Tuesday, July 17, 2012

கீதையின் சிறப்பு




கீதை 18 : 64 சகல ஞானத்தின் நுட்பங்களையும் எனக்கு உற்ற நண்பனாக நீ இருப்பதால் உனக்கு உபதேசித்தேன் . அதனை சுருக்கமாக்கி மீண்டும் கூறுவேன் கேட்பாயாக

கீதை 18 : 65 எனக்கு பிரியமானவனே ! பொது வழக்கில் இறைவன் என அழைக்கப்படுபவர் மீதே மனதை நிலைநாட்டி பக்தி செழுத்துவாயாக . இறைவனை என்னை குருவாக வைத்து வணங்குவாயாக . இப்படி செய்வதால் பரமாத்மாவான என்னிடமே வந்து சேர்வாய் .

கீதை 18 : 66 செய்யவேண்டிய சகல தர்மங்களையும் கர்மங்களையும்சர்வ வல்லமையுள்ள ஏக அருவ இறைவனுக்கே ; எல்லாவற்றிக்கும் ஆதாரமான என் மூலமாக அர்ப்பணம் செய்வாயாக ; என் நாமத்தினால் அவரை சரணடைவாயாக . பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்போம் வருந்தாதே !

கீதை 18 : 67 உனக்கு கூறப்பட்ட இந்த ரகசியமான கீதா உபதேசத்தை தவம் இல்லாதவர்களால் புரிந்துகொள்ளமுடியாது . பக்தியில்லாதவனுக்கும் விருப்பமில்லாதவனுக்கும் என்னிடம் ஈடுபாடு இல்லாதவனுக்கும் சொல்ல வேண்டியதுமில்லை .

கீதை 18 : 68 எந்த மனிதன் என் மீது மாறாத குருபக்தி பூண்டு இந்த உயர்ந்த ரகசியமான கீதாசாஸ்திரத்தை என்னுடைய சீடர்களுக்கு
புரிய வைக்கிறானோ அவன் என்னுடனே ஒத்ததிர்ந்து இயைய தொடங்குகிறான் ; சந்தேகமேயில்லை

கீதை 18 : 69 அந்த பக்தனைக்காட்டிலும் எனக்கு பிரியமான காரியத்தை செய்யக்கூடியவன் மனிதர்களில் வேறு எவனுமில்லை. அப்படியே பூமியில் அவனைக்காட்டிலும் எனக்கு மிகபிரியமான வேறொருவன் இருக்கப்போவதில்லை

கீதை 18 : 70 எந்த மனிதன் நம் இருவருடைய உரையாடல் வடிவில் இறைநெறியாக உள்ள கீதா சாஸ்திரத்தை உள்ளார்ந்த பக்தியுடன் கற்க முனைகிறானோ ; அவன் ஞான வேள்வியினால் நம்மை மகிமைப்படுத்தியவன் ஆவான் என்பது என் அபிபிராயம்

கீதை 18 : 71 எந்த மனிதன் உணர்ந்துகொள்ள முடியாவிட்டாலும் ஆசையுடனும் சிரத்தையுடனும் கேட்கவாவது செய்கிறானோ ; அவனுக்கும் பாவங்களிலிருந்து விடுபட்டு புண்ணிய காரியங்கள் செய்யும் மனிதர்கள் செல்லக்கூடிய புண்ணிய லோகங்களை அடைந்து நற்பேறடையும் பிறவி அடைவான் .

கீதை 18 : 72 பார்த்தா ! இந்த கீதா சாஸ்திரம் ஆழ்ந்த அக்கறையோடு உன்னால் கேட்கப்பட்டதா ? அஞ்ஞானத்தினால் உண்டான உன் மயக்கம் நீங்கியதா ?

கீதை 18 : 73 அர்ஜுனன் கூறினார் : அச்சுதா ! உங்கள் அருளால் என் மயக்கம் நீங்கியது இப்போதோ சந்தேகம் நீங்கி தெளிவும் ஞானமும் அடைந்தேன் . நிச்சயமாக உங்கள் ஆணைப்படி நடப்பேன் .

கீதை 18 : 74 சஞ்சயன் திருதராஸ்ட்டரரிடம்  கூறினார் : இவ்வாறு அதிதேவர் கிறிஷ்ணருக்கும் மகாத்மாவான பாத்தனுக்கும் இடையே நடந்த இந்த அற்புதமான ஞானோ உபதேசத்தை கேட்டேன் .

கீதை 18 : 75 அரசே ! மேன்மையான கிறிஷ்ணருக்கும் அர்ஜுணனுக்கும்  இடையே நடந்த புண்ணியமிக்க அற்புதமான உரையாடலை கேட்டதை நினத்து மீண்டும் மீண்டும் புழகாங்கிதம் அடைகிறேன் 

கீதை 18 : 76 பாவங்கள் அனைத்தையும் போக்கி பரிசுத்தம் கொடுக்கும் சற்குரு கிறிஷ்ணரின் ஞானோ உபதேசத்தை உள்வாங்கியதால் பெரும் புண்ணியம் பெற்றேன் 

கீதை 18 : 77 அரசே ! இனி சொல்ல இருக்கிறது ? எங்கே யோகேஸ்வரணான சற்குரு கிறிஷ்னரும்  காண்டீபம் ஏந்திய அர்ஜுணனும் இருக்கிறார்களோ அங்கே வெற்றியும் ; நிலைத்த நீதியும் ; நீடிய சமாதானமும் ; மகாலஷ்மியின் ஐஸ்வர்யமும் இருக்கும் என்பதே என் முடிவு 

கீதையை உணர்ந்துகொள்வது என்பது முற்பிறவிகளில் ஆத்மாவில் விளைந்துள்ள ஞானம் என்ற அடிப்படை ஆனது .

ஆனால் ஆன்மீக சாதனையின் எந்த மார்க்கமானாலும் ; வேதங்களானாலும் கீதையின் வெளிச்சத்தில் ஆராயப்படுமானால் ஆழ்ந்த மறைபொருட்கள் அவிழ்க்கப்படும் ; வேதத்தின் நுட்பங்கள் வெளியரங்கமாகும்

சமரச வேதம் வெளியரங்கமாகும் இக்காலத்தில் ; கீதையும் பைபிளும் குரானும் ஒன்றை 
ஒன்று வெளிச்சப்படுத்துவதாகவும் மேன்மைப்படுத்துவதாகவும் ; இறைவனது வாக்கில் அசுர சக்திகளாலும் ; மனிதர்களாலும் கலக்கப்பட்ட இருள்களை அகற்றுவதாகவும் கோலோச்சுவதாகவும்  பலரும் உணர்வார்கள் 

வாழ்க கீதை 

அதிதேவர்கள் நாராயணன்நாமத்தாலும்; சிவனின் நாமத்தாலும் அல்லாஹ்    வின் பேரருள் ; ரட்சிப்பு ;     மேன்மை ஒளிரட்டும் 

உலகம் முழுவதும் சாந்தியும்     சமாதானமும்  உண்டாகட்டும் !

சத்திய   
யுகம் மலரட்டும் !

எல்லா புகழும் இறைவனுக்கே !

1 comment:

kirubarp said...

கீதையின் சிறப்பு