Wednesday, July 18, 2012

யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !!

(இங்கு க்ளிக் செய்து சுலோகங்களை கேட்டுக்கொண்டே வாசிக்கவும்)


தன்னை உணரும் ஆத்துமாவுக்கு மனமே சிறந்த நண்பனும் பகைஞனும் ஆகும் !!

கீதை 6:1 இறைதூதர் கிரிஸ்ணர் கூறினார் : பலன் விளைவில் பற்றற்றவனும் ; தன் மீது சுமரும் செயலுக்காக செயலை செய்கிறவனும் எவனோ அவனே மெய்யான யோகியும் வாழ்வை வேள்வியாக்கும் மெய்யான துறவியும் ஆவான் ! அப்படியில்லாமல் வேள்விக்கு தீ மூட்டுபவனும் செயலை தட்டிகழித்து சும்மா இருப்பவனும் ஒருபோதும் யோகியும் துறவியும் ஆகான் !!

கீதை 6:2 யோகங்களில் நிலைப்பவனும் தன்னை உண்ணதமானவரில் நிலைபெற செய்கிறவனும் மட்டுமே துறவில் நிலைத்தவனாவான் ! பாண்டுவின் மகனே ! புலன் இச்சைகளை திருப்திபடுத்த விளைவதை துறக்காதவன் ஒரு போதும் யோகத்தில் நிலைப்பதில்லை !!

கீதை 6:3 அஸ்ட்டாங்கம் எனப்படும் யோகத்தில் பயிற்சி செய்யும் புதியவர்களுக்கு ஜட செயல்பாடுகளை (சரியை &கிரியை) செய்வது ஒன்றே வழி முறையாகும் ! ஆனால் அதுவே யோக சாதனைகளில் முன்னேற்றமடைந்தவருக்கோ சரியை மற்றும் கிரியைகளை கடந்து விடுவதுவே வழிமுறையாகிறது !!

கீதை 6:4 லவ்கீக வாழ்வுக்கான அனைத்து இச்சைகளை துறந்தவரும் , புலன் இச்சைகளை திருப்தி செய்ய முயற்சிக்காதவரும் , பலன் விளைவுகளில் பற்றுகொண்டு பாடுபடாதவரும் யாரோ ; அவரே யோகத்தில் சாதனை செய்கிறவராவார் !!

கீதை 6:5 தனது மனத்தின் உதவி கொண்டு யோக சாதகன் தன்னைதானே விடுதலை ஆக்கிகொள்ளவேண்டுமே ஒழிய தன்னைதானே தரம்தாழ்த்திகொள்ளக்கூடாது ! தன்னை உணர்ந்து சீர்திருந்தும் ஆத்துமாவுக்கு அந்த மனமே சிறந்த நண்பனும் பகைஞனும் ஆகும் !!

கீதை 6:6 எவ்வாறெனில் யார் மனதை அடக்கி ஆள்பவனோ அவனுக்கு அந்த மனமே நண்பர்களுக்கெல்லாம் சிறந்த நண்பனாகும் ! மாறாக மனதிற்கு அடங்கியவனுக்கோ அந்த மனமே எதிரிகளை விட கேடு செய்வதாகும் !!

கீதை 6:7 யார் மனதை அடக்கி ஆள்பவனோ அவன் ஆத்துமசமநிலையை அடைகிறபடியால் அவனது ஆத்துமா (ஜீவாத்துமா) பரமாத்துமாவுடன் ஒத்திசைவை அடையும் ! அத்தகைய மனிதன் இன்பத்தையும் துன்பத்தையும் ; குளிரையும் வெப்பத்தையும் ; புகழையும் இழிவையும் ஒன்று போலவே கருதி இருமைகளை கடந்துவிடுவான் !!

கீதை 6:8 ஒரு மனிதன் முற்றறிவிலும் ; தன்னை உணர்வதிலும் முன்னேறி ஆத்துமதிருப்தி அடையும்போது அவன் பரிபூரணத்தை எட்டியவனாகவும் யோகியாகவும் பரிணாமம் அடைகிறான் ! அவன் சுய கட்டுப்பாட்டிலும் ஞானத்திலும் நிலைபெறுகிறான் ! அவன் சகலவற்றையும் --- பொன்னையும் மண்ணையும் ; கல்லையும் மாணிக்கத்தையும் ஒன்று போலவே பாவித்து இருமைகளை கடந்துவிடுவான் !!

