Tuesday, July 17, 2012

கீதை 18 : பக்குவ யோகம்




ஆடியோவை கேட்டுக்கொண்டே வாசிக்கலாம்

கீதை 18 : 1 அர்ச்சுனர் கேட்டார் : வலிமையான புயங்களை உடையவரே ; புலன்களை ஆள்பவரே ; மாயாவியான கேசியை கொன்றவரே . துறவறத்தின் உட்பொருளையும் பல்வேறு தியாகங்களின் நுட்பங்களையும் உணர்ந்துகொள்ள விரும்புகிறேன்

கீதை 18 : 2 யுகபுருஷன் கிரிஷ்ணர் கூறினார் ; ஆசைகளின் வேட்கைகளால் உந்தப்படும் செயல்களை செய்யாதிருத்தல் சந்நியாசம் என்பர் சான்றோர் . மேலும் அனுபவசாலிகள் தங்கள் செயல்கள் அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டு அதன் பலன்களில் அக்கறை அற்று இருந்துவிடுகிறார்களே அதுவே தியாகம் எனப்படும்

கீதை 18 : 3 கர்மங்கள் அனைத்தையும் தோஷமாக கருதி தியாகம் செய்வதை துறவறம் என சிலரும் ; இருப்பினும் அதில் யாகம் தானம் மற்றும் யோகாப்பிசியங்கள் மட்டும் கைவிடலாகாது என்று சிலரும் கூறுகின்றனர்

கீதை 18 : 4 உண்மையில் மிகச்சிறந்த ஆத்மாக்களையும் யாகம் தானம் மற்றும் யோகாப்பிசியங்கள் மென்மேலும் தூய்மைப்படுத்துகின்றன. யாகம் தானம் மற்றும் யோகாப்பிசியங்கள் மட்டும் அல்ல கர்மங்கள் எவையுமே துறக்கப்படலாகாது .

கீதை 18 : 5 கர்மங்கள் அனைத்துமே கடமையாக கருதப்பட்டு செய்யப்படவேண்டும் . அவற்றின் பலன் விளைவுகளில் பற்றுதலை துறந்து விடவேண்டும் என்பதே எனது முடிவான அபிப்ராயம் .

அர்ச்சுனர் துறவறம் பற்றிய சந்தேகங்களை இங்கு கேட்கத்தொடங்குகிறார் . ரிஷிகேசவ் என்ற வார்த்தையால் அவர் ஸ்ரீகிரிஷ்ணரை விளிக்கிறார்

ரிஷி என்றால் ஆள்கிறவர் கேசம் என்றால் புலன்கள் . மனிதனை இச்சைகளில் வேட்கை அடையச்செய்து வாட்டிவதைக்கும் புலன்களை அடக்கி ஆளும் வல்லமை உள்ளவராம் ஸ்ரீகிரிஷ்ணர்

அடியேனுக்கும் ரிஷிகேஷ் செல்லும் ஒரு வாய்ப்பு கிடைத்தது . அங்கு தூய்மையான கங்கையை கடந்து அனேக ஆசிரமங்கள் சாந்தம் தழுவி நிற்கின்றன . அனேக சாதுக்கள் வயதானவர்கள் துறவறமாக கூட்டம் கூட்டமாக வாழ்கிறார்கள் . ஆசிரம ஒழுங்குகளின் படியாக அவர்களின் வாழ்க்கை பிரார்த்தனையோடும் சேவையோடும் சென்றுகொண்டிருக்கிறது . கடமைகள் அனைத்தும் முடிந்துவிட்டால் இப்படி நாமும் கூட இருந்துவிடலாமே என ஏக்கமாக இருந்தது

எப்படியோ இந்தோ மங்கோலிய இனமான திராவிடர்களுக்கு ரிஷிகேஷ் என்பது துறவற வாழ்க்கைக்கு பன்னெடுங்காலமாக பயன்பட்டு வந்துள்ளது

ஆனால் எது துறவறம் என்பதைக்குறித்து பரமாத்மாவுக்கும் பக்குவம் பெற்ற ஆத்மாவான அர்ச்சுனருக்கும் இங்கு விசாரம் தொடங்குகிறது . பாருங்கள் அர்ச்சுனர் அப்போதுதான் 12 வருட வனவாசமும் 1 வருட அஞ்ஞாதவாசமும் முடித்துவிட்டு வந்திருக்கிறார் . இந்த நிலையிலேயே அவருக்கு அனேக மனைவிகள் அருளப்பட்டு அந்த குடும்பங்கள் அனைத்தும் பிள்ளை குட்டிகளோடு செவ்வனே ஓடிக்கொண்டுதான் இருந்தன

முந்தய பிறவியில் ராமரோ மனைவியோடு வனவாசம் செய்தார் என்றால் அவர்களைக்காக்க தன் இளம் மனைவியை பிரிந்து இலக்குமணன் வனவாசம் செய்தாரல்லவா அதன் பரிசாக இப்பிறவியில் பல மனைவிகளும் குடும்பங்களும் அருளப்பட்டன . பெரிய குடுமி ; ஆனாலும் வனவாசம் . இறைவன் நாடினால் துறவறத்திலும் இல்லறமும் இல்லறத்திலும் துறவறமும் நடக்கும் . இங்கு நான் துறவறம் என்பதை உலக வழக்கத்தின் படியாக வனவாசம் என்பதைப்போல குறித்துள்ளேன் . ஆனால் உண்மையான துறவறம் என்பது வேறு . அது உலகத்தின் பார்வையின் படியாக அல்ல என்பதை அனுபவத்தால் அர்ச்சுனரும் கொஞ்சம் புரிந்துவைத்திருந்ததாலேயே இக்கேள்வியை எழுப்பி அது சரிதானா என்பதை தெளிவு பெற விரும்பினார்

ஸ்ரீகிரிஷ்ணரும் ரெண்டே ரெண்டு சூத்திரங்களை எளிதாக முன்வைத்து பதில் சொன்னார் . உலகத்தில் நாம் சரீரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் . அதில் உள்ள ஐம்புலன்களும் தங்களால் அனுபவிக்க முடியுமான இச்சைகளை ஆங்காங்கே சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்திக்கொண்டேதான் இருக்கும் . அது வெறும் இந்திரியம் . நல்லது கெட்டது நியாய அநியாயம் சமுக நியதி ஒழுங்கு கடவுளின் நியதி ஆத்மசுத்தி பற்றியெல்லாம் அந்த இந்திரியங்கள் கவலைப்படவேண்டிய அவசியமில்லை

அந்த இந்திரியங்கள் மூலமாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஆத்மா மட்டுமே அவைகளை சமப்படுத்தி ஆண்டுகொள்ள வேண்டும் . நிர்வகிக்க வேண்டும் . ரிஷிகேஷவனாக இருக்க வேண்டிய ஆத்மா உடல் இச்சித்துவிட்டது சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமைகிறது என்பதற்காக புலன்களின் பின்னால் ஓடலாகாது அனுபவிப்போம் என்று கிளம்பிவிடலாகாது . அதை அனுபவித்துவிட முடியுமென்றாலும் எதற்காக ஆத்மாவில் இன்னும் இன்னும் வாசனைகளை பதிவுகளை கூட்டுக்கொண்டே செல்லவேண்டும் ?

நமது இன்ப நுகர்ச்சிகள் அனைத்தும் பதிவுகளாக சம்ஸ்காரங்களாக ஆத்மாவில் குவிந்துகொண்டே இருக்கும் வரை ஆத்மசுத்தி என்பதோ ஆத்மா கடைத்தேறுவதோ சாத்தியமே இல்லாத ஒன்று . உடல் இச்சித்துவிட்டது ஆத்மாவும் ஆசைப்பட்டு அல்லாடுகிறது என்றிருக்கும் வரை பிறவிகள் நீள்வதை தவிர்க்கவே முடியாது

இச்சைகள் எழுந்தாலும் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வாய்த்தாலும் அதை அனுபவிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது முடிந்தளவு அதை அவசியமற்றதாக மாற்றிக்கொள்வோம் என பயிற்சி செய்துகொண்டே வருவதுதான் புலன்களை சமப்படுத்துவது .

அப்படியே தொடரும்போது ஒருபிறவியில் அந்த இச்சையால் இயல்பாகவே பாதிப்பு இல்லாத ஒரு நிலையை ஆத்மா அடையும் . அதுவே முக்தி . அந்தப்பதிவுகள் தூய்மை அடையும்போது இயல்பாகவே ஆத்மா அதனை கடந்து விடுகிறது ஒவ்வொரு ஆசையாக நாம் கடரும் போதும் நம் ஆத்மாவில் ஒரு முக்தி விளைந்துவிடும் எதுவும் இயல்பாக உள்ளே விளைந்து நாம் பக்குவப்படும்வரை அளவு முறையோடு அனுபவித்தே கடரமுடியும்

இருக்கிற இடத்திலேயே இருக்கிற சரீரத்திலேயே ரிஷிகேஷவனாக நாம் முயலவேண்டும் . எல்லாவற்றையும் விட்டுவிட்டு வம்பாக ரிஷிகேஷில் போய் உட்கார்ந்துகொள்வதால் ஆத்மாவுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை . அப்படி வம்பாக ஒரு ஆசிரமத்தில் இளம் துறவியாக இருப்பவர்கள் பலர் மீண்டும் அடுத்த பிறவியில் இல்லறவாசிகளாகவே வாழ்கிறார்கள் . இல்லறத்தில் துறவறம் என்ற மனசமநிலையை கற்று ஒவ்வொன்றும் அவசியமில்லாமல் போகும்போது மட்டுமே சித்தியை நாம் நெருங்கமுடியும்

பல முக்திக்கு பின்பே ஆத்மா முழுமை என்ற சித்தியை அடைகிறது . அதுவரை அது பூமியில் பிறந்துதான் ஆகவேண்டும்

இந்திரியங்களின் வேட்கைக்காக செயல்படாத வாழ்வே துறவு . ஒவ்வொன்றாக துறக்கவேண்டும் .

வாழ்வில் நம் மீது சுமரும் கடமைகள் அனைத்தையும் கடமைக்காக கடமை கர்மத்திற்காக கர்மம் செயலுக்காக செயல் என முடிந்தளவு நேர்த்தியாக செய்துவிட்டு அதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு என்ன பலன் என சிந்திக்காது இருக்கவேண்டும் . சோர்வோ சலிப்போ அலட்டலோ இருக்காது சமப்படவேண்டும்
நாம் சலிப்பதெல்லாம் நம் உள்ளிருக்கும் கடவுள் வெறுப்பு என்ற குணத்தின் பின்னணி. நம் ஆதிதகப்பன் சிவன் ஆரம்பத்தில் தவறு செய்து சபிக்கப்பட்டு ; சபிக்கப்பட்ட இந்த பூமிக்கு அனுப்பப்பட்டார் . அதன் பிறகு அவரும் படாதபாடுகள் பட்டே சித்தியடைந்து வைரவனாகி ருத்ரனாக பரலோகில் நுழைந்தார்

பரலோகத்திலிருந்து சஞ்சலம் நிறைந்த பூமிக்கு துரத்திவிடப்பட்டதன் வெறுப்பு கடவுள் வெறுப்பு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆழமாக மறைந்துகிடைக்கிறது . அது சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சலிப்பாக வெளிப்படுகிறது . என்ன நடந்தாலும் எதை செய்தாலும் இறைவனிடமே வேண்டி இறைவனிடமே ஒப்புபித்துவிட்டு நிம்மதியாக இருக்கும் மனநிலையை அருளும்படி நாம்தான் மன்றாடிக்கொள்ளவேண்டும் . இல்லாவிட்டால் இறைவா இறைவா என சொல்லிக்கொண்டே இறைவனுடன் மனஸ்தாபம் என்ற கலங்கத்திலேயே நாம் வாழவேண்டியதுதான்

இந்தப்பாவத்திலிருந்து தப்பவேண்டுமானால் அனுபவசாலிகள் தங்கள் கர்மங்கள் யாவற்றையும் செய்துவிட்டு அதை உடனடியாக அர்ப்பணம் செய்துவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார்களாம் . அப்படிப்பட்ட கர்மயோகிகளை எந்தப்பாவமும் பற்றுவதில்லை . இந்த உபதேசம் நடந்துகொண்டிருக்கும் போதே அப்படிப்பட்ட நபராக பீஷ்மர் எதிரிலேயே இருந்தார் . அவர் மரணிக்கும் முன்பு அவரிடம் உபதேசமும் ஆசிர்வாதமும் பெற்றுக்கொள்ளும்படியாக பாண்டவர்களை கிரிஷ்ணர் அழைத்துசென்றார் . அப்போது அவர் விஷ்ணு சகஸ்ரநாமம் உபதேசித்தார் . ஆயிரம் நாமங்களின் மூலமாக பரமாத்மாவின் ஆயிரம் குணாதிசயங்களை சித்தரித்து அனைத்தையும் இறைவன் பரமாத்மா மூலமாக பரமாத்மாவிற்குள்ளேயே செய்கிறார் நாம் கருவி மட்டுமே பரமாத்மாவில் நின்று நிலைக்கிற ஒரு ஜீவாத்மா ஆகவே நாம் கடமையை செய்தோம் என அவனிடம் ஒப்படைத்துவிட்டால் எந்தக்கர்மமும் நம்மை பற்றாது என்பதே அந்த உபதேசத்தின் சாரம்

இப்படி பலன் விளைவுகளில் பற்றை துறந்து சகலத்தையும் இறைவனுக்கு அர்ப்பனித்தாலே தியாகமாகும் .

தியாகம் என்பதைவிட புத்திசாலித்தனம் என்றே சொல்லவேண்டும் . ஏனென்றால் எந்த புண்ணியங்களும் எனக்கில்லை என மறுத்துவிட்டால் நிச்சயமாக பாவங்களும் என்னை பற்றாது . எந்த நற்செயலுக்கும் ஆன புகழ்சியை நான் அர்ப்பனித்துவிட்டால் எந்த அவமானங்களாலும் நான் கூனி குறுகாத மனநிலையை அவரே தந்துவிடுவார் . நிஸ்காமியகர்மம் என்கிறார்களே அது பெரும் பாதுகாப்பான கோட்டை

இந்தப்பூமியில் நாம் இருக்கும் வரை எதை இறைவனின் சித்தப்படியாக செய்தோம் அல்லது சுயத்திலே செய்து பாவத்தை வளர்த்துக்கொண்டோம் என்று குழம்பாதபடி நாமே செய்தாலும் அதை இறைவனுக்கு அர்ப்பனித்துவிடுவது மிக உத்தமம் அவர் நம்மை தீமைகளின் பக்கம் செல்லாதபடி தடுத்துக்கொள்வார் .

சிலர் பல பிறவிகளாக வளர்ந்து பக்குவம் அடைந்து இறைவனின் கருவிகளாக அடிமைகளாக மாறி தங்களை இறைவனுக்கு அர்ப்பணித்த சமயங்களில் அவர்களை இறைவன் தனது இறைதூதராக மகா குருவினர்களாக பயன்படுத்தியுமுள்ளார்

முழுமை அடையும் நேரம் ராஜயோகம் சித்திக்கும் என்பார்கள் ராஜாவைப்போல பொன்னும் பொருளும் புகழ் பாடும் சீடர்கள் கூட்டமுமாக இருக்கும் . ஆனால் அவைகளால் மயக்கமுறாத முழுசரணாகதி அடைந்த அடியவர்களுக்கே அத்தகைய ராஜயோகம் சித்திக்கும் .

அப்படியிருக்க இந்த தியாகம் என்ற வார்த்தை இங்கு ஏன் வந்தது என்றால் அந்தக்காலத்திலும் சரி இப்போதும் சரி சிலர் இறைத்தொண்டு செய்ய வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு சந்நியாசி ஆனதாக சொல்லிக்கொண்டுள்ளனர் . அது தியாகமே அல்ல மடாதிபதிகள் தங்கள் மடங்களை காக்க சந்நியாசம் மேற்கொள்கிறார்களே தவிர அந்த சந்நியாசத்தால் அவர் முழுமை அடையமுடியாது . மீண்டும் அவர் அடுத்த பிறவியில் கிரகஸ்தன் ஆகியே தீரும்

ஆகவே தியாகம் என்ற வார்த்தையை உலக வார்த்தையாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள் . அதிலும் அடுத்த சுலோகத்தில் அவர்களின் அறியாமை கண்டிக்கப்படுகிறது

அவர்கள் சொல்கிறார்களாம் தாங்கள் சந்நியாசிகள் என்று எந்த செயலையும் தள்ளிவைத்து விடுகிறார்களாம் . தங்கள் மடத்தின் பேரால் அவர்கள் கடும் விரதங்களை கடைப்பிடித்து பொதுமக்களை விட உயர்வானவர்களாக காட்டிக்கொள்ளும் நிலைக்கு ஆளாகிறார்கள் ; அதில் சிலரோ இருப்பினும் யாகம் தானம் மற்றும் யோகாப்பிசியங்கள் மட்டும் கைவிடலாகாது என்று விதிவிலக்கு உள்ளதாக அறிவித்து அவைகளை மட்டும் செய்கிறார்களாம் .

யுகபுருஷனோ எதையும் கைவிடலாகாது என்கிறார் . அன்றாட வாழ்வில் நம் மனநிலையில்தான் அர்ப்பணமும் துறவும் அடங்கியிருக்கிறது . பூசாரிகள் மடாதிபதிகள் தங்கள் உடலை தீட்டில்லாமல் காக்கிறோம் என்று ஒதுக்கிவைத்துக்கொள்வதால் எந்த பரிசுத்தமும் வந்துவிடாது . அவர்கள் தங்களை பரிசுத்தமாக காத்துக்கொள்கிறோம் என்ற பெயரில் மாபெரும் தீண்டாமை கொடுமைகள் வரை போய் பெரும் பாவத்தை சம்பாதித்துக்கொண்டார்கள்

ஆகவே உடலால் பரிசுத்தம் வரவே வராது ; அது மனதில் வரவேண்டியது . கோவிலுக்குள் நுழையும் போது ஒரு உடல் சுத்தம் போதுமானது அதற்கு குர்ஆனில் சுட்டப்பட்ட வழி உள்ளது . கைகால் அலம்பி முகத்தை கழுவி தண்ணீரை தலையில் தடவிக்கொண்டால் போதுமானது . நாம் கர்ப்பகிரகம் வரை தாரளமாக செல்லலாம் . கடவுளை தூய்மையாக காப்பாற்ற யாரையும் தொடாமல் இருக்கிறேன் என்ற அஞ்ஞானத்தை கடைபிடித்து மனிதர்களை அவமதிக்கலாகாது .

அடுத்து எவ்வளவு உயர்ந்த ஆத்மாவாக இருந்தாலும் யாகம் தானம் மற்றும் யோகாப்பிசியங்கள் பிரார்த்தனை என்று பயிற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும்

ஆன்மீகவாழ்வில் உள்ளோர் பலர் இறைவனைப்பற்றி பேசுவதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும் அளவு தியானம் பிரார்த்தனை செய்வதற்கு நேரம் ஒதுக்குவதில்லை . அது பெரும் பின்னடைவை உண்டாக்கி விடுகிறது . டயருக்கு அவ்வப்போது காற்றை நிரப்புவதுபோல அப்பியாசங்கள் நம் ஆன்மாவில் ஆன்ம பலத்தை நிரப்புபவை . அதிலும் கூட்டு பிரார்த்தனை மிகவும் உன்னதமானது .

வீட்டிலே தனித்து தியானம் செய்வதைக்காட்டிலும் பலர் பிராத்தனை செய்கின்ற கோவிலில் அமர்ந்து தியானம் செய்யுங்கள் என்பதை சமரசவேதம் வலியுறுத்துகிறது

நீங்கள் எங்கும் எந்தக்கோவிலுக்கும் போங்கள் அங்குள்ள மூர்த்தம் ஒரு குருவைப்போன்றதே . இந்த பூமியிலுள்ள எந்த கோவிலும் ஆவாகானப்படுத்தப்பட்டிருப்பவை நான்கு அதிதேவர்களுக்கு கீழான தேவர்களே . எந்த மார்க்கங்களும் நான்கு அதிதேவர்களுக்கு கீழான குருகுலங்களே .

அங்குள்ள மூர்த்தங்கள் ஆகம விதிகளாலும் பூஜை புனஸ்காரங்களாலும் கும்பத்தின் மூலமாக பரவெளியோடும் ஏக இறைவனோடும் தொடர்பு படுத்தப்பட்டுள்ளன .

ஆகவே அந்த மூர்த்தங்களை குருவாக வைத்து கடவுளை தியானித்து கடவுளிடம் வேண்டுங்கள் மார்க்கபேதங்கள் எதுவும் கிடையாது அன்றாடம் ஒரு கோவிலில் ஏக இறைவனை தியானித்து கலியுக முடிவை துரிதப்படுத்துங்கள் எதையும் ஒதுக்காதிருங்கள் எல்லாமும் இறைவனால் அருளப்பட்டவையே . மனிதர்களே அவற்றில் கலியுகத்தின் நிமித்தம் பேதத்தை கலந்துகொண்டார்கள் .

மேலும் ஸ்ரீகிரிஷ்ணர் அர்ப்பணங்கள் மூன்று வகையாக வியாக்கியானப்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கிறார் . அவற்றை அடுத்து காண்போம்

கீதை 18 : 6 பரதவர்களில் சிறந்தோனே ; தியாகத்தின் உன்னத இலக்கு எதுவாக இருக்கவேண்டும் என்பதை இப்போது என்னிடமிருந்து கற்றுக்கொள் . மனிதர்களில் புலியைப்போன்றவனே ; தியாகங்கள் மூன்று வகையாக அப்பியாசப்படுகின்றன

கீதை 18 : 7 நம் மேல் சுமரும் கடமைகளை என்றுமே துறக்கலாகாது . தகுதியுடைய செயல்களை தடுமாற்றத்தால் ஒருவன் துறந்தால் அந்த துறவு தமோ குணத்தால் செய்யப்படுபவை ஆகும் .

நாம் அருள்பணியில் இருப்பதால் சில காரியங்களை செய்யலாமா செய்யக்கூடாதா என தடுமாற்றம் அடைந்து தீட்டு என விலகி செல்லலாகாது . விபத்தில் உதவுவது வியாதியஸ்தர்களை கைதூக்கி விடுவது போன்ற காலத்தால் செய்யும் உதவிகளை பலர் புறக்கணிக்கின்றனர் இதை தமோகுணம் என்கிறார் யுகபுருஷன் கிரிஷ்ணர் . அவரது அடுத்த இயேசு அவதாரத்திலும் பூசாரிகளின் இந்த போக்கை கடுமையாக கண்டித்துள்ளார்

லூக்கா
10 25. அப்பொழுது உபன்யாசகன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.

26. அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.

27. அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கடவுளிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழுஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்வாயாக, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் அடுத்தனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.

28. அவர் அவனை நேரக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.

29. அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் அடுத்தவன் யார் என்று கேட்டான்.

30. இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.

31. அப்பொழுது தற்செயலாய் ஒரு சன்னியாசி அந்த வழியே வந்து, அவனைக்கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.

32. அந்தப்படியே ஒரு பூசாரியும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.

33. பின்பு சமான்யன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,

34. கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.

35. மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.

36. இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் அடுத்தவனாயிருந்தான் ? உனக்கு எப்படித்தோன்றுகிறது என்றார்.

37. அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ்செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார்.

பரிசுத்தம் கடவுளை காப்பாற்ற பரிசுத்தம் என்ற பெயரில் மனிதர்களை தீண்டாமல் இருக்கிறோம் என்று மனித சம்பிரதாயமாக சிலர் ஆரம்பித்து அதன் பலனை எவ்வளவு கேவலப்பட வேண்டுமோ அவ்வளவு கேவலப்பட்டார்கள் . கர்ப்பகிரகத்தில் நுழையும்போது மட்டும் கைகால் கழுவி தண்ணீரை தெளித்துக்கொண்டால் போதுமானது . மனிதர்களை தொடமாட்டோம் என்பதெல்லாம் இறைவனுக்கு விரோதமானது . தமோகுண வகைப்பட்ட துறவு என்ற அலட்டல் ஆகும் .

கீதை 18 : 8 துயரம் நிறைந்தவை என்பதாலோ உடலுக்கு அசெளகரியம் விளைவிக்கும் என்பதாலோ சுமரும் கடமைகளை துறப்பவன் ரஜோ குணத்தால் துறந்தவனாவான் . இது துறவின் பலனை கொடுக்காது

இன்னும் சிலர் வாழ்வின் பிரச்சினைகளை ஓரங்கட்டுவதற்காக ஏதாவது ஒரு மடத்தில் பிரம்மச்சாரியாகி விடுகிறார்கள் . தாங்கள் சந்நியாசி ஆகிவிட்டதால் உற்றார் உறவிணர் பெற்றோர் பராமரிப்பு என்ற கடமையிலிருந்து விதிவிலக்கு பெற்றுக்கொண்டதாக தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள் . இது ரஜோகுணமாகும்

கீதை 18 : 9 ஓ அர்ச்சுனா தன் மேல் சுமரும் கடமைக்காக கடமை செய்து விட்டு எவனொருவன் அதனை மறந்துவிடுகிரானோ அதன் பலன் விளைவுகளை கடவுளுக்கு அர்ப்பணித்துவிடுகிரானோ அவனது துறவு சத்வகுணத்தால் செய்யப்படுபவை ஆகும் .

ஆன்மீக வட்டாரத்தில் பரவலாக உள்ள ஒரு குறை -ஞானப்பெருமை செய்த செயல்களை விளம்பரப்படுத்திக்கொள்வது . சத்சங்கம் என்ற பெயரால் சீடர்கள் எனக்கு இது தெரியும் அது தெரியும் என்று புளகாங்கிதமாக பேசி பொழுதை போக்குவதை கூட்டங்கள் பயிற்சி வகுப்புகளில் காணமுடிகிறது . இப்படி ஞானசம்பாசனை செய்துகொண்டிருப்பதும் ஒரு வேண்டாத சுயமாகத்தான் வளர்ந்ந்துகொண்டே இருக்கும்

ஆனால் செய்த செயல்களையும் அவற்றின் விளைவுகளையும் அடுத்த கணமே கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டு மறந்துவிடுகிறவனே சிறந்த பக்தன் யோகி . அவைகளை மறக்காவிட்டால் அவற்றைப்பற்றிய எண்ணம் சுயபெருமையாக வளர்ந்து அலட்டல் வந்துவிடும் .

யாராவது நம்மைப்பற்றி பேசினால் கூட யாரோ அடுத்தவரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் போல இருப்பதும் ஒரு யோகமாகும் . எப்போதும் எதையும் கற்றுக்கொள்கிற கிரகிக்கிற மனநிலையோடு இருக்கவேண்டும்

கீதை 18 : 10 சத்வ குணத்தில் நிலைத்திருக்கும் யோகிகள் அமங்களமான செயல்களுக்கு விலகி ஓடுவதில்லை ; மங்களமான செயல்களுக்கு விரும்பி மகிழ்வதுமில்லை ; சந்தேகப்பட்டு தங்களை ஒதுக்கிக்கொள்வதுமில்லை .

கீதை 18 : 11 ஸ்துல சரீரத்தில் இருப்பவன் எல்லா செயல்களையும் துறப்பது நிச்சயம் சாத்தியம் அல்ல . ஆனால் செயலின் பலன்விளைவுகளை யாரேனும் முற்றிலும் அர்ப்பணித்தால் அவனே உண்மையான துறவி ஆவான் .

இங்கு ஒரு முக்கியமான விபரம் சுட்டப்படுகிறது . யார் நற்காரியங்களையும் புண்ணியங்களையும் இறைவன் நம்மை கருவியாக வைத்து செய்துகொண்டார் என்ற மனநிலையோடு இருக்கிறார்களோ அதுவே அர்ப்பணத்தின் இன்னொரு அம்சம் . அததகைய மனநிலையில் உள்ளவன் ஏதாவது அறியாமையால் பாவங்கள் செய்தாலும் அதுவும் அவனைப்பொருத்த அளவில் இறைவனுக்கு அர்ப்பணம் செய்யப்படும் ; அதை இறைவன் சீர்செய்வார் என்பதாகும் . உலக வாழ்வில் பாவங்களை குறைக்கவே சமப்படுத்தவே பிறவி நீள்கிறது . அப்படியாயின் இப்பிறவியில் வரும் துன்பங்கள் சோதனைகள் கர்மங்களை குறைக்க ஒரே வழி சுமரும் கடமைகள் அனைத்தையும் இறைவன் மீது பாரத்தைப்போட்டு அவருக்காக அவரின் ஏவுதலால் செய்வதாக செய்து அர்ப்பணித்து விட்டு நான் செய்தேன் என்பதை மறந்துவிடுவதாகும் . அவனை பாவங்கள் பற்றாது .

கீதை 18 : 12 இவ்வாறு அர்ப்பணம் செய்யாதவர்கள் பாவங்கள் ; புண்ணியங்கள் இவ்விரண்டும் கலந்தவை என மூன்று வகையான பதிவுகளை ஆத்மாவில் சுமந்தவர்களாக மரணிக்கிறார்கள் . ஆனால் அர்ப்பணித்தவர்களையோ அவை பற்றுவதில்லை .

ஆக துறவு என்பது உலக வாழ்வில் இருந்துகொண்டே மனதால் செயல்கள் அனைத்தையும் கடவுளுக்காக என்று செய்து ஒப்புவித்து விடுவதாகும் என்கிறார் ஸ்ரீகிரிஷ்ணர் .
இறைசித்தம் இல்லாமல் எதுவும் நடவாது :

கீதை 18 : 13 பலம் பொருந்திய புயங்களை உடையவனே ! சாங்கிய யோகத்தில் செயல்கள் முடிவு பெற ஐந்து காரணிகள் அவசியம் என கூறப்பட்டுள்ளதே அதன் விளக்கத்தை இப்போது கேட்பாயாக

மனித வாழ்வில் நம் மேல் சுமரும் செயல்கள் , கடமைகள் அவற்றை நாம் முடித்தாகவேண்டும் என்ற நெருக்கடிக்குள்ளாக்குகின்றன . ஒருவகையில் பொறுப்பற்றவனாக இல்லாமல் செயல்களை நிறைவு செய்வதற்கு அக்கறை கொள்வது பாராட்டத்தக்கதே . ஏனெனில் சுயநலமிகளும் தன் தேவை நிறைவடைந்தால் போதும் என்று இருக்கும் தமோ குணத்தினரும் தம்மை சார்ந்தோர் மனைவி மக்கள் உறவினர் மீதும் பொறுப்பற்று இருப்பதை அங்கீகரிக்க இயலாது . ஆனாலும் அக்கறை கொள்ளும் நற்குணமே உணர்வு வயப்பட்டு நம்மை நாமே நெருக்கடிக்குள்ளாகும் ரஜோகுணமாக துன்பம் தரலாகாது

மிகமிக வயாதாகி துவண்டு போனவர்களும் வாழ்வில் அற்ப காரணங்களுக்காக நொந்துபோன உள்ளத்தோடு இருப்பதை ஆங்காங்கு காணமுடிகிறது . அது ஏதென்றால் பேரனுக்கு அப்படி இப்படி என்ற கவலை அதற்கு பெற்றோர்கள் பொறுப்பாக இருக்கும் போது இறைவனிடம் பிரார்த்தித்து விட்டு தம் ஆத்மலாபத்திற்கு நேரத்தை ஒதுக்குவோம் என்று எத்தனை பேர் இருக்கிறார்கள்

நாம் இறைவனைத்தேடும்போது பிரார்த்தனை தியானம் சிறு தொண்டு கோவிலில் செய்யும் போது அது வாரீசுகளுக்கு எவ்வளவு அருள்பலத்தை அனுகூலத்தை கொண்டுவரும் என்பதை நிறையப்பேர் உணர்வதில்லை

எதோ இவர்கள் கவலைப்படாவிட்டால் எல்லா காரியமும் கெட்டு குடிமுழுகிவிடும் என்பதுபோலவே பலர் இருக்கிறார்கள்

லூக்கா 12 (இயேசுவின் உபதேசம்)
25. ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?

26. ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

27. கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?

28. உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;

29. என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.

30. அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?

31. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.

32. இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

33. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

34. ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.

கீதை 18 : 14 செயல் புரியும் இடம் ; செய்பவன் ; வெவ்வேறு விதமான கருவிகள் அல்லது புலன்கள் ; பலதரப்பட்ட முயற்சிகள் ; எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனின் சித்தம் என்ற ஐந்தும் செயல்கள் நடக்க காரணிகளாகும்

இடம் ; பொருள் ; ஏவல் ;முயற்சி ; இறைசித்தம் இவ்வைந்தும் இல்லாமல் காரியசித்தி கைகூடாது

புறத்தில் இடம் என்பது அகத்தில் நம் சரீரமாகும் . புறத்தில் பொருள் என்பது அகத்தில் நம் ஆத்மாவாகும் . புறத்திலே கருவிகள் என்பது அகத்திலே நமது புலன்களாகும் இத்தோடு பலதரப்பட்ட முயற்சிகளும் இறைசித்தமும் இல்லாமல் எக்காரியமும் நிறைவடையாது

அப்படியாயின் ஒரு காரியம் நிறைவடைவது நமது கரத்தில் மட்டும் இல்லை . பொறுப்புதாரி நாம் என்றாலும் முடிவு இறைவனின் சித்தத்தை பொறுத்து அமைகிறது

இந்த ஐந்தில் நான்கு நாம் நமது உடல் ; ஆத்மா ; புலன்கள் ; முயற்சி ஒரு தட்டு என்றால் அடுத்த தட்டு இறைவன் . நாம் இறைவனை வேண்டாது அவரிடம் ஒப்புவிக்காது நமது அக்கறை பாதிக்கிணறு தாண்டாது . இறைவனின் கிருபை இல்லாமல் எதுவும் நடவாது என்ற தெளிவில்லாத ஆத்மாக்கள் தாங்கள் செய்ததை அப்படி செய்தேன் இப்படி செய்தேன் என பெருமை பேசுவதுபோலவே தங்களால் ஆகாத காரியத்தை ஜீரணிக்க முடியாமல் நொந்துபோன உள்ளத்தோடு கடைசி நாட்களை கடத்துகிறார்கள்

ஆனால் மாபெரும் காரிய சித்தியாளர்களும் இறைசித்தத்தால் இவை நடந்தது என்ற உணர்வால் அலட்டாமலேயே இருந்துகொள்கிறார்கள் ; அவர்கள் நிறைவேறாத எவற்றுக்காகவும் கவலைப்படுவதுமில்லை ; ஏங்குவதுமில்லை

கீதை 18 : 15 மனிதன் தன்னுடைய உடல் ; மனம் ; வாக்கால் நல்லதோ கெட்டதோ எந்தவொரு காரியம் செய்தாலும் அதற்கு இவ்வைந்தும் காரணமாம்

கீதை 18 : 16 இவ்வாறாக கூட இருந்து காரியம் செய்கிறவனாக மட்டுமே தன்னை உணராதவன் முட்டாள் . அவன் இறைவனைக்குறித்த அறிவின்மையாலேயே அப்படி உணர்கிறான் .

கீதை 18 : 17 எவனுடைய இயல்பு அகங்காரமின்றி இருக்கிறதோ ; எவனுடைய புத்தி உலகப்பற்று இல்லாமல் இருக்கிறதோ அவன் பூமியில் கொலை செய்யவே நேர்ந்தாலும் பாவம் அவனை பற்றாது .

ஸ்ரீகிரிஷ்ணர் பூமிக்குரிய வாழ்வில் ஒரு மனிதன் கெட்டது செய்யாமல் இருக்கவே முடியாது என்பதாகவே பேசுகிறார் . ஏனெனில் ஒரு காரியம் அந்த இடத்தில் உள்ள அனைத்து ஆத்மாக்களின் பாவபுண்ணியங்களின் ஒட்டு மொத்த காரணத்தால் நடக்கிறது . அங்கு ஒரு ஆத்மாவுக்கு முற்பிறவி பலனாக ஒரு கெடுதல் நடந்தாக வேண்டுமானால் இருக்கிற நம்மைக்கொண்டு அது இறைவனால் செய்யப்படலாம் . ஆகவே கைப்பிசகாக பல நடந்துகொண்டே இருக்கும் . அந்த தவறுகளைக்குறித்து இறைவனிடம் வருந்தி பிரார்தித்துக்கொள்ள மட்டுமே நமக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது . நம்மால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்திக்கமட்டுமே பிராயச்சித்தமாக உள்ளது . ஆனால் மனித முயற்சியால் நம்மை உத்தமனாக ஆக்கிக்கொள்ள முடியாது ; உத்தமானாகவும் கருதக்கூடாது எப்போதும் இறைவனிடம் தாழ்ந்த மனநிலை ஒன்றே நம்மை கடைத்தேற்றும் .

நாம் செய்த நன்மைகளையும் இறைவனுக்கே ஒப்புவித்துவிட்டு அதைக்குறித்து பெருமைப்படாத ஒருவரால் மட்டுமே நாம் செய்த தீமைகளையும் இறைவனுக்கே ஒப்புவித்துவிட்டு அந்த பாவத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் .

செய்த நன்மைகளுக்காக பாராட்டுதல்கள் குவியும்போதும் அதை இறைவனே நம்மை கருவியாக வைத்து செய்துகொண்டார் என்று சுயபெருமைப்படாத ஒருவராலேயே அவர் கைப்பிசகாக கொலை செய்யநேர்ந்தாலும் அல்லது இறைவனின் சித்தப்படியாகவே மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு நபரை கொல்ல நேர்ந்தாலும் அதன் பாவத்தால் பீடிக்கப்படாது இறைவனிடம் ஒப்புவிக்க முடியும்

இந்த உபதேசம் நடந்து கொண்டிருக்கும்போதே அப்படிப்பட்ட நபர்களாகவே அந்த குருஷேத்திர யுத்த களத்தில் இருந்தார்கள் . துவாபர யுக முடிவு நெருங்கிவிட்டது அந்த யுகத்தின் மனிதர்கள் நல்லவர்களும் கெட்டவர்களும் அழிவை சந்தித்தாகவேண்டும் என்பது இறை சித்தமாகவே இருந்தது . பாரதப்போரில் பல லட்சக்கணக்கான மனிதர்கள் போரில் கலந்துகொள்ள அங்குவந்து குவிந்திருந்தனர் .

பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் ஆன யுத்தத்தில் ஏன் இந்தியாவின் அனைத்து மன்னர்களும் பங்கெடுக்கவேண்டும் . ஆளாளுக்கு ஒரு காரணம் பகை பலி தீர்க்க அங்கு கூடினார்கள் .

பாண்டிய மன்னன் ஒருவனே இருவருக்கும் உணவளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு யுத்தத்தில் சண்டை இடாது இருந்தான் . ஏனென்றால் முதல் யுகத்தின் முதல் மனிதன் தமிழன் . அவனே உலகில் சமாதானத்தை கொண்டுவரும் வரலாற்று தகுதி படைத்தவன் என்பதை உணர்த்தவே இறைவன் அவனுக்கு உணவளிக்கும் பொறுப்பை ஒப்படைத்து மற்ற மன்னர்கள் அனைவரும் அவனது சேனைகளும் யுத்தத்தில் சாகும்படி வைத்தார்

பாண்டவர்கள் தர்மவான்களாக இருந்தாலும் அவர்கள் பக்கமிருந்த பலரும் தங்கள் கர்மத்தால் சாவுக்கு நியமிக்கப்பட்டவர்களாகவே இருந்தனர் . அவர்களை யுத்தத்திற்காக யுத்தம் செய்த கர்மயோகிகளான பீஷ்மர் துரோணர் போன்றோர் கொன்று குவித்தனர் . அவர்களும் வீரமரணத்தை பரிசாக ஏற்றனர்

அது இறைசித்தம் இதுவென உணர்ந்து யுத்தத்திற்காக யுத்தம் செய்த கர்மயோகிகளின் நிலை

யுத்தம் தொடங்குமுன்பு தங்களின் ஆசி நாடி நின்ற பாண்டவர்களைப்பார்த்து யுத்தத்திற்காக யுத்தம் செய் ஈவு இறக்கம் பார்க்காதே நாங்கள் பார்க்கமாட்டோம் அசந்தால் உங்களை கொன்றுவிட தயங்கமாட்டோம் ஆனாலும் தர்மம் உங்கள்பக்கம் இருப்பதால் நீங்கள் வெற்றி பெற ஆசிர்வதிக்கிறோம் என்றுதான் இருவரும் சொன்னார்கள் . அதுவே தெளிந்த ஞானமுள்ளோரின் நிலை அவர்கள் செய்த கொலைகளால் அவர்களை பாவங்கள் பற்றாது என்பதே இங்கு ஸ்ரீகிரிஷ்ணரின் தெளிவு ஆகும்
கர்மத்தின் செயல் கூறுகள்

கீதை 18 : 18 அறிவு ; அறியப்படுவது ; அறிபவன் இம்முன்றும் சேர்ந்தால் அங்கு கர்மம் விளைய தூண்டுதல் உண்டாகிறது . அத்தூண்டுதல் பெற்றவன் அச்செயலுக்கு கர்த்தா ஆகிறான் . அவனது கரணங்கள் (மனம் , புத்தி , புலன்கள்) மூலமாக கர்மம் விளைகிறது

கர்மம் விளையும்போது யானை அர்ரமாகவும் குதிரை குர்ரமுமாக வெளிவருகிறது . ஒரு சாலை போட 1 கோடி ரூபாய் அரசு ஒதுக்கினால் அது நிர்வாகம் கமிசன் ஒப்பந்தகாரர் லாபம் என விரையமானது போக 5௦ லட்சம் ரூபாய்க்கே ரோடு போடப்படும் . இப்படி எங்கெங்கும் திட்டம் ஒன்று செயல் ஒன்றாகவே செயல் வெளிப்படும் . இந்த விரையம் எவ்வளவு சதவீதம் குறைக்கப்படுகிறதோ அவ்வளவு அது நல்ல அரசாக அமையும் . விரையம் தவிர்க்கப்படமுடியாத ஒன்று . கர்மயோகிகள் விரையத்தின் சதவீதத்தை குறைப்பார்களே தவிர நடைமுறை சாராத வறட்டு சித்தாந்திகளாக வெட்டி வேதாந்தம் பேசிக்கொண்டு தாமும் செயல்படாமல் அடுத்தவரையும் செயல்படவிடாமல் முட்டுக்கட்டைகளாக இருக்கமாட்டார்கள்

நடைமுறை வேதாந்தம் ; வெட்டி வேதாந்தம் என இரண்டு எப்போதுமே இருக்கிறது . எதுவுமே விரையத்துடன் வெளிவரும் நெகிழ்வுத்தன்மை செயலில் மட்டுமல்ல திட்டமிடுதலிலும் இருக்கிறது

ஸ்ரீகிரிஷ்ணர் கர்மம் யாருக்கு தூண்டப்படுகிறதோ அந்த கர்த்தாவுக்கே நெகிழ்வு இருக்கிறது என்கிறார்

கர்த்தாவுக்கு ஏற்கனவே என்ன அறிவு இருக்கிறதோ அதற்கு ஏற்பவே அறியப்படுவதை அறிந்துகொள்கிறான்

அறியப்படுவது உண்மையில் யானையாக இருக்கலாம் . ஆனால் அறிகிற குருடன் யானையை தடவிப்பார்த்த இடம் காலாக தூணாக இருக்கிறது . அவனைப்பொருத்த அளவில் அது ஒரு தூண் மட்டுமே

விஞ்ஞானம் என்கிறோமே அதுவே ஒட்டு மொத்த சமுதாயம் அனுபவத்தின் மூலமாக ஏற்கனவே அறிந்துகொண்ட அறிவின் அடிப்படையானது . இந்த அறிவு நாளும் அதே விசயத்தில் முன்னேறிக்கொண்டிருகிறது . அறிகிறவர்களின் அறிவுதான் முன்னேறியதே தவிர அறியப்பட்ட பொருள் ஆதியிலிருந்து அப்படியேதான் இருக்கிறது .

நடைமுறை வேதாந்திகள் நம் அறிவே குறைபாடுகளாக இருந்து வளர்ந்து விரிவதை அனுபவித்து உணர்ந்தவர்களானதால் மற்றவர்களிடம் புரிதல் குறைபாடு இருக்கும் என்பதில் நெகிழ்வோடு இருப்பார்கள்

என் வார்த்தை பிரயோகத்தில் நெகிழ்வு என்பது சரியான வார்த்தையாக இல்லாமல் இருக்கலாம் . புரிந்துகொள்ள முயற்சியுங்கள்

நெகிழ்வோடு இருப்பது என்பதில் சமாதான சாத்வீகம் இருக்கிறது . தன் குறையையும் பிறர் குறையையும் அங்கீகரிப்பதாக அது இருக்கும் . சத்யாகிரகம் என்ற ஒன்றை இயேசுவின் சீடர் ஜானாக இருந்து காந்தியாக வந்தவர் கண்டுபிடித்தாரே அதன் ரகசியமும் இதுதான் . அஹிம்சை என்பது தன் குறையையும் பிறர் குறையையும் அங்கீகரித்தல் . அவனால் மட்டுமே ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை திருப்பி காட்ட முடியும்

அப்படியானால் சத்யாகிரகம் என்பது என்னவென்றால் தன் குறையையும் பிறர் குறையையும் களைய முயற்சிப்பதே ஒழிய அந்த மனிதர்களை அழிப்பதல்ல

மனிதர்களை அழிக்காமல் மனிதர்களை தாக்காமல் அவர்களின் குறைகளை மட்டும் களைய முயற்சித்தல் . அதற்கு அவன் தன் அன்பால் சாத்வீகத்தால் எதிர்ப்பை வேள்வியை விளைய வைக்கிறான்

காந்தி நாம் வெள்ளையர்களை வெறுக்கவில்லை ; அவர்களின் ஆதிக்க குணத்தை சுரண்டலை ஒடுக்குதலை மட்டுமே எதிர்க்கிறோம் ; அதற்கு ஒத்துழைக்காமல் இருக்கும் போராட்டத்தின் மூலமாக நம் சுதேசியத்தை நாமே உற்பவித்துக்கொள்கிறோம் என்றார் . இந்தியர்களின் சுதேசியம் வளர்ந்தபோது வெள்ளைக்காரர்கள் தாங்கள் நினைப்பது செயல்படாமல் போவதை உணர்ந்து இங்கிருப்பது வீண் வேலை என அவர்களாக கிளம்பிவிடும்படி நேர்ந்தது

எங்கும் சுதந்திரபோராட்டக்காரர்கள் வெள்ளையர்களை வெறுக்கவில்லை ; மனிதர்களை தாக்கவில்லை அவர்களின் ஆதிக்கத்திற்கு ஒத்துழைக்கவில்லை என பலமுறை நிரூபித்தார்கள்

வெள்ளைகாரர்கள் நாட்டிலிருந்த மனிதாபிமானிகள் நல்லவர்களின் ஆதரவை இங்கிருந்து பெற்றார்கள் . வின்ஸ்ட்டன் சர்ச்சில் போன்ற கடுமையான ஆட்சியாளர்கள் இருக்கும்போதே காந்திக்கு பிரிட்டன் பொதுமக்களின் ஆதரவும் அன்பும் அதிகரித்து மகாத்மா என போற்றத்தொடங்கினார்கள் . கிறிஸ்துவின் போதனைகளான அன்பையும் அஹிம்சையையும் வாயிலே பிரசங்கித்துக்கொண்டும் கேட்டுக்கொண்டிருக்கும் இருந்த வெள்ளைக்காரர்கள் ; கிறிஸ்தவன் இல்லாத இந்து ஒருவன் அதை செயல்படுத்தி காட்டிக்கொண்டிருப்பதை உணர்ந்தபோது அப்படியே அவருக்கு அபிமானிகள் ஆனார்கள் . காந்தி இங்கிலாந்து சென்றபோது பெருந்திரளான மக்கள் அவரைக்காண வந்ததையும் மதிப்பளித்ததையும் கண்டு ஆட்சியாளர்கள் பணிந்தார்கள்

இயேசுவின் போதனைகள் ஏற்கனவே எழுத்தாகவும் வாக்கியங்களாகவும் ஐரோப்பாவில் இருந்ததுதான் . ஆனால் அதை ஞானமாக அடைந்து கடைபிடித்தவர்கள் அங்கில்லை . அதாவது அறிந்தோர் அங்கில்லை ; ஆனால் காந்தி தென் ஆப்ரிக்காவுக்கு வேலைக்கு சென்ற போது அதை அறிந்தார் .உணர்ந்தார் சத்யாகிரகத்தை அமுல்படுத்தி அங்கே வெற்றியும் பெற்றார்

கீதையில் கிரிஷ்ணர் இந்த சுலோகத்தில் இந்த உண்மையைத்தான் வெளிப்படுத்துகிறார் . அறியப்படுவது எதுவோ அதை அறிகிறவன் தன் தரத்திற்கு ஏற்றாற்போல் அறிந்துகொள்கிறான் . அதுமட்டுமல்ல அதைக்குரித்து அறிவைத்தருகிறவரான இறைவன் வெளிப்படுத்தாமல் அவனால் அதை உணர்ந்துகொள்ள முடியாது . இன்னும் சரியாக சொன்னால் இறைவனால் உணர்த்துவிக்கப்பட்டாலும் அதை அறிகிறவன் அதில் கொஞ்சம் குறைவாகவே உணர்ந்துகொள்கிறான் . எங்கும் முழுமை கிடையாது . மின்சாரத்தில் கடத்தி இழப்பு ஒன்று இருப்பதுபோல ஒருவரை விட்டு ஒருவருக்கு செய்தி மாறும்போது அது குறைவாகவே மாறுகிறது

சரி கர்த்தாவுக்கு செய்தி வந்துவிட்டது தான் அறிந்துகொண்டதையாவது அவரால் முழுமையாக செயல்படுத்த முடியுமாவென்றால் அவன் மனதில் எண்ணியதை எண்ணியவாறு அவனது புலன்கள் செயல்படுத்தாது . அதிலும் குறைபாடு உண்டாகும் , அச்செயலுக்கு அவனோடு இயங்கவேண்டிய நபர்கள் ஆளாளுக்கு அவர்கள் தரப்பில் உலட்டியது போக வெளியே வருவது கொஞ்சமாகத்தான் இருக்கும்

இது மனித வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாது . எங்கெங்கும் இறைவனின் பலம் கிடைக்காமால் பெரிதாக ஒன்றையும் சாதிக்க முடியாது

ராஜராஜ சோழன் பேரரசை நிறுவ கனவு கண்டான ; பிரயாசையும் பட்டான் , கூட இருந்து பாடுபட்ட மகன் ராஜேந்திர சோழன் காலத்தில் கடாரம் வரை அப்பேரரசு விரிந்தது அப்புறம் பேரனால் அதை தக்க வைக்கமுடியவில்லை . அப்படியே சோழ ராஜ்ஜியமே காணாமல் போய் விட்டது . இதற்கா இவ்வளவு பிரயாசை

தக்க வைத்துக்கொள்ள முடியாத ஒன்றுக்காக வாழ்நாளெல்லாம் படை நடத்தி போரிட்டதால் ஆத்மாவுக்கு என்ன பலன் ?

இறைவனை சார்ந்துகொண்டு மனச்சம நிலை பேணிக்கொள்வது ; வாழ்நாள் கடமைகளை பிராதித்துக்கொண்டே கடந்து செல்வது ; சாந்தமாக இருப்பது மேன்மையானது . இன்ப துன்பத்தால் அலசடி படாமல் நிதானமாக இருப்பது ஆன்மீகம் சார்ந்த வாழ்வாகும் ; அவர்கள் உலக வாழ்வில் குறைபாடில்லாமல் நிறைவை இறைவனிடம் பெறுவார்கள்

இந்த நிறைவுக்கு அடிப்படை காரணம் : குறைபாடுகள் எங்கெங்கு உண்டாவதையும் அங்கீகரித்து அவற்றை கடந்து எது கிடைக்கிறதோ அது இறைவனின் கிருபையால் கிடைத்தது என்ற நம்பிக்கை ஆகும் . என் கடன் பணி செய்து கிடப்பதே என உழைப்பையும் குறைப்பதில்லை பிரார்த்தனையும் குறைப்பதில்லை . கிடைப்பதில் சலிப்படைவதுமில்லை

முடிந்தளவு கர்மத்தை யோகமாக செய்துவிடுகிறார்கள்

செயலில் செயலின்மையையும் ; செயலின்மையில் செயலையும் விளைய வைக்கிரவனே யோகி என்கிறார் யுகபுருஷன் ஸ்ரீகிரிஷ்ணர் .

நான் செய்கிறேன் என்பவனால் கர்ம யோகம் விளையாது . இறைவன் கருவியாக என்னைக்கொண்டு காரியம் நடத்திக்கொண்டிருக்கிறார் என்பவனால் மட்டுமே இந்த யோகம் விளையும் .

ஆகவே பலன் விளைவுகளில் அவன் தவதாயப்படுவதில்லை .
திரித்துவமும் திரியேகத்துவமும்

இறைவன் படைப்புகள் எதுவும் மூன்று பிரகிருதிகள் ஒன்றாக இயங்குவதாகவே இருக்கிறது திரித்துவம் என்பார்கள்

கீழான நிலையில் உள்ளவைகள் மூன்றும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இயங்கும்

பிரிந்துவிட்டாலோ இயங்காது முடங்கிவிடும்

ஆனால் மேலான நிலையை எட்டியவர்களோ மூன்றும் தனித்தனியே பிரிந்தும் தனித்து இயங்குவதாகவும் மூவரும் இணைந்து ஒருவராகவும் இயங்க முடியும்

மூவர் ஆனால் இணைந்து ஒருவர்

இதை திரியேகத்துவம் என்பார்கள்

ஆன்ம வாழ்வில் குறிப்பிட்ட தரத்தை நீங்கள் அடைய திரித்துவம் திரியேகத்துவம் என்பதை உணரவேண்டும்

மனிதன் = ஆவி + ஆத்மா + அழியக்கூடிய ஸ்தூல சரீரம்

தேவர் = ஆவி + ஆத்மா + அழிவில்லாத ஒளிசரீரம்

இது திரித்துவத்தின் உதாரணம் என்றால்

திரியேகத்துவத்தின் உதாரணம் முகுந்தன்

அதாவது மூவர் ஒருவராக இருப்பது

ஆதிசேஷன் + விஷ்ணு + நாராயணி இம்மூவரும் தனித்தனியே இயங்குவார்கள்

மூவரும் ஒன்றாக நாராயணன் என்பவராகவும் இருப்பார்கள்

இந்த திரியேகத்துவமாக அறிவு ஞானம் புத்தி குணங்கள் கர்மங்கள் கர்மங்களை செய்கிறவர்களும் இருக்கிறார்களாம்

இதை நான் சொல்லவில்லை

கீதை 18 : 19 சுலோகத்தில் யுகபுருஷன் கிரிஷ்ணர் சொல்கிறார்

திரிதா ஏவ ப்ரோச்யதே என்கிறார்

மூன்று மூன்றாகவும் மூன்றும் ஒன்றானதாகவும் தோன்றுகின்றன இருக்கின்றன இயங்குகின்றன

கீதை 18 : 19 குணங்களை பகுத்துக்காட்டும் சாங்கிய சாஸ்திரத்தில் ஞானமும் கர்மமும் கர்மத்தை செய்கிறவனையும் அவைகளின் இயல்புகளால் மூன்று மூன்றாகவும் மூன்றும் ஒன்றானதாகவும் சித்தரிக்கப்படுகின்றன . அவைகளையும் இப்போது என்னிடமிருந்து அறிந்துகொள்வாயாக

20 முதல் 40 வரையிலான சுலோகங்களில் பலவற்றில் இந்த திரியேகத்துவம் இருப்பதை விளக்குகிறார்

ஆகவே ஞானம் பயில்வோர் நாங்க அந்த மார்க்கம் இந்த மார்க்கம் என்று சொல்லிக்கொண்டிராமல் திரியேகத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர முயலுங்கள்
கீதை 10 : 20 அர்ச்சுணா ! தனித்த பரமாத்துமாவாக நான் இருப்பினும் ஒவ்வொரு மனிதனிலும் ஜீவாத்துமாவாகவும் நானே குடிகொண்டிருக்கிறேன் ! படைப்பினங்கள் அனைத்திற்கும் துவக்கமும் நடுவும் முடிவுமாக நானே இருக்கிறேன் ! ---------------------------

கீதை 8:4 வானவர்களான தேவர்கள் அசுரர்கள் அதிதேவதைகள் அல்லது தேவதூதர்கள் என அறியப்படுகின்றனர் !சூரியசந்திர நட்சத்திரங்கள் உள்ளிட்ட வானமண்டலசேனைகள் மற்றும் பூமியிலுறையும் படைப்பினங்கள் அனைத்தும் எதிலிருந்து உருவாக்கபட்டதோ அந்த பரமாத்வான நானே ``ஆதியஜ்னா `` அல்லது வேள்விகளின் புருஷனாவேன் !

பூமியிலுறையும் படைப்புகளும் , வாணமண்டல படைப்புகளான தேவதூதர்கள் மற்றும் அசுரர்களும் நாராயணனிலிருந்தே படைக்கப்பட்டுள்ளனர் ! இந்த தேவதூதர்களில் பல வகையினர் உள்ளனர் !

உதாரணமாக அஸ்வினிகள் ருத்திரர்கள் கந்தர்வர்கள் வசுக்கள் அசுரர்கள் மற்றும் மஹரிஷிகளும் தேவர்களாக உள்ளதாக குறிப்புகள் உள்ளன !
அப்படி ருத்திரர்கள் வகைப்பட்ட தேவதூதர்களில் ஒருவராக சிவன் உள்ளார் ! அஸ்வினிகளில் ஒருவராக விஷ்ணு உள்ளார் ! தேவர்கள் மற்றும் அசுரர்களும் நாராயணனுக்குள் படைக்கப்பட்ட படைப்புகளே ! இவர்களுக்கு ஒவ்வொரு பொறுப்புகளும் நிர்வாகமும் கடவுளாலும் நாராயணனாலும் வழங்கப்பட்டுள்ளன ! அவைகள் நாராயணனுக்கு கீழான சக்திகள் !! ஆனாலும் மனிதர்களை விட அவைகள் மேலான சக்திகள் !

மனிதர்களுக்கு தன்னை விட மேலான சக்திகளுக்கு பயப்படுதல் என்பது இயல்பாகவே வந்துவிடுகிறது ! செல்வந்தர்களை கண்டால்கூட கூழைக்கும்பிடு போடும் மனிதர்கள் அவர்களை விட பெரிய வாணமண்டல சக்திகளை பிரியப்படுத்துவது என்பது இயல்பாக வந்த ஒன்று !

ஆனால் எல்லாபுகழும் கடவுளுக்கே என்பதுதான் ஆதியிலேயே மனிதர்களுக்கு உபதேசிக்கப்பட்டது !

கடவுளை யார் மூலமாக நாம் படைக்கப்பட்டுள்ளோமோ அந்த நாராயணன் மூலமாக வழிபடுவது சரியானது !

ஓரிறைவனை நாராயணன் மூலமாக துதிக்கிறோம் என்பதையே மகா மந்திரமாக `` ஓம் நமோ நாராயணாய `` என்பதாக முதல் மகாமந்திரமாக மனித இனத்திற்கு வழங்கப்பட்டது !

ஆனாலும் மனிதனை விட மேலான சக்திகளான தேவதூதர்கள் மற்றும் மனிதர்களில் தூய்மயடைந்த மஹரிஷிகள் - குருனாதர்கள் மூலமாகவும் கடவுளை வழிபடுவதும் ஆத்ம கல்விக்கு ஏற்புடையது என்பதால் அவர்கள் மூலமாகவும் கடவுளை வழிபடுவது வழக்கத்தில் வந்தது !

மகா மந்திரத்தில் இரண்டு முக்கியமான பகுதிகள் உள்ளன !
முதலாவது பகுதி ஓரிறைவனையே துதிக்கிறோம் -- ஓம்
+
இரண்டாவது பகுதி யார் மூலமாக துதிக்கிறோம் என்பது -- நாமத்தினாலே

ஓம் நமோ நாராயணாய
ஓம் நம சிவாயா
ஓம் சிவாய நம
ஓம் பிரம்மாய நம
ஓம் வருணாய நம
ஓம் அகத்தியாய நம
ஓம் வசிஸ்ட்டாய நம
ஓம் விஸ்வாமித்ராய நம

ஓம் நம சிவாய. சிவாய என்றுதானே உள்ளது
சிவனாக ஆனவனை நமஸ்கரிக்கிறேன்
ஓம் நம சிவ என மந்திரம் இல்லை சிவனை வழிபடுகிறேன் என மந்திரமே இல்லை

ஓம் நமோ நாராயணாய நாராயணனாக ஆனவனை வழிபடுகிறேன் பஞ்சாக்கரமும் அஸ்ட்டாங்கமுமே ஆதி மூலமந்திரங்கள்

ஆனவனை வழிபடுகிறேன் அறியப்பட்டவன் மூலமாக அறியப்படாதவனை வழிபடுகிறேன்

இப்படி குருமூலமாக கடவுளை துதிப்பது என்ற சரியான வழக்கம் அசுரர்களின் துர் உபதேசத்தால் கலப்படம் அடைந்து ஓமை அர்த்தமற்றதாக்கி விட்டார்கள் ! கடவுளை விட்டுவிட்டு குருவையே கடவுளாக மாற்றிவிட்டனர் !

ஏக இறைவனை ஓரம்கட்டி தேவர்களையும் குருக்களையும் பல கடவுள்களாக சித்தரித்துவிட்டனர் !

பிறகு எல்லாமும் கடவுள்தான் என சப்பைகட்டும்கட்டி ஒரு பெரிய கூட்டத்தில் கடவுளை முக்கியத்துவம் இல்லாதவராகவும் மாற்றிவிட்டனர்

ஆனால் சரியானது எதுவென்றால் நீ அறிந்த எவரையும் குருவாக வைத்து அறியப்பட முடியாதவரான இறைவனையே வழிபடு என்பதாகும்
கீதை 18 : 20 சகல சிருஷ்டிகளும் அந்த ஏகனின் சித்தத்தால் உண்டானது ; அங்கிங்கெனாதபடி நீக்கமற எங்கும் நிறைந்திருப்பது பரமாத்மா என எவனால் உணரப்படுகிறதோ அதுவே சாத்வீகஞானமாகும்
பொதுநோக்கு என்பது சாத்வீகத்தின் வெளிப்பாடாகும்

பொதுநோக்கு உடையவன் சகலத்தையும் தன்னைப்போலவே முக்கியத்துவம் கொடுப்பான்

தனக்கு எவ்வளவு மதிப்போ அதே மதிப்பை அவன் சகலருக்கும் கொடுப்பான்
தன் நிறைகுறைகளை எவ்வளவு சகிப்பானோ அவ்வளவு சகிப்பான்

எங்கும் எதிலும் இறைவனின் சித்தமே இறுதியாக செயலாக்கத்துக்கு வருகிறது ; அதுவரை அசுரர்களுக்கும் சுரர்களுக்கும் போராட்டம் பூமியில் நடந்துகொண்டே இருக்கிறது என்பதை எவன் ஒருவன் உணர்ந்திருக்கிரானோ அவன் எதைக்கண்டும் கோபப்படுவதில்லை

இந்த இடத்தில் நமது பங்கு என்னவோ அதை நிறைவேற்றினால் போதும் என்கிற அளவில் அவனின் துடிப்புகள் சமப்பட்டு விடுகின்றன

எது ஆக்கப்புரவமானதோ ; நமக்கு நன்மையாக எது தேவையோ அதை ஆக்ரோஷமாக அடைய முயற்சி செய்யாமல் இறைவனிடம் ஒப்புவித்துக்கொண்டு கிடைப்பதை பெற்றுக்கொள்ளும் பொறுமை உண்டாகி விடுகிறது

எது ஒட்டுமொத்த இறை ராஜ்ஜியத்திற்கு தேவையான முன் நகர்வு என இறைவனால் சுட்டிக்காட்டப்படுகிறதோ அதனை நோக்கிய ஆக்கப்பூர்வமான சிறு சிறு நகர்வுகள் கருத்து விதைப்புகள் செய்துகொண்டு திருப்தியாக இருக்கும் நிலை உண்டாகிவிடும்

கலியுகத்தில் அசுரர்களால் தீமைகள் கொடுமைகள் நடந்தாலும் அவைகளின் மத்தியிலிருந்து இறை பேரரசுக்கான நகர்த்துதல் நம்மைப்போன்ற நபர்களைக்கொண்டு இறைவன் செய்துகொண்டிருக்கிறான் ; ஆகவே நம்மை அவ்வளவு எளிதாக இறைவன் கைவிடமாட்டான் என்கிற தெளிவோடும் சாட்சியத்தொடும் உலகில் பார்வையாளனாகவே இருப்பான்

கலியுகம் அசுரர்களுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது . கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்களாகவே இருந்தாலும் பூமியில் அவர்கள் அசுரர்களின் ஆளுகைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு இச்சைகளோடு மாயைகளோடும் அநித்தியமானவைகளுக்காக வாழ்ந்துகொண்டும் போராடிக்கொண்டும் இருக்கிறார்கள்

அவர்களின் மத்தியில் இறைநெறி உணர்ந்தோர் அந்நிய தேசத்தார் போலத்தான் இருக்கிறோம் ; அந்நிய தேசத்தில் என்ன நேர்ந்தாலும் பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் நெழிந்து சுழிந்து பிரார்தித்துக்கொண்டுதான் வாழ முடியுமே தவிர ஆக்ரோஷமாக போராடவே முடியாது

ஆனால் நாம் நம்பியிருப்பவர் சகலவற்றையும் விட பெரியவர் ; எதையும் எந்த நேரத்திலும் செய்ய திராணியானவர் ; இல்லாதவற்றையும் இருப்பதுபோல அழைக்க வல்லவர் ; கடைசி நேரத்தில் நம்மை காப்பாற்றி கைதூக்கி விட இயல்கிறவர் என்ற நம்பிக்கை இருந்தால் போதுமானது ; தெளிவு இருந்தால்போதுமானது அவன் எதற்காகவும் கலங்க மாட்டான்

மனிதர்களின் சிந்தனையை கெடுக்க அதிகாரம் பெற்றுக்கொண்ட அசுர ஆவிகள் தங்கள் விதையை மாயைகளை விதைத்துக்கொண்டேதான் இருப்பார்கள்

யார் இறைவனை கொஞ்சமேனும் உணர்ந்தவர்களோ ; அவர்கள் மூலமாக மட்டுமே இறைவன் தன் விதைகளை விதைக்க முடியும் பொறுமையும் நீடித்த பொறுமையும் அவசியம்

3. கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப்புறப்பட்டான்.

4. அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.

5. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது.

6. வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.

7. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.

8. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.

24.பரலோகராஜ்யம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.

25. மனுஷர் நித்திரை பண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்.

26. பயிரானது வளர்ந்து கதிர் விட்டபோது, களைகளும் காணப்பட்டது.

27.வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.

28. அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்.

29. அதற்கு அவன் வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு இரண்டையும் அறுப்பு மட்டும் வளரவிடுங்கள்.

30. அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது களைகளைப்பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்கு கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.

இப்பிறவியிலேயே நாம் சாதிக்கவேண்டும் என்ற துடிப்பு அவசியமில்லை . கலியுகம் எப்போது முடியுமோ இறைவனே அறிவார்

கலியுகத்தின் பல மாயைகள் சமுகத்தை வாட்டும்போது மாயைகள் எவையோ அவைகளை அழிக்குபடியாக வசனத்தை மட்டுமே விதையுங்கள்

சத்திய யுகம் வரட்டும் என்ற எண்ணத்தில் நீங்கள் பேசுகிற சின்ன சின்ன வார்த்தைகளுக்கும் மிகுந்த பலன் உண்டு

அவைகளை எந்த நேரத்தில் எவர்கள் மத்தியில் வளரச்செய்ய வேண்டுமோ அதை இறைவன் வளரச்செய்வார்

அசுரர்களின் மாயைகளுக்கு எதிரான உங்கள் வார்த்தைகள் யுத்தகளத்தின் பிரமாஸ்திரங்கள் என்பதை மனிதர்கள் அறியமாட்டார்கள்

அசுர ஆவிகள் பலகீனப்படும்

உங்கள் மூலமாகவே இறைவனது வல்லமை வார்த்தை பூமியில் விளங்கும்

ஏசாயா 32:20 மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதைவிதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.
மனிதனாக பிறந்த யாரும் கடவுளுடன் நேரடியாக கலந்து விட முடியாது ! இடையில் ஒரு நிலை - ஏழு வானங்கள் லோகங்கள் உள்ளன ! அதை அடைவதற்கே தகுதியடையாத நிலையில் அங்கு சென்ற பிறகு மட்டுமே உணர முடியக்கூடிய விசயங்களை பேசுவதால் என்ன பயன் ?

கீதை 8:15 பக்தியில் யோகம் விளைந்த மகத்துவமான ஆத்துமாக்கள் யுகபுருஷனின் வாசஸ்தலத்தை அடைந்தபிறகு துயறங்கள் நிறைந்த தற்காலிகமான இப்பூவுலகுக்கு எப்போதும் திரும்ப வரவே மாட்டார்கள் ; ஏனென்றால் அதிஉண்ணத வெளிச்சத்தை அவர்கள் அடைந்து கொண்டார்கள் !

கீதை 8:16 பிறப்பும் இறப்பும் திரும்பதிரும்ப சம்பவிக்கும் இப்பூவுலகில் வளமிக்க இடங்கள் முதல் வளம்குறைந்த இடங்கள் வரை எங்கும் துயறங்களே நிறைந்துள்ளன ; ஆனால் யுகபுருஷனாகிய எனது வாசஸ்தலத்தை வந்தடைந்தவனோ ``மரணமில்லாத பெரு வாழ்வு` அடைகிறான் !

கீதை 8:20 பிறப்பு இறப்பை கடந்த நித்தியஜீவன் அருளப்பெற்ற ஆத்துமாக்கள் மரணமில்லாத பெரு வாழ்வு என்றொரு உண்ணதமான நிலையை அடைகின்றன ! அவைகள் ஒருபோதும் மரிப்பதில்லை ! இவ்வுலகம் முழுமையும் அழிவுக்குள்ளான பிறகும் அவைகள் மாத்திரம் மரணமில்லா பெருவாழ்வில் நிலைக்கின்றன !

கீதை 8:21 மரணமில்லாவாழ்வு என்று தத்துவஞானிகளால் வர்ணிக்கப்படும் அந்த உண்ணத இலக்கை அடைந்த பிறகு ஒருவன் ஒருபோதும் திரும்ப பூமிக்கு வருவதில்லை ! அந்த இடமே எனது பரலோக வாசஸ்தலமாகும் - யுகபுருஷனின் இருப்பிடமாகும் !

கீதை 8:22 சகல ஆத்துமாக்களையும் விட பெரியவரான பெருமாள் - யுகபுருஷன் கலப்படையாத பக்தியால் எளிதில் அடையப்படக்கூடியவரே ! பரலோக வாசஸ்தலத்தில் அவர் இருந்தாலும் அவர் மூலமாக படைக்கபட்ட இந்த பூலோகத்தில் எங்கும் விரவியிருக்கிறவராகவும் ; உண்டான சகலமும் அவருக்குள்ளேயே நிலைபெற்றிருக்கிறவராகவும் உள்ளார் !

கீதை 8:23 பரதவர்களுள் சிறந்தோனே ! இப்பூவுலைகை விட்டு கடறும் யோகிகள் பலர் மீண்டும் இப்பூமிக்கு திரும்ப வருவார்களா அல்லது வரமட்டார்களா என்பதை அவர்கள் கடறும் காலத்தை பொருத்து நிர்னயைக்கலாம் என்பதை உணக்கு அறிவிக்கிறேன் !

கீதை 8:24 யார் உண்ணதமான கடவுளை உணர்ந்து அறிந்தவர்களோ அவர்கள் ஒளிமயமானவரான கடவுளின் ஆதிக்கத்திற்குள்ளாகி ஒளிமயமாகி பரலோகத்தை அடைவர் ! வளர்பிறையிலோ அல்லது உத்திராயணத்திலோ ஒரு நாளின் பரிசுத்தமான பகல்நேரத்தில் அவர்கள் பூமியை கடறுவார்கள் ! அவர்கள் திரும்ப வருவதில்லை !

கீதை 9:25 யார் ஞானிகளையும் மஹான்களையும் வழிபடுகிறார்களோ அவர்கள் அவர்கள் பிறவியெடுத்துள்ள இடத்தில் பிறப்பர் ! யார் முன்னோர்களை வழிபடுகிறாற்களோ அவர்களும் அவர்கள் பிறவியெடுத்துள்ள இடத்தில் பிறப்பர் ! யார் அசுரர்களை வழிபடுகிறாற்களோ அவர்களும் அவர்களின் ஆதிக்கம் உள்ளோரிடத்தில் பிறப்பர் ! ஆனால் யார் என் மூலமாக கடவுளை வழிபடுகிறார்களோ அவர்கள் எனது நித்திய இடத்தை அடைந்து மரணமில்லா பெரு வாழ்வு பெறுவர் !!

வைகுண்டம் ; சிவலோகம் அல்லது பரலோகத்தில் பிரவேசித்த பிறகு அங்கிருந்தே கடவுளை பற்றிய நேரடி அணுபவத்தை பெற முடியும்

நாம் எந்த குருகுலத்தில் இருந்து ; எந்த அதிதேவர் மூலமாக இறைவனை தொடர்பு கொள்ளுகிறோமோ அந்தந்த அதிதேவர்களின் லோகங்களில் சென்று தங்கி பின்பே இறைவனின் நேரடி புரிதலுக்கு வரமுடியும்

யோவான் 14:2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; இதோ ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். இயேசுவின் பிரியா விடை உபதேசம் இவ்வார்த்தைகள்

அவரவர்கள் அவர்களது குருவுக்கு பரத்திலே உள்ள வாசதலங்களுக்கே செல்லமுடியும்

அங்குபோய் தரிசிக்க வேண்டிய இறைவனை அவரவர் குருவின் நாமத்தால் தொழுது கொள்வதே சரியான நெறி
கீதை 18 : 21 எந்த ஞானத்தின் மூலமாக சகல சிருஸ்ட்டிகளிலும் அவைகளுக்குரிய தனித்த இயல்புகளையும் அவற்றின் குணபேதங்களால் உருவாகும் முரண்பாடுகளையும் பிரித்தறிய முடிகிறதோ அது ரஜோஞானம் ஆகும்

ரஜோகுணம் என்பது போர் வீரர்களுக்கு மட்டுமே உரியது என்பதாக மேலோட்டமாக பேசப்படுகிறது . போர் வீரர்களுக்கு மிக அவசியமான ஒன்று எதிராளிகளை நிதானித்தல் ஆகும்

எதிராளியின் இயல்பு தாக்கும் திறன் ; வேகம் உத்தி ஆகியவைகளை சரியாக நிதானித்தால் மட்டுமே அதை தடுக்கும் யுத்தி தெரியும் . எதிராளியை முடக்கியபிறகே அவனை வெற்றிகொள்ளவோ அல்லது அழிக்கவோ முடியும்

விடுதலைப்புலி பிரபாகரனின் மாபெரும் தவறுகளில் ஒன்று சிங்களவர்களுக்கும் வடக்கு இலங்கைக்கும் இடையில் அதாவது கிழக்கு பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக சிங்களவர்களை தடுத்து வைத்திருந்த அனுபவத்தில் தேர்ந்த கருணாவை ஒன்றுமில்லாத உப்புசப்பு பெண் விசயத்திற்காக பகைத்துக்கொண்டது .யுத்தகாலத்தில் சில விசயங்களை முக்கியப்படுத்தலாகாது என்பார்கள்

அவரின் போதாத காலம் கருணாவை கொல்ல முயற்சித்து தப்பவிட்டது

கருணா தப்பியபோதே பிரபாகரனின் அழிவு உறுதிபடுத்தப்பட்டுவிட்டது

யுத்த தந்திரங்களை அடுக்கடுக்காக கையாண்ட ராஜபஷே ; பலரை கொன்றவர் கருணா என கோபம் வைக்காமல் நிதானமாக அவருக்கு மந்திரி பதவி கொடுத்து விடுதலைபுலிகளின் சகல நுணுக்கங்களையும் அவரிடம் அறிந்துகொண்டார்

விடுதலைப்புலிகளின் தாக்கும் திறனை யுத்திகளை பின்புலத்தை மிக சரியாக கணித்ததால் எளிதாக வெற்றி கண்டார்கள்

வெற்றி வேல் வீரவேல் என கத்திக்கொண்டே விட்டில் பூசிக்களாக புலிகளின் முப்படைகளும் அழிந்தன

பிறரை அவர்களின் தனித்த இயல்புகளை கணித்தல் ; பேதங்களின் தன்மையை உணர்தல் ரஜோஞானம் என ஸ்ரீகிரிஷ்ணர் வர்ணிக்கிறார்

ஆன்மவாழ்வின் முன்னேற்றத்திற்கு பரமண்டல சக்திகளின் தனித்த இயல்புகளை தரம்பிரித்து உணர்தல் மிக மிக அவசியம்

இறைவன் மட்டுமே அங்கிங்கென்னாதபடி நீக்கமற நிறைந்திருக்கிறார் என்று படர்க்கையாக அறிகிற பலர் நானும் இறைவனாக இருக்கிறேன் ; ஆகவே என் மூலமாக மட்டுமே இறைவனை உணரமுடியும் என ஆரம்பித்து தன்னை உணர்கிறேன் என்கிறார்கள் . தனக்குள் என்னென்ன சஞ்சித கர்மங்கள் இருக்கின்றன என்பதை ஒவ்வொன்றாக கண்டறிந்து கடந்து வரவேண்டும்

அப்படி எதுவும் கடந்து செல்லாமல் வெறுமனே நானே கடவுள் நானே கடவுள் என பத்து தடவை சொல்லிவிட்டு எல்லாம் உணர்ந்துவிட்டேன் என ஞானிப்பட்டத்தோடு ஞானதாகத்தை முடித்துக்கொள்பவர்களும் உண்டு

பிரம்மம் ஒன்றே ஒன்றுதான் தந்தனா நானனே தந்தனா நானனே தன தந்தனான என ஆனந்தகழிப்பு பாடல் ஒன்று ஒன்று . அதை ஆழமாக உணர்ந்த சித்தர்கள் பாடியது . அதை சத்வஞானம் என்றே முந்திய சுலோகத்தில் ஸ்ரீகிரிஷ்ணர் பாராட்டுகிறார்

ஆனால் பரமண்டலத்தில் கடவுள் மட்டுமே இல்லையே . 33 கோடி தேவர்களை உருவாக்கி அவர்களுக்கு பொறுப்புகளை பகிர்ந்து கொடுத்து அவர்கள் மூலமாகத்தானே சகல காரியங்களையும் நடத்துகிறார்

இந்த தேவர்கள் ஒவ்வொருவரும் தனித்தவர்கள் . தனித்த பிரகிருதிகள்

இறைவனை மீறி கலகம் செய்யும் தேவர்கள் சிலர் அசுரர்களாகவும் மாறி பேதங்களும் அரசியலும் அங்கும் நடந்துகொண்டிருக்கிறதே

விஷயம் என்னவென்றால் ஞானவானே உனக்குள் இருக்கும் சஞ்சித கர்மங்களை கண்டுணரவே அசுரர்கள் விடமாட்டார்கள்

நானே கடவுள் என்பதை மட்டும் விதவிதமாக சொல்லித்தருவார்கள் ;உனது சஞ்சித கர்மங்கள் ஒன்றையாவது தம்பிடி உன்னை உணரவிடமாட்டார்கள்

ஏனென்றால் நானும் கடவுளாகிவிட்டேன் ; அந்த கடவுளை சரணடைய வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் அசுரர்களின் ஒரே தாரக மந்திரம்

ஸ்ரீகிரிஷ்ணர் இங்கு முக்கியப்படுத்தும் விஷயம் சகலமும் பிரமம் என்று மட்டும் உணர்ந்தால்போதாது ; அதே பிரமம் தனித்தனி பிரகிருதிகளாக குணபேதங்களுடன் ஒன்றை ஒன்று முரண்பட்டு நிற்கிறது என்பதையும் சரியாக நிதானிக்கவேண்டும்

பரமாத்மா ஒன்றே ஆனால் குணங்களால் பேதப்பட்டு தனித்தவைகளாக உள்ள பல ஜீவாத்மாக்களுள் விரவியும் கிடக்கிறது ; தனித்தும் செயல்படக்கூடியது

ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்—என அபிராமி அந்தாதி அதிதேவர் நாராயணியைப்பற்றி பாடுகிறது

அதிதேவர்களும் கடவுளைப்போல சகலத்தில் விரவியும் தனித்தும் செயல்படக்கூடியவர்கள்

அதிதேவர்களுக்கு கீழான தேவர்களுக்கு இவ்வியல்பு இல்லை ; தனித்தவர்கள் ; மனிதர்களும் மற்ற சிருஷ்டிகளும் அவ்வாறே

தனித்தவை ; குணபேதங்கள் உள்ளவை

மனிதர்களுக்குள் ஓயாது தர்க்கபேதங்களும் சண்டை சச்சரவுகளும் உள்ளதே ; இந்த பேதத்தை பலவாறாக தூண்டி விடுகிரவர்களே அசுரர்கள் ஆகும்

ஆக ஆன்ம முன்னேற்றத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் சத்வஞானம் மட்டும் இருந்தால் போதாது ரஜோஞானமும் அவசியம் என்கிறார் .

மனித சமுதாயத்தில் புரையோடிப்போன பேதங்களை களையவேண்டுமானால் மனிதர்களை கண்டித்து பலனே இல்லை .

மனிதர்களுக்கு பின்னணியில் இயங்கும் அசுர சக்திகளை இறை பேரரசின் சார்பாக அடக்கும் இறை அவதாரங்கள் ; இறை தூதுவர்கள் வந்தால் மட்டுமே சாத்தியப்பட்டிருக்கிறது .

காந்தி சொன்ன சத்யாகிரகம் அதுதான் .மனிதர்களை நாம் தாக்கலாகாது ; அவர்களின் தீய குணத்தை மட்டுமே வெல்லவேண்டும்

மனிதர்களின் பின்னணியில் இயங்கும் அசுர ஆவிகளை நாராயணன் நாமத்தாலும் சிவனின் நாமத்தாலும் இறைவன் கடிந்துகொள்ளட்டும் என்று மட்டுமே நீங்கள் பிரார்த்தித்து வரவேண்டும்

இது ஆவிமண்டல யுத்தம்

ஆவிமண்டல யுத்தத்தில் பின்னணியில் இயங்கும் ஆவியின் தன்மை ; பெயர் நமக்கு இறைவனால் வெளிப்படுத்தப்பட்டால் அந்த பெயரை உச்சரித்தவுடன் அவைகள் விலகி ஓடுவதை நாம் உணரலாம்

நம்மோடு பிணங்கும் மனிதர்களிடம் என்றும் நாம் கசந்துகொள்ளவே கூடாது ; அவர்கள் எவ்வளவு இடர்கள் செய்தாலும் நாம் இழித்தவாயர்களோ என அவர்கள் நினைக்கும் அளவு அன்போடு நடந்துகொள்ளவேண்டும்

ஆனால் அந்த தீய குணத்தை தூண்டும் அசுர ஆவியை நாம் கடிந்து பிரார்த்தித்துக்கொண்டே இருக்க வேண்டும்

தர்மயுத்தம் செய்க என்ற ஸ்ரீகிரிஷ்ணரின் கீதை உபதேசம் இன்றைய காலகட்டத்தில் அசுர ஆவிகளுக்கு எதிரான பிரார்த்தனையே ஆகும்

சாத்வீக யுத்தமும் இதுவே ஆகும்

இதற்கு ஆவிகளை பிரித்தறியும் ரஜோஞானம் மிகமிக அவசியம்

ஆவிகளை பிரித்தறியும் வரத்தால் இடைவிடாது ஆவிமண்டல யுத்தம் செய்யும் அர்ச்சுணர்களே இப்போது அவசியமானவர்களும் கூட . அப்படிப்பட்டவர்களே எதிர்காலத்தில் வரப்போகிற சமரச வேதாந்தி @ அல்மஹதி யாக தரம் உய்ரத்தப்படுவார்கள்

நான் அடிக்கடி சொல்லும் விஷயம் ராமரோடு பூமிக்கு வந்த வானவர் சேனையில் பலர் காலம் காலமாக மனிதர்களாக பூமியில் பிறந்துகொண்டே இருக்கிறார்கள் . ஒவ்வொரு யுக மாறுதலின் போதும் யுத்தங்களில் பங்காற்றி இருக்கிறார்கள்

அடுத்தடுத்த மனித பிறவிகளில் பாவங்களும் தோஷங்களும் ஆட்பட்டு தேங்கிப்போயும் இருக்கிறார்கள்

ஏதோ ஒரு ஆன்மீக வட்டாரத்தில் இருந்துகொண்டு போராடிக்கொண்டேயும் இருக்கிறார்கள்

இவர்களுள் ஒருவர் அல்மஹதியாகும் தகுதியை பெற்றவுடன் கலியுக மாறுதலுக்கான உலகம் தழுவிய ஆண்மீகபேரலை ; சகல பேதங்களையும் சமாதனப்படுத்தும் வல்லமையுள்ள பேரியக்கம் இந்தியாவிலிருந்து புறப்படும்

முன்னோடிகளான வள்ளல்பெருமானும் ; சாலை ஆண்டவரும் ஏற்றி வைத்த சன்மார்க்க கொடி கோலோச்சும் காலம் நெருங்கி வந்துகொண்டே இருக்கிறது

கீதை 18 : 22 ஆனால் எவர்களுடைய ஞானம் பேதப்பட்ட குணங்கள் செயல்பட கிடைக்கப்பட்ட சரீரத்தையே நான் என மயங்கி பற்றிக்கொன்டுள்ளதோ அது உண்மைப்பொருளை உணராதது ; அற்பமானது ; தாமச ஞானம் என்று கூறப்படுகிறது

மனிதன் என்ற தரத்திலேயே கூட முந்திய பிறவியில் எந்த மதத்தில் நாட்டில் பிறந்திருந்தோம் அடுத்த பிறவியில் எந்த மதத்தில் நாட்டில் பிறப்போம் என்றே தெரியாத அற்ப அறிவுள்ளவர்கள் ; இப்பிறவியில் பிறந்த மத கடவுளை தங்களை விட்டால் காப்பாற்ற ஆள் இல்லை என்பதுபோல மதவெறி கொண்டு அடுத்தவரை அழித்தால் சொர்க்கம் கிடைக்கும் என்று நம்பிக்கொள்கிரார்களே ; இப்போது யாரை காரித்துப்புகிறோமோ அடுத்த பிறவியில் அதே மதத்தில் பிறக்கவைத்து இறைவன் வேடிக்கை பார்ப்பார் என்ற அச்சம் அற்று இருக்கிறார்களே அவர்களை ஸ்ரீகிரிஷ்ணர் தாமச ஞானம் உள்ளவர்கள் ; உண்மையை உணர திறனில்லாத அற்ப அறிவுள்ளவர்கள் என்கிறார்

தற்காலிகமான அழிவுக்கேதுவான சரீரத்தை நான் என நம்பி அழிவில்லாத தனது ஆத்மாவை உணராத மதியீனர்கள் என்கிறார் ஸ்ரீகிரிஷ்ணர்
கீதை 18 : 22 ஆனால் எந்த ஞானம் பிரகிருதியின் காரணமாக வெளித்தோன்றும் உடலையே நான் என நம்பித்திரிகிறதோ அது முக்திக்கு உதவாது . உண்மையை விட்டு விலகிச்செல்லும் மாய்மாலம் அது .இது தாமச ஞானம் எனப்படுகிறது

பூமியில் மனித ஆத்மாக்கள் செயல்படவேண்டுமானால் அதற்கு இறைவன் இரண்டு காரணிகளை அருளவேண்டும்

முதலாவது அதற்கு ஒரு ஸ்தூல சரீரம் அவசியம்

ஆத்மா ஆவிவடிவானது . அது ஒரு தேகம் இல்லாமல் செயல்பட முடியாது . எந்த தேகம் அருளப்படுகிறதோ அந்த தேகத்திற்கு அடிமையாகி அதுவாகவே ஆகியும் விடும் . அதுமட்டுமல்ல அந்த தேகத்தின் புலன்களை கொண்டுதான் புற உலகத்துடன் தொடர்பு கொண்டு தன் அறிவையோ ; ஞானத்தையோ ; இறைவனுடனான தனது தொடர்பையோ வளர்த்துக்கொள்ள முடியும்

ஆத்மாவும் தேகமும் இருந்தால் மட்டும் போதுமா என்றால் இந்த இரண்டும் இயங்க உயிர் அருளப்படவேண்டும் . உயிர் இருக்கும் வரைதான் இரண்டும் இயங்க முடியும்

உயிர் எடுத்துக்கொள்ளப்பட்டால் உடல் அழுகி மண்ணுக்கு திரும்பிவிடும் . ஆத்மா செயலற்ற ஒடுக்கத்துக்கு வந்துவிடும் .

உயிரும் உடலுமற்ற ஆத்மாக்கள் இருக்கின்றன ; ஆனால் இருந்தும் இல்லாதது போல முடக்கப்படுகின்றன

அவை எதிலும் கரைந்துபோய் விடுவதில்லை . இதில் தெளிவில்லாத காரணத்தால் மனிதர்களாக தங்களுக்கு ஏதாவது ஒரு சாக்கு சொல்லி திருப்தி அடைகிறார்கள்

சிவலோகபதவி ; வைகுண்டபதவி ; கர்த்தருக்குள் நித்திரை ; என்றெல்லாம்

மரணித்தல் என்பது எதிலாவது கரைந்துபோவதே அல்ல ; முடக்கப்படுவது

அழியாத ஒளி சரீரம் ஆத்மாவில் உள்ளொளி பெருகி அடைந்தால் ஒழிய ; மீண்டும் மீண்டும் ஒரு கர்ப்பத்தில் தங்கி அழியக்கூடிய ஸ்தூல சரீரத்தை பெறாமல் ஆத்மா முன்னேறாது

சித்தி அடையும் வரை பிறவி எடுப்பதே நாம் நல்லதோ தீயதோ செய்து ஞானம் அடையமுடியும் . இறைதொடர்பில் வளர முடியும்

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது

அதிலும் செய்த பாவங்கள் காரணமாக தாழ்ந்த மிருக ஜீவன்களாக பிறந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும்

இதைக்காட்டிலும் கொடுமை கொடிய பாவம் செய்தவர்கள் பிறவி எடுக்க முடியாமல் பூமியில் அல்லாடித்திரிவதுதான்

ஆயுள் கைதி போல

அப்படிப்பட்டோருக்கு வாரிசுகள் தங்கள் புண்ணியத்தை தானம் செய்து அடுத்த பிறவிக்கு அனுப்பிவைக்கலாம் .

அல்லது தகுதி உள்ள அருளாளர்களிடம் அவை கெஞ்சித்திரியும் .

பல ஆத்மாக்களை பிரார்த்தனை செய்து சிறையில் இருந்து விடுதலை ஆக்கி பிறவிக்கு அனுப்பி வைத்த அனுபவங்கள் அடியேனுக்கும் உண்டு

இதை எதற்காக சொல்கிறேன் என்றால் ஆத்மா முன்னேற்றம் அடைவதற்கு சரீரம் பிறவி இல்லாமல் முடியாது

ஆத்மாவே பிரார்த்தனை செய்து இறை அருளை பெற்றுக்கொள்ள முடியாது . பிறவி எடுத்தே தன் பாவ சாபங்களை கழுவிக்கொள்ள முடியும்

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சரீரம் ; பிறவி என்பது ஆத்மாவில் அருளை பெருக்கிக்கொள்ள என்ற தெளிவு பலருக்கில்லை

வந்து பிறந்த இடத்தின் உறவுகள் ; சொத்துபத்துக்கள் ; கெளரவம் ; சாதி மத பேதங்களில் மாட்டிக்கொள்கிறார்கள்

குறைந்த பட்ச குடும்ப கடமைகளை ; தேவைகளை நிறைவேற்றுவது மனிதனின் உலக கடமைகள் என்பதை மறுப்பதற்கில்லை

ஆனால் தாமரை இலை தண்ணீரில் இருப்பதுபோல இறைவனின் கிருபையோடு உலக கடமைகளை செய்துவரவேண்டும்

நம் ஆத்மாவில் குடும்பத்தில் இருக்கிற பாவசாபங்கள் என்ன ; இவைகளை எப்படி கடரலாம் என்ற ஆன்ம வாழ்வில் முக்கிய கவனம் இருக்க வேண்டும்

இவைகள் தாம் முந்திய சுலோகங்களில் சொல்லப்பட்ட சத்வ ; ரஜோ ஞானங்கள்

அப்படியில்லாது வந்து மாட்டிக்கொண்ட குடும்பத்தையும் சரீரத்தையும் மட்டுமே நான் என கருதிக்கொண்டு சுயநலத்தோடு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவே பல மனிதர்கள் பாடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்

இதை அற்பமான தாமச ஞானம் என்கிறார் ஸ்ரீகிரிஷ்ணர்
கீதை 18 : 23 எந்த செயல் உன் மீது சுமர்த்தப்படுகிறதோ ; அக்கர்மத்தை நான் செய்கிறேன் என்ற கர்வம் இன்றியும் ; விருப்பு வெறுப்பு இன்றியும் ; இறைவனுக்கு அர்ப்பணம் என்ற உணர்தலோடு செய்யப்பட்டால் அது சாத்வீக கர்மமாகும்

இந்த சுலோகத்தில் நியதம் என்றொரு சமஸ்கிரத வாசகம் வருகிறது . அதாவ்து நியதி என்பதற்கு சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட காரியங்கள் என்பதாக அரைகுறைகள் வியாக்கியானம் சொல்லி வருகிறார்கள் .

சாஸ்திரங்கள் காலத்திற்கு காலம் மாறியிருக்கின்றன .நாட்டுக்கு நாடு சாஸ்திரங்களில் மாற்றங்களும் இருக்கின்றன

அதில் உள்ள ஆகமங்களை யாகங்களை அப்படியே செய்ய வேண்டும் ; புரோகிதர்கள் சொல்லுகிற விதிகளை அப்படியே கடைபிடிக்க வேண்டும் ; அந்த யாகங்களை இறைவனுக்கு அர்ப்பணம் என சொல்லிவிட வேண்டும் என சொல்லிவருகின்றனர்
சாஸ்திரங்கள் என்பது சடங்குகள் என்பதாக புரோகிதர்கள் தங்கள் வருமானத்திற்காக சொல்லியதாகும்

நியதி என்பதற்கு விதிக்கப்படுகிற அல்லது நம் மீது வம்பாக வந்து சுமர்கிற விவகாரங்கள் என்பதும் அர்த்தமாகும்

இன்றைய நம் வாழ்வில் நமது சுற்று சூழ்நிலைகளில் ஒரு காரியம் நாம் செய்தாக வேண்டும் என்பது போல ஒன்று வருவதை நாம் பலமுறை பார்த்திருப்போம்

அக்காரியத்தில் நமக்கு ஆதாயம் இருக்கிறதா விருப்பு வெறுப்பு இருக்கிறதா என்பதைப்பொருத்து நாம் ஆக்ரோஷமாக அல்லது ஏனோ தானோவென்று கொஞ்சம் செய்துகொண்டிருப்போம்

ஆனால் யுக புருஷர் ஸ்ரீகிரிஷ்ணர் இறைவனுக்கு அர்ப்பணம் என்பதில் அதிக அழுத்தம் கொடு என்பதை முக்கியப்படுத்துகிறார்

இறைவனுக்கு அர்ப்பணம் என்றால் முதலாவது இது இறைவனுக்கு சித்தமா ; இறைவனா நம் மீது இதை சுமத்துகிறார் என்பதில் முக்க்யத்துவம் கொடுத்து பிரார்தித்து பார்ப்போம்

இறை சித்தம் என்ன என்று அறிய முக்கியத்துவம் கொடுத்தாலே ஒருவேளை இறை சித்தம் உணரமுடியாமல் நாம் இருந்தாலும் அது பெரிய குற்றமாகாது

இறைவன் எவ்வழியிலாவது அக்காரியம் நடந்துகொண்டிருக்கும் போதே நமக்கு உணர்த்துதல் செய்வார்

தொடர்வதா வேண்டாமா பின்வாங்குவதா என்பதை அவரின் உணர்த்துதலுக்கு தகுந்து நம்மால் அனுபவமாக்க முடியும்

இறை சித்தமா என்ற வினவுதலோடும் இறைவனுக்கு முழு அர்ப்பணமாகவும் ; இதற்கு இன்றைய உடனடியான பலனை விட மிக சரியாக என்றாவது ஒரு நாள் அவர் நமக்கு தகுந்த பலன் கொடுப்பார் என்ற நம்பிக்கையோடும் உலட்டாமல் அலட்டாமல் முடிந்தளவு நேர்த்தியாக அக்காரியத்தை நிறைவேற்ற முயலவேண்டும்

இப்படி செயல்படும்போது அது இறை சித்தமா என நாம் அறியாத போதும் ஒருவேளை தவறான விளைவுகளை அக்காரியம் கொடுத்தாலும் அதனால் நமக்கு பெரும் பாதிப்பு உண்டாகது

காரிய சித்தி ; நடைமுறை வேதாந்தம் ; செயல் பூர்வ சித்தாந்தம் என்றெல்லாம் பலவாறாக ஞானிகள் சொல்லுகிற காரியங்கள் இப்படிப்பட்டதே

இதுவே சாத்வீக கர்மத்தின் இலக்கணம் என்கிறார் ஸ்ரீகிரிஷ்ணர்
கீதை 18 : 24 ஆனால் எக்காரியங்கள் ஆதாயம் விரும்பியோ ; அதிகாரம் விரும்பியோ கடும் பிரயத்தனத்தோடு செய்யப்படுகிறதோ அவை ராஜச கர்மங்களாகும்

தனக்கோ அல்லது பிறருக்கோ பலனளிக்க கூடிய காரியங்கள் தன் மீது சுமர்ந்தால் அது இறைவனால் வரப்பெற்றதோ என்ற எண்ணத்தோடு விருப்பு வெறுப்பின்றி நிதானமாக முடிந்தளவு நேர்த்தியாக காரியங்கள் செய்யப்பட்டால் அது சாத்வீக கர்மங்கள் என்று பார்த்தோம்

அப்படியில்லாமல் தனக்கு அதில் என்ன ஆதாயம் என கணக்கிடப்பட்டு அதிக பிரயத்தனத்தோடு ஆக்ரோஷமாக காரியங்கள் செய்யப்படுமானால் அது ராஜச கர்மங்கள் ஆகும்

காரியங்கள் பலனளித்தால் அதில் விருப்பும் ; ஏதேனும் இடரல் உண்டாகுங்கால் அடுத்தவர் மீது வெறுப்புமாக இக்காரியங்கள் நடக்கும்

தனக்கு ஆதாயம் இல்லை என்று தெளிந்த காரியங்களில் அவ்விடத்தில் நாம் இருந்தும் தெரியாதது போல இருந்துகொள்வது ; அக்கறை இல்லாமல் அரைகுறையாக செய்வது ; செய்துகொண்டிருப்பது போல நடித்து காலம் கழிப்பது ; ஓலட்டுவது ; காரியம் கெடுவதில் கொஞ்சம் சந்தோஷமும் பட்டுக்கொள்வது என்றெல்லாம் இவை நீளும் .

ஆதாயம் கருதிய விசய்ங்களில் மனம் பிரயத்தனம் படுவது மட்டுமல்ல ஆயாசமும் படுகிறது என்கிறார் ஸ்ரீகிரிஷ்ணர்

பகுலாயாசம் என்ற வார்த்தை பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது

சந்தோஷம் ; வெறுப்பு ; துக்கம் என மன உணர்வுகள் நம் மனதை பலகீனப்படுத்துகின்றன

இதனால் தனக்கோ பிறருக்கோ நோவுகள் ; பாவங்கள் உண்டாகின்றன

கீதை 18 : 25 ஆனால் விளைவுகள் எதைக்குறித்தும் அக்கறை இல்லாமல் ; உணர்வு வகைப்பட்டவுடன் செய்யப்படுபவை தாமச கர்மங்களாகும்

தாமச கர்மத்தை விட முந்திய கர்மங்கள் மேலானவை என்றே வேதங்கள் சொல்லுகின்றன

நாம் செய்யப்போகிற காரியம் என்ன விளைவை உண்டாக்கும் என்ற தெளிவு ; நிதானத்தோடு ஆதாயம் கடந்தோ ஆதாயத்துடனோ காரியங்கள் செய்யப்படும் போது அது பரிசீலனையோடு நடக்கிறது

செய்லகள் நடக்கும்போதே அவை கண்காணிப்புக்கும் உள்ளாகின்றன . சமயத்தில் மாற்றமும் செய்யப்படுகிறது

ஆனால் காரண காரியங்கள் இன்றி ; எவ்வித தெளிவும் இன்றி ; இலக்கும் இன்றி ; சந்தரப்ப சூழ்நிலைகளில் உணர்வு வயப்பட்டதால் மட்டுமே நடந்தேறுகிற காரியங்கள் அல்லது தன்னை வெளிக்காட்டிக்கொள்வதற்காக நடக்கிற காரியங்கள் ; காரியம் செய்கிறவருக்கே உடனடியாக கெடுதலை வரவழைத்ததாக முடிகிறது

சொந்த செலவில் சூனியம் வைத்ததாக ஆகிறவை தாமச கர்மங்களே ஆகும்
கீதை 18 : 26 வெற்றி தோல்விகளில் பற்று அற்றவனும் ; நான் செய்கிறேன் என்ற அகம்பாவம் அற்றவனும் ஊக்கமும் உறுதியும் உள்ளவனும் ; இன்பம் துன்பத்தால் மனம் உழலாதவனும் எவனோ அவனே சாத்வீக கர்த்தா எனப்படுகிறான்

செயலுக்காக செயலை யோகமாக செய்கிறவனும் ; செய்த செயலின் விளைவை இறைவனுக்கே அர்ப்பணித்து விட்டு ; சாதக பாதக அம்சங்களை அனுபமாக கற்றுக்கொள்கிறவனால் மட்டுமே சாத்வீக கர்மத்தை பூமியில் வெளிப்படுத்த முடியும்

கர்ம யோகி என்பதோடு இறைவன் பேரில் சரணாகதி அடைந்த மனதால் மட்டுமே அப்படி வாழமுடியும்

கலியுகத்தில் இவ்வகைப்பட்ட அர்ப்பணிப்பை கூட இருக்கும் நபரோ அல்லது வேறு யாரோ கூட சுயலாபத்துக்காக அறுவடை செய்துகொள்ளலாம்

உழைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்பது கலியுக நியதிகளில் ஒன்று என இயேசுவே சொல்லியுமுள்ளார்

ஆனால் அதுவும் கூட இறைவனால் அனுமதிக்கப்பட்ட நபரால் மட்டுமே அடையக்கூடும் என்பதால் அதில் சாத்வீகி சஞ்சலப்படுவதில்லை

காந்தியின் உழைப்பை தந்திரமாக நேரு தன் தகப்பனாரின் குடும்பத்திற்கு அறுவடை செய்துகொண்டது போல

அண்ணாத்துரையின் உழைப்பை அவர் அமரர் ஆனவுடன் அறுக்க முன்னேற்பாடாக கருணாநிதி இருந்தது போல

தனக்கு நிகராக யாரும் கட்சியில் இருந்து விடக் கூடாது என்பதற்காக கண்ணதாசன் வெறுப்படைந்து தி.மு.க வை விட்டு வெளியேறட்டும் என ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டது போல

கலியுகத்தில் சூது வாழ்வுதனை கவ்வும்

ஆனாலும் இறைவன் முடிவில் நன்மையாக்கி சத்திய யுகத்தில் மேன்மையாக்குவார் என்ற நம்பிக்கை சாத்வீகிக்கு உண்டு

தன் குடும்பத்தையே காத்துக்கொள்வார் என்ற நம்பிக்கை உண்டு

கலியுகத்தில் இன்றைக்கே முடிவு வராது என்பதால் ; சாத்தியப்பட்ட அளவு நன்மையான காரியங்களோடு ஒத்து வாழும் இயல்பும் இருக்கும்

ஆனால் ராஜோ குணத்தானோ இன்றைக்கே முடிவை விரும்பி எதற்காகவாவது சண்டையிடுவோம் என்றே இருந்து ஏதாவது ஒரு கட்சியில் போய் சேர்ந்துகொள்வார்கள்

ஒத்து வாழ்தல் என்பதற்கு பதிலாக சண்டையிடுதல் என்பதாகவே செயல்பாடுகள் இருக்கும்

கீதை 18 : 27 செயலின் பலன்களை அறுவடை செய்யும் பற்று கொண்டு இன்பத்தாலும் துன்பத்தாலும் அலசடி படுபவன் ; பேராசை கொண்டு எதிராளியை கடும் நெருக்கடிக்கு ஆளாக்குபவன் ; தூய்மையும் அமைதியும் அற்றவன் எவனோ அவனே ராஜச கர்த்தா எனப்படுவான்

ராஜாக்கள் ; அதிகாரிகள் ராஜோ குணமில்லாமல் நிர்வாகமும் செய்யமுடியாது என்ற நிலை உறுவாகும்

வரலாற்றில் சக்ரவத்திகளாக அறியப்படுபவர்கள் ; பேரரசர்களாக திகழ்ந்தவர்கள் பலர் ; ஈவு இரக்கம் இல்லாமல் முதலாவது அண்ணன் தம்பிகளை கொன்றவர்களாகத்தான் இருப்பார்கள்

உள் பகையை சரிக்கட்ட முடியாமல் போராடிக்கொண்டே இருப்பவர்களால் வெளிப்பகைவர்களை வென்று சாதிப்பதோ இயலாத காரியம் ஆகி விடும்

கலியுகத்தில் கொடுங்கோலர்களைத்தான் பேரரசர்களாக படித்துக்கொண்டிருக்கிறோம்

ஆனாலும் ராஜயோகிகளும் இருந்தார்கள்

தசரதனை ராஜ யோகி என்பார்கள்

அவரின் வாரீசான ராமரும் பத்தாயிரம் ஆண்டுகள் இறை பேரரசு ஒன்றை நீதிநெறியோடு பரிபாலித்தார்

கலியுகம் பிறக்கும் வரை தர்மரும் சில ஆண்டுகள் பரிபாலித்தார்

பிசாசுக்கு பேய் மேல் என்பது இன்றைய கலியுக நடைமுறை

இதில் சாத்வீகிகளின் ; ஆன்மீகார்களின் ஆலோசனையை மதித்து நடக்கிற ராஜாக்கள் இருந்தால் மேன்மை உண்டாகும்

சாத்வீக குணம் என்பது கொஞ்சம் அசந்தால் தாமோ குன்மாக மாறி விடும்

தாமோ குணத்தை விட ராஜச குணம் எவ்வளவோ மேலானது

கீதை 18 : 28 அறிவுக்கு அடங்காத மனமும் புலன்களும் ; விவேகம் அற்றவனும் ஆலோசனைக்கு இடம் கொடாதவனும் ; கர்வமுடையவனும் ; வஞ்சகத்தால் பிறர் வாழ்வை கெடுப்பவனும் ; கவலை ; சோம்பலால் காலத்தை கடத்துபவனும் எவனோ அவனே தாமச கர்த்தா எனப்படுவான்

தாமச கர்த்தா இறை அச்சம் ; மனித நேயம் கடந்து புலன்களுக்கு அடிமையாகி ஆசைகளை நிறைவேற்ற சூதுவாதால் பிறர் வாழ்வை கெடுப்பான் ; ஆனால் ராஜோ குணத்தானோ சாம பேத தான தர்மத்தால் வசப்படுத்துவானே தவிர அழிக்கமாட்டான்

நல்ல சாத்வீகர்களின் தொடர்பு கிடைத்தால் ; அவர்களின் வழிகாட்டுதல்களை ஏற்று நன்மை செய்யவும் தயங்க மாடடார்கள்

தாமச கர்த்தாவை விட ராஜோ கர்த்தாவே மேலானவன்

ராஜோ கர்த்தாவை விட சாத்வீக கர்த்தாவே மேலானவன்

ஒவ்வோர் மனிதனிடம் ஏதாவது இரண்டு தன்மை கலந்தே இருக்கும்
கீதை 18 : 29 அர்ச்சுணா மூன்று வகையான குணங்களிலிருந்து இயல்பாக வெளிப்படும் புத்தி ; தெளிவு ஆகியவை ஒருங்கிணைந்தும் தனித்தும் செய்ல்படும் மூன்று வகைகளை இப்போது கேள்

ஒவ்வோர் மனிதனிடமும் அவனுடைய ஆத்மாவின் வெளிச்சமாக அவனது புத்தி மிளிர்கிறது

அவனிடம் செயல்படும் முக்குணங்களின் அளவீடுகளை பொறுத்த அளவு புத்தியும் அதனது தெளிவும் இயங்கி அவனை வழிநடத்துகிறது

கீதை 18 : 30 எந்த புத்தி புண்ணியத்தை விருத்தியாகும் மார்க்கத்தையும் பாவங்களை நிவிர்த்தியாக்கும் மார்க்கத்தையும் ; செய்யத்தகுந்தது செய்யத்தகாதது என்ற தெளிவால் பயம் ; குருட்டுதைரியம் கடந்த நிலையில் தளைகளிலிருந்து விடுதலை பெறுகிறதோ அந்த புத்தி சாத்வீக புத்தி ஆகும்

ஸ்ரீகிறிஷ்ணர் உள்முக வளர்ச்சியையும் அதன் தொடர்பாக சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அந்த மனிதன் செய்யக்கூடிய ஆன்மீக சேவையையும் சேர்த்தே சொல்கிறார்

சாத்வீக புத்தி நாளும் தன் ஆத்மாவில் புண்ணிய வளர்ச்சியை ஒழுங்கு படுத்திக்கொள்கிறது ; தன் ஆத்மாவில் உறைந்துள்ள பாவங்களை கண்டுணர்ந்து அதிலிருந்து விடுபடும் வழியையும் ஒழுங்கு படுத்திக்கொள்கிறது

இந்த அனுபவமே செய்யத்தகுந்தது செய்யத்தகாதது என்ற ஞானத்தை விருத்தியாக்குகிறது

மயங்கிய புத்தி வீணாக பயப்படும் ; அல்லது குருட்டு தைரியத்தால் வாங்கி கட்டிக்கொள்ளும்

ஞானத்தால் செழுமைப்படும் சாத்வீகியோ தான் வளர்வது போலவே சமூதாயத்தையும் இழுத்து மேலே உயர்த்தும் தன்மையையும் அடைவான்

கீதை 18 : 31 பிருதையின் மைந்தனே ; எந்த புத்தி தர்மம் எது அதர்மம் எது ; செய்யத்தகுந்தது எது செய்யத்தகாதது எது என தெளிவுர முடியாமல் அல்லாடுகிறதோ அது ராஜச புத்தி எனப்படும்

ராஜச புத்திக்கு அனுபவம் ஞானம் கொஞ்சம் உண்டு ; அது குறிப்பிட்ட அளவை கடராததால் அல்லாடுதல் இருக்கும்

நாம் செல்லுகிற பாதை சரிதானா என்ற குழப்பம் உண்டாகும்

அததகைய நிலையில் சாத்வீகியின் ; குருமார்களின் ஆலோச்னையை கேட்டுக்கொள்வது நல்லது

கீதை 18 : 32 ஆனால் எந்த புத்தி தர்மத்தை அதர்மம் என்றும் செய்யத்தகாததை செய்யத்தகுந்தது என்றும் செய்யத்தகுந்ததை செய்யத்தகாதது என்றும் தீர்மானிக்கிறதோ அந்த புத்தி மாயையால் சூழப்பட்ட தாமச புத்தியாகும்

சாத்வீகி தெளிந்த ஞானத்தால் அச்சம் அற்றவனாக இருப்பான் ; அதே போல தாமசமும் குருட்டு தைரியம் உள்ளதாக இருக்கும்

சாத்வீகம் என்பது அசப்பில் தாமசம் போலவே தோன்றும் என்பார்கள் ; அசந்தால் தாமசமாக தாழ்ந்து விடக் கூடிய வாய்ப்பும் உண்டு

அப்படி நேராமல் இருக்க இறைவனின் பரிபூரண ஆசிகள் வேண்டும் என்பதை சாத்வீகி அறிவான்
கீதை 18 : 33 அர்ஜுணா ; இறைவனைத்தவிர வேறேதிலும் நம்பிக்கை இல்லாத சகஜ யோகத்தை அப்பியாசித்து மனதையும் ஐம்புலன்களையும் உயிரில் சதா நிலைநிறுத்துகிறவனே சாத்வீகி

கீதை 18 : 34 ஆனால் பலன் விளைவில் பற்று கொண்டு அறம் ; பொருள் ; இன்பம் என உலகியலில் அங்கீகரிக்கப்பட்டவகைகளிலே கவனம் வைக்கிறவன் ராஜசத்தில் நிலை நிற்கிறவன் ஆவான்

கீதை 18 : 35 துர்க்குணம் உள்ளோன் அச்சம் கவலை தூக்கம் துயரத்துடன் செருக்கையும் விடாமல் செயல்படுகிறானோ அவன் தாமசத்தில் நிலை நிற்பவன் ஆவான்

வெளியே செயல்பாடுகளில் இறைவனையே நம்பி இறைவனையே சார்ந்து செயல்படுவதாக காட்டிக்கொள்கிற பக்தி யோகிகள் உள்ளார்ந்த செயல்பாடுகளில் மனம் மற்றும் புலன்கள் அவர்களது உயிரிலேயே நிலைத்திருக்கும் என்கிறார் ஸ்ரீ கிறிஷ்ணர்

ஏனென்றால் யோகத்தை தொழில் நுட்பமாக்கி அதை அப்பியாசிக்கிறவர்கள் சித்தர் பாடல்கள் & சூஃபி ஞானிகள் உபதேசங்கள் மூலமாக பல உன்னதமான தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்கிறார்கள் . பெரும்பாடு பட்டு அவர்கள் அடைந்தும் அடையாததை பக்தி யோகத்தில் தன்னியல்பாகவே அடைந்துகொள்கிறார்கள் என்கிறார் ஸ்ரீகிறிஷ்ணர்

சாத்வீகத்தின் நிலை இதுவென்றால் ராஜசம் தாமசம் இவைகளோ ஆன்மீக அப்பியாசத்தை உலகியல் காரியங்களில் வெற்றிகரமாக பயன்படுத்தும் மார்க்கத்தாரிடம் இருக்கின்றன

இத்தகைய குருகுலங்களை ஸ்ரீகிறிஷ்ணர் கண்டிக்கவில்லை . அவரவர் தகுதிக்கேற்ற குருமார்கள் இருக்கவே செய்வார்கள் . அப்படி பல படித்தரங்களில் ஆன்மாக்கள் வளர்ந்தே உன்னதம் அடைவார்

ஆனால் அந்த ஆன்மீக பயிற்சிகள் ராஜோ மற்றும் தாமசத்திற்குள்ளேயே ஊசலாடுபவை

தியான யோக பயிற்சியோடு சமுதாய சட்டங்களால் அறம் பொருள் இன்பம் என வரையறுக்கப்பட்ட எல்லைகளை மீறாமல் உலகியலில் சாதனை செய்வோர் ராஜரீகம் உள்ளவர்கள் ஆவார்கள்

ஆனால் அசந்தால் அவர்கள் அச்சம் கவலை தூக்கம் துயரத்துடன் செருக்கையும் விடாத நிலைக்கும் ஆளாவார்கள் அது ராஜோ அல்ல தாமசத்தில் நிலை நிற்பதாகி விடும் என எச்சரிக்கிறார் ஸ்ரீகிறிஷ்ணர்

கீதை 18 : 36 பரத குல செம்மலே ; இப்போது அப்பியாசிக்கப்படும் மூன்று விதமான சுகம் பற்றிய இலக்கணத்தையும் என்னிடம் கேள்

கீதை 18 : 37 ஆரம்பத்தில் விஷம் போலவும் முடிவிலோ அமிர்தம் போல தித்திக்கும் பஜனை ; தியானம் ; சேவை ஆகியவைகளில் எவனின் மனம் நிலைக்கிறதோ ; அந்த பயிற்சியால் இன்ப துன்பத்தை கடந்தவன் ஆகிறானோ அவன் சதா இறை பேரின்பத்தில் நிலைத்தவன் ஆவான்

கீதை 18 : 38 ஆரம்பத்தில் அமிர்தம் போலவும் முடிவிலோ விஷம் போலவும் இம்ஸிக்கும் புலன்களால் இன்பமாக நுகரப்படுபவைகளில் எவனின் மனம் நிலைக்கிறதோ ; அந்த பயிற்சியால் அவன் சதா ராஜச இன்பத்தில் நிலைத்தவன் ஆவான்

கீதை 18 : 39 எந்த சுகம் ஆரம்ப காலத்திலும் அனுபோகத்தின் போதும் பின் விளைவிலும் மயக்கத்தை உண்டாக்குகிறதோ ; ஆத்மா மாயையால் பீடிக்கப்படுவதால் சோம்பல் தூக்கம் கவனமின்மை ஆகியவற்றால் அல்லாடுகிறதோ ; அவன் சதா தாமச இன்பத்தில் நிலைத்தவன் ஆவான்

மேற்கண்ட மூன்றும் அவரவ்ர் ஆத்மாவின் தரத்தை பொறுத்த அனுபவமாகும்

சாத்வீகத்தில் முற்பிறவியில் வளர்ந்த அளவு இப்பிறவியில் இயல்பாகவே பஜனை ; தியானம் ; சேவை ஆகியவைகளில் எவனின் மனம் நிலைக்கிறதோ அவன் அவ்வப்பொழுது இறை பேரின்பத்தில் நிலைப்பான்

ராஜசத்தில் முற்பிறவியில் வளர்ந்த அளவு இப்பிறவியில் இயல்பாகவே ராஜரீக செயல்பாடுகளில் காரிய சித்தி உள்ளவன் ஆவான் . ஆனால் அதில் அவன் பிறரின் நியாயத்தை அடக்கி ஒடுக்குகிறவன் ; அளவுக்கும் அதிகமாக பணம் சம்பாதிக்கிறவன் ; அதை தொழில் நேர்த்தி ; தொழில் தர்மம் என சாக்கு சொல்லிக்கொள்கிறவன் பிறரின் பாவத்தையும் சேர்த்தே சம்பாதிக்கிறவன் ஆகிறான்

உலகியல் வாழ்வில் காரிய சித்தி போல இனித்தாலும் முடிவிலே பாவத்தையும் துன்பத்தையும் வருவிக்கும்

இதற்கு எளிய பரிகாரம் தன்னால் பின்பற்ற முடியாவிட்டாலும் இறைமனிதன் ஒருவனை போஷித்து அவனின் செயல்பாடுகளுக்கு பக்கபலமாக இருப்பதாகும்

இப்படித்தான் ஆன்மீகர்களுக்கு பக்க பலமாக இருந்த அரசுகள் நிலைத்தன

ஆனால் முற்பிறவியில் பாவத்தால் பீடிக்கப்பட்டவர்களோ ; அதின் விளைவாக மனோ மாயைகளால் பீடிக்கப்பட்டவர்களாக கீழான உடல் இச்சைகளுக்கே வாழ்வை செயல்படுகிறவர்களாக அல்லாடுவார்கள்

கீதை 18 : 40 இயற்கையாகவே உண்டாகும் இம் முக்குணங்களின் ஆதிக்கத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட பிரகிருதிகள் இப்பூவுலகிலோ ; வானத்திலோ அல்லது தேவலோகத்திலும் கூட இல்லை

கீதை 18 : 41 இயல்பாக அவரவ்ரிடம் உள்ள முக்குணங்களின் கலவைகளை பொறுத்தே அவன் பிராமணனா ; ஷத்ரியணனா ; வைசியணனா அல்லது சூத்ரணனா என ஆத்ம தரம் அடைகிறான்

கீதை மிகத்தெளிவாகவே பிறப்பால் யாரும் பிராமணர் இல்லை என்றே சொல்கிறது

எல்லா ஜாதிகளிலும் ; எல்லா மததினரிலும் ; எல்லா நாட்டினரிலும் அவர்வர் இயல்பால் நான்கு வர்ணாசிரமங்கள் உண்டாகி செயல்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறது

எனது பக்கத்து கிராமத்தில் ஏழைத்தாய் ஒருத்தி கல்லுடைத்து இரண்டு மகன்களை ஆளாக்கினாள் . மூத்தவன் அரசு பள்ளிகளிலேயே கல்வியில் திறனால் பொறியியல் படித்து அரசில் மாவட்ட அதிகாரியாக பரிணமித்து பேரும் புகழும் அதிகாரமும் ஆக வலம் வந்தார் . ஓய்வு பெற்றார்

அவரின் சொந்த தம்பி கல்வி வராததால் அண்ணன் சம்பாதித்த பண்ணையில் பண்ணை வீட்டில் ஒட்டுக்குடித்தனம் பண்ணையாளாக வேலை செய்து வருகிறார்

அவரவ்ர் தகுதிக்கேற்ப புதிய சம்பந்தங்கள் பிள்ளைகள் தரம் பிரிந்து விட்டன . ஒரே தாயின் வயிற்றில் அடுத்தடுத்து பிறந்தவர்கள் ஒருவர் ஷத்ரீயனாகவும் ஒருவர் சூத்ரனாகவும் பரிணமித்துவிடுகிறார்கள்

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஜாதிகளிலும் இந்த நான்கு வர்ணத்தார் பரிணமித்து அந்தந்த வர்ணத்தார் உறவுக்குள் வருகிறார்கள்

சமுதாயம் சீராக இயங்க அந்தந்த வர்ணத்தார் இயல்பு என்ன அவர்கள் செய்ய வேண்டிய தர்மம் என்ன என்பதை இலக்கணமாக கீதை சுட்டிக்காட்டியதை கீதை ஜாதிகளை தூக்கி பிடித்து இந்தியாவை கெடுத்து விட்டதாக திருட்டு திராவிட பிழைப்புவாதிகளும் மதமாற்றிகளும் மததுவேசிகளும் பரப்புரை செய்து வருகிறார்கள்
கீதை 18 : 42 மன அடக்கம் ; புலன் அடக்கம் ; ஆன்ம வாழ்வை கடைபிடிப்பதற்கான சுய பரிசோதனையும் புற பொறுமையும் ; அகத்தூய்மை மற்றும் புறத்தூய்மைக்கான முயற்சியும் ; பிறர் குற்றம் பொறுத்தலும் ; மனம் உடல் வாக்கு ஆகியவற்றில் முடிந்தளவு நேர்மையும் ; வேதம் சாஸ்திரம் கடவுள் பரலோகம் முதலியவற்றில் தேடலும் ; கