ரக்ஸரர்களிலும் நான் குபேரன் ! வசுக்களில் அக்னி ! மலைகளில் நான் மேருமலை !!

கீதை 10 : 24 ஆசாரியர்களில் நான் பிரஹஷ்பதி ! போர்த்தளபதிகளில் நான் கார்த்திகேயன் ! நீர் நிலைகளில் நான் சமுத்திரம் !!

கீதை 10 : 25 மாகரிஷிகளில் நான் பிருஹு ! மந்திரங்களில் ஜீவனுள்ள ஓம் ! ( ஓரிறைவனையே துதிக்கிறோம் ) யாகங்களில் நான் மகாமந்திர ஜபம் ! ( சொடுக்கவும் மகாமந்திரம் ) அசையாப்பொருட்களில் நான் இமயமலை !!

கீதை 10 : 26 மரங்களில் நான் ஆலமரம் ! தேவதுதர்களில் ரிஷி அந்தஸ்து உள்ளவர்களில் நான் நாரதர் ! கந்தர்வர்களுள் நான் சித்ராரதா ! சுயஒழுங்கில் நான் கபிலமுணிவர் !

கீதை 10 : 27 குதிரைகளில் அமுதத்துடன் தோன்றிய உச்சைஸ்ரவா ! யானைகளில் நான் ஐராவதம் ! மனிதர்களில் நான் பேரரசன் !

கீதை 10 : 28 ஆயுதங்களில் நான் வஜ்ஜிராயுதம் ! பசுக்களில் சுரபி ! இனப்பெருக்கத்தில் நான் மன்மதன் ! சர்ப்பங்களில் நான் வாசுகி !

கீதை 10 : 29 நாகங்களில் நான் ஆதிசேஷன் ! கடல்வாழ்வனவுக்கு நான் வருணன் ! பித்ருக்களில் நான் அர்யமா !சட்டஒழுங்கை நிலை நாட்டுபவர்களில் நான் யமன் !

கீதை 10 : 30 தைத்திரியர்களுல் நான் பிரகலாதன் ! அடக்கத்தில் நான் காலம் ! விலங்குகளில் நான் சிங்கம் ! பறவைகளில் நான் கருடன் !

கீதை 10 : 31 தூய்மையாக்குபவைகளில் நான் பரிசுத்தஆவி ! ஆயுதம் தரித்தவர்களில் நான் ராமன் ! மீன்களில் நான் சுரா ! நதிகளில் நான் கங்கை !

கீதை 10 : 32 ஓ அர்ச்சுணா ! சகல படைப்புகளுக்கும் துவக்கமும் முடிவும் ஏன் திருப்புமுனையும் நானே என்பதை உணரக்கடவாய் ! விஞ்ஞானங்களில் நான் தன்னை உணரும் ஆத்ம ஞானம் ! தர்க்கவியலில் நான் உண்மையை கண்டடைதல் !

கீதை 10 : 33 எழுத்துகளில் நான் அகரம் ! அடுக்குத்தொடரில் நான் இரட்டைகிளவி ! அத்தோடு நில்லாது ஓடும் காலமும் நானே ! படைப்பாளிகளில் உயிரிணங்களை உருவாக்கும் பிரம்மனும் நானே !

கீதை 10 : 34 எல்லாவற்றையும் அழிக்கும் மரணமும் நானே ! உண்டாகப்போகிறவைகளுக்கு காரணகர்த்தாவும் நானே ! பெண்களுள் அழகு , ஐசுவரியம் , இனிய பேச்சு , நினைவு கூறல் , புத்தி , புத்திசாதுரியம் , அடக்கம் மற்றும் பொறுமையாகவும் நானே மிளிர்கிறேன் !

கீதை 10 : 35 கானம் இசைத்தலில் நான் ப்ரஹத்சாமம் என்னும் சாமவேதம் ! கவிதைகளில் நான் காயத்ரி ! மாதங்களில் நான் மார்கழி ! பருவத்தில் நான் மலர்கள் பூத்து குலுங்கும் வசந்த காலம் !

கீதை 10 : 36 வஞ்சகர்களுள் பித்தலாட்டமாகவும் ; திறமைகளில் நான் சாதனையாகவும் ; வெற்றியாளர்களின் வெற்றிவாகையாகவும் ; திருப்புமுனை செய்வோரின் தீர்மானிக்கும் மதினுட்பமாகவும் ; சாதுக்களின் சத்துவ குணமாகவும் நானே வெளிப்படுகிறேன் !

கீதை 10 : 37 விர்ஷினி குலத்தோன்றல்களில் நான் வாசுதேவன் ! பாண்டவர்களுள் நானே அர்ச்சுணன் ! மாமுணிவர்களில் நான் வியாசர் ! தத்துவவியலில் நான் சுக்ராச்சாரியார் !

கீதை 10 : 38  அடக்குமுறைகளில் நான் தண்டனை ! நியாயங்களில் நான் வெற்றி ! ரகசியங்களில் நான் மௌனம் !அறிஞர்களின் ஞானமாகவும் நானே விளங்குகிறேன் !

கீதை 10 : 39 மேலும் அர்ச்சுணா ! இருப்பவைகள் எவைகளோ அவைகளின் இனப்பெருக்க வித்தாகவும் நானே இருக்கிறேன் 1 என்னாலேயன்றி அசைவனவும் அசையாதவனவும்  நிலைப்பதில்லை !

கீதை 10 : 40 எதிரிகளை  வெல்வோனே ! எனது தெய்வீக வெளிப்பாடுகளுக்கு - விபூதிகளுக்கு எல்லையே இல்லை ! எனது முடிவற்ற மஹிமைகளில் கொஞ்சம் வெளிப்பாடுகளையே கூறியுள்ளேன் !

கீதை 10 : 41 எவைகள் சிறப்புள்ளவையோ ; அழகுள்ளவையோ ; மிளிர்பவையோ சக்திபடைத்தவையோ அவைகளெல்லாம் எனது தேஜசின் ஒரு மின்னலே என்பதை அறிவாய் !

கீதை 10 : 42 அனைத்துலகையும் எனது மஹிமையின் எந்த ஒரு அம்சம் தாங்கிக்கொண்டுள்ளதோ அதை நீ உணர்ந்துவிட்டாயானால் இவ்வளவு விரிவான விளக்கங்களும் உனக்கு அவசியமேயில்லை அர்ச்சுணா !