கீதை 6:9 ஒரு மனிதன் அன்பால் நிறைந்த நலவிரும்பிகளையும் ; கீழ்படிதலுள்ள சீடர்களையும் ; தன்போக்கில் போபவர்களையும் ; நடுவில் நிற்பவர்களையும் ; சுற்றத்தாரையும் ; நண்பர்களையும் எதிரிகளையும் இறையச்சம் உள்ள சண்மார்க்கத்தினரையும் இறையச்சம் அற்ற துண்மார்க்கத்தினரையும் மனசமனிலையோடு பாவிப்பானானால் அவன் பரிபூரணத்தில் மென்மேலும் முன்னேறுகிறான் !!

கீதை 6:10 ஞானமார்க்கத்தான் என்பவன் உடலாலும் மனதாலும் உயிராலும் உண்ணதமான கடவுளோடு உறவில் திளைக்க வேண்டும் ! அவன் தனித்திருந்து விளித்திருந்து தனது மனதை அடக்கி ஆளவேண்டும் ! இச்சைகளிலிருந்தும் உடைமைகளை குறித்த பெறுமைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டே இருக்கவேண்டும் !!



இறைதூதர் கிரிஷ்ணரின் ``யோக சூத்திரங்கள் ``



கீதை 6:11 யோகத்தை அப்பியாசிக்க ஒருவர் தனித்த ஒரு இடத்தை தேர்ந்து கொள்ளவேண்டும் ! அங்கு ஒரு ஆசணத்தை அமைக்க தரையின் மீது தர்ப்பை புல்லை பரப்பவேண்டும் !அதன் மீது மான் தோலை விரித்து அதன் மீது மெல்லிய துணியால் மூட வேண்டும் ! இந்த ஆசணம் உயரமாகவோ தாழ்வாகவோ இருக்க கூடாது !முக்கியமாக அந்த இடத்தில் தூய்மையான சிந்தனைகள் மட்டுமே சிந்திக்கபட்டதால் தூய்மை நிறம்பியதாக மாற்றம் பெறவேண்டும் !

கீதை 6:12 அதன் மீது சாதகன் அமர்ந்து தன் மனத்தை ஒன்றின் மீது குவித்து அப்பியாசிப்பதால் மனதையும் ;புலன்களையும் ; செயல்களையும் கட்டுபடுத்த பயின்று அதன் மூலம் ``ஆத்துமசுத்தி`` பெறுவதால் பரிசுத்தம் அடையவேண்டும் !!

கீதை 6:13 உடலையும் கழுத்தையும் இதயத்தையும் நேர்கோட்டில் இறுத்தி நுனிமூக்கின் மீது மனதை குவிக்கவேண்டும் ! இவ்வாறாக அலையும் மனதை அடக்கி ; பயத்தை நீக்கி ; உடலுறவை தவிர்த்து உண்ணதமான கடவுளை மனதிற்குள் தியானித்து வரவேண்டும் ! கடவுளுடன் ஒத்திசைவதையே வாழ்வின் லட்சியமாக்கி கடவுளுக்குள் நிலைக்க பயிலவேண்டும் !!

கீதை 6:14 இவாறாக மனதையும் ;புலன்களையும் ; செயல்களையும் தொடர்ந்து கட்டுப்படித்தி பழக்குவதால் யோகசாதகனின் மனம் பரிசுத்தம் அடைந்து ஞானத்திற்குள் வளர்ந்து கடவுளின் பரலோக ராஜ்ஜியத்தின் தொடர்புக்கு உள்ளாகிறான் !!

கீதை 6:15 அதாவது கிரிஸ்ண குருகுலத்தின் பாதுகாப்பில் வளர்ந்து லவ்கீக உலகின் ஆளுமையை உடைத்து பரலோக ராஜ்ஜியத்தின் பிரஜை ஆகிறான் !!

கீதை 6:16 அத்தகைய சாதகன் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உண்ணலாகாது ! அதுபோல அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்கலாகாது ! அது அவனின் முன்னேற்றத்தை தடுத்து விடும் !!

கீதை 6:17 உணவு ,தூக்கம் , பொழுதுபோக்கு ,உழைப்பு இவற்றில் அளவுமுறையை கற்றுகொண்டு கடைபிடிப்பதால் உலக ஆளுமையை தடுத்து கொண்டு ஒருவன் யோகசாதனைகளில் எளிதில் முன்னேறமுடியும் !!

கீதை 6:18 யோகசாதகன் யோகத்தை அப்பியாசிக்கும் போது தனது மனதின் செயல்பாடுகளை நெறிப்படித்தி அடக்கி ஆள்வதால் உண்ணதமானவரோடு ஒத்திசைந்து லவ்கீக இச்சைகளிலிருந்து விடுபடுகிறான் ! பேரின்பசுவையை உணர்வதால் சிற்றின்ப தாகம் உடையபெறுகிறான் ! அப்படிப்பட்டவனே யோகத்தில் நிலைத்தவனாவன் !!

கீதை 6:19 காற்று வீசாத இடத்தில் விளக்கின் பிளம்பு ஆடாமல் இருப்பதுபோல ; மனம் கட்டுபட்ட சாதகன் தனது தியானத்திலேயே மூழ்கி தன்னிலும் உண்ணதமானவரிலும் நிலைக்கிறான் ! அவனே ஞானம் விளைவிக்க பெற்றவனாகிறான் !!

கீதை 6:20 யோகத்தை அப்பியாசிப்பதால் மெய்ஞானம் எனப்படும் முற்றுணர்வை அடைந்த நிலையில் சாமாதி நிலை சித்திக்கிறது ! அந்த நிலையில் உடல் மற்றும் மனதின் செயல்பாடுகள் அனைத்தையும் கடந்து ஆத்துமா உண்ணதமானவரோடு அய்க்கியம் அடையும் !

கீதை 6:21 முற்றுணர்தல் என்ற நிலையில் ஒருவன் தூய்மையடைந்த மனதால் தன்னை ஆத்துமசொருபமாய் தெளிந்து ஆத்துமபரிபூரணத்தை உனர்ந்து தன்னில்தானே நிறைந்துள்ள ஆனந்தத்தை கண்டடைவான் ! அந்த ஆனந்த பெருநிலையில் மட்டுமே ஒருவன் ஞானேந்திரியங்கள் விளிக்க பெற்று உண்ணதமான கடவுளின் எல்லையில்லா பேரானந்தத்தை உணர்ந்து அதில் திளைக்க முடியும் !!

கீதை 6:22 இன்னிலையை எய்தியவன் ஒருபோதும் தெய்வீக பேரானந்தத்தை விட்டு விலகி செல்லான் !ஏனெனில் இதை விட பெரிய வெறு எதுவும் எங்கும் இல்லை என்பதை அறிவான் !!

கீதை 6:23 இந்த நிலையில் அவன் எதனாலும் அசைக்கபடுவதில்லை ! மாபெரும் துண்பத்தின் மத்தியிலும் அவன் கலங்காதிருப்பான் ! இந்த லவ்கீக உலகிலிருந்து எழும்பும் அனைத்து துயறங்களிலிருந்தும் உண்மையான விடுதலை அடையும் வழி இதுவே !!

கீதை 6:24 யோக அப்பியாசத்தில் ஒருவன் உறுதியாகவும் நம்பிக்கையாகவும் ஈடுபடவேண்டும் ;ஒருபோதும் வழிவிலகி செல்லலாகாது ! மன மயக்கங்களால் எழும்பும் எல்லா இச்சைகளையும் கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் அகற்றிவிட வேண்டும் ! எல்லா புலன்களையும் எல்லா வகையிலும் அடங்கிய மனதால் அடக்கி நெறிபடுத்த வேண்டும் !!


கீதை 6:25 கொஞ்சம் கொஞ்சமாக ; படி படியாக முன்னேறி சுய அறிவை ஒடுக்கி உண்ணதமான ஞானத்தில் நிலைவரப்பட வேண்டும் இவ்வாறாக மனமானது ஆத்துமாவில் ஒடுங்கி அதற்குள் நிலைக்க வேண்டும் ; வேறெதையும் மனம் நாடலாகாது !!

கீதை 6:26 நிலையில்லாமல் எதைப்பற்றியாவது ஓயாது சிந்திக்கும் இயல்பால் மனமானது அலைபாயும் போது ; ஒருவன் அதை மீண்டும் இழுத்து ஆத்துமாவுக்குள் ஒடுக்க வேண்டும் !

கீதை 6:27 என் மூலமாக மனதை உண்ணதமான கடவுளில் நிலைபெற செய்கிற யோகியானவன் எளிதில் மிக உயர்ந்த முற்றுணர்வை அடைந்து பேரானந்தத்தில் திளைப்பான் ! அவன் ஸ்தூல உடம்பால் விளையும் மூவகை குணங்களிலிருந்தும் விடுபட்டு ;                                               பரமாத்துமாவின்                     இயல்போடு             தொடர்புடைய                       தனது ஜீவாத்துமாவை கண்டறிவான் ! இவ்வாறாக தன் மேல் வந்த பரம்பரை பாவங்கள் மற்றும் கடந்தகால பாவங்களின் பதில் விளைவுகளிருந்து தப்புவான் !!

கீதை 6:28 இவ்வாறாக தன்னை தானே கட்டுபடுத்துவதில் வெற்றியடைந்த யோகி ;இடையறாத சகஜயோக பயிற்சியால் லவ்கீக உலகின் அனைத்து சீரழிவுகளிலிருந்தும் தப்புவான் ! உண்ணதமான கடவுளின் பரிபூரண பேரானந்தத்தில் திளைத்து பொங்கி வழியும் அன்பால் பக்தி தொண்டாற்றுவான் !!

கீதை 6:29 உண்மையான யோகி எல்லா மனிதர்களிலும் கடவுளின் ஆவியையும் பரமாத்துமாவையும் உணர்வான் !அத்தோடு அவர்களனைவரும் கடவுளின் சொரூபங்கள் என்பதையும் அறிவான் ! மேலும் தன்னை உணர்ந்த மனிதன் என் மூலமாக எங்கெங்கும் எல்லாவிடத்தும் உண்ணதமான கடவுளையே உணர்வான் !!

கீதை 6:30 யார் எங்கும் கடவுளை உணர்கிறானோ ; யார் அனைத்தையும் கடவுளின் பகுதியாய் உணர்கிறானோ ; அவன் என்னை விட்டு விலகுவதுமில்லை ; நான் அவனை கைவிடுவதுமில்லை ! என் குருகுலத்திற்குள் எப்போதும் வாசம் செய்வான் !!

கீதை 6:31 அப்படிப்பட்ட யோகியானவன் கடவுளுக்கு பக்தி தொண்டாகவே அனைத்தையும் செய்து வரும் நிலையில் குருவாகிய என் மூலமாகவே கடவுளை தொடர்பு கொள்ளுவதால் எப்போதும் எந்த சூழ்னிலையிலும் என்னிலும் கடவுளிலும் நிலைத்திருப்பான் !!

கீதை 6:32 அந்த முற்றறிவு நிறம்பிய ஞானியானவன் ; தன்னைபோலவே பிறறையும் பாவிப்பான் ! அவர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் ; நிறையையும் குறையையும் தனதாகவே பாவித்து பொறுமையும் பிரார்த்தனையும் செய்வான் ! ஆறுதலும் செய்வான் !!



யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ?

கீதை 6:33 அர்ச்சுணன் கேட்கிறான் : மதுசூதனா ! தாங்கள் உபதேசிக்கும் யோகமுறைகள் நடைமுறைக்கு சாத்தியமானதாகவும் ; ஒத்துவருவதாகவும் எனக்கு தெறியவில்லை ! ஏனென்றால் மனமானது நிலைத்துநில்லாமல் ஓய்வின்றி அலைவதாயிருக்கிறது !!

கீதை 6:34 மனமோ ஓய்வற்றதும் ; குழப்பமே தொழிலானதும் ; அடங்காததும் ; தினவெடுத்ததும் ஆயிற்றே ! கிருஷ்ணா ! அதனை அடக்குவதை விட காற்றை அடக்குவது எளிதானதாக இருக்கும் !!

கீதை 6:35 இறைதூதர் கிருஷ்ணர் கூறினார் : வலிமையான ஆயுதங்கள் கைவரப்பெற்ற குந்தியின் மகனே ! ஓய்வற்ற மனதை அமர்த்தி வைப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதில் சந்தேகம் இல்லை !ஆனாலும் பற்றுகளை களைவதாலும் ; தகுந்த பயிற்சியினாலும் அது சாத்தியமே அர்ச்சுணா !!

கீதை 6:36 ஒடுக்கப்படாது திமிறும் மனதை உடையவன் தன்னை உணர்வது இயலாத காரியமாகிவிடும் ! ஆனாலும் யார் மனதுடன் இடைவிடாது போராடியவாறு கடவுளை நோக்கிய பாதையில் முயற்சி செய்து கொண்டே இருக்கிறானோ அவன் வெற்றியடைவது நிச்சயம் ! இதுவே எனது முடிந்த முடிவு !!

கீதை 6:37 அர்ச்சுணன் கேட்கிறான் : கிருஷ்ணா ! வெற்றியடையாது தேங்கும் யோகசாதகனின் முடிவு என்னவாகும் ? துவக்கத்தில் தன்னை உணர்கிற பாதையில் நம்பிக்கையோடு போராடி முன்னேறி பின்னாளில் உலகியல் மாய்மாலங்களின் கவர்சிக்குள் மூழ்கி யோகசாதனைகளில் முழுமையடையாமல் போபவர்களின் கதி என்ன ?

கீதை 6:38 கிருஷ்ணா !உண்ணதமான யோகத்தை அப்பியாசித்து தடுமாற்றம் அடைந்தவன் , ஆன்மீக சாதனைகளிலும் வெற்றியடையாமல் ; உலக வாழ்விலும் வெற்றியடையாமல் இரண்டுங்கெட்டானாய் அவப்பேரடைய மாட்டானா ? சிதறுண்ட மேகம் போல பூமியில் காணாமல் போய் விடமாட்டானா ?

கீதை 6:39 இதுவே என் பெருத்த சந்தேகம் கிருஷ்ணா ! முற்றிலுமாக இதை விளக்கியருளும் படி வேண்டுகிறேன் ! இந்த சந்தேகத்தை இப்போது பூமியில் உங்களைத்தவிர வேறு யாராலும் தீர்த்து வைக்க முடியாது !!

கீதை 6:40 இறைதூதர் கிருஷ்ணர் கூறினார் : பிரதாவின் மகனே ! யோக சாதகன் நற்செயல்களுக்கான பயிற்சியில் இருப்பதால் ஒருபோதும் உலக வாழ்வியலிலோ ; ஆன்மீக சாதனைகளிலோ அழிவுறான் ! நண்பனே ! நன்மையை தீமையால் வெல்லவே முடியாது !!

கீதை 6:41 யோக அப்பியாசத்தில் தடுமாற்றம் அடைந்து தேங்கிய சாதகன் ஒருவன் நல்லோர்களுக்குள்ளும் செல்வசெழிப்பிலும் மீண்டும் மீண்டும் பிறந்து நிறைவை அடைகிறான் ! தேக்கத்தை பல பிறவிகளில் கடறுகிறான் !!

கீதை 6:42 மீண்டும் மீண்டும் முதிர்வடைந்து ஞானத்திலும் யோகத்திலும் தேறிய பிறவி எடுக்கிறான் ! அப்படிப்பட்ட பிறவி அபூர்வமாகவே இவ்வுலகில் நடைபெறுகிறது !!

கீதை 6:43 அந்த பிறவியில் இதற்கு முந்தய பிறவியில் எட்டிய தேவஞானத்தை அவன் உணர்ந்து வெளிப்படுத்தி ;மேலும்மேலும் முயன்று முழுமையை எய்துகிறான் !

கீதை 6:44 முந்தய பிறவியின் தேவஞானத்தாலேயே அவன் யோகமார்க்கங்களில் யாரும் ஊக்குவிக்காமலேயே ஈர்க்கப்பட்டு சாதனைகள் கைவரப்பெருகிறான் ! இத்தகைய இறைதேடல் உள்விளைந்த யோகசாதகன் சாஸ்த்திர சம்பிரதாயங்களில் கைதேர்ந்தவர்களைக்காட்டிலும் எப்போதும் உயர்ந்த தரத்தை வெளிப்படுத்துகிறான் !!

கீதை 6:45 அத்தகைய யோகி மென்மேலும் வளர்வதற்கு உள்ளார்ந்த தேடல் உள்ளவனாததால் பலபல பிறவிகளின் பயிற்சிகளின் பலனால் எல்லாவகையான மாயைகள் ; இருள்கள் ; பாவங்களிலிருந்தும் விடுபட்டு நிறைஞானத்தை எய்தி உன்னதமானவரை அடைகிறான் !!

கீதை 6:46 பலனில் பற்றுவைத்து செயல்படுபவர் ; உலகியல் தர்க்கஞானம் உள்ளவர் ; தவம் புரிபவர் எல்லோரையும் விட யோகவானே சிறந்தவன் ! ஆகவே அர்ச்சுனா ! எல்லா சூழ்நிலைகளிலும் யோகம் புரிபவனாக நீ ஆகிவிடு !!

கீதை 6:47 பல படித்தரங்களில் உள்ள யோகிகளுள் யார் ஆழ்ந்த பக்தியுடன் கடவுளுக்கு கீழ்படிபவனோ ; கடவுளுக்குள்ளாகவே மூழ்கியிருப்பவனோ ; எதை செய்தாலும் கடவுளுக்கு பக்திதொண்டாகவே செய்து வருபவனோ ; அவனே உள்ளார்ந்து கடவுளுக்குள் நிலைத்த யோகவானும் யோகிகளுக்கெல்லாம் சிறந்த யோகியுமாவான் ! இதுவே எனது முடிந்த முடிவாகும் அர்ச்சுணா !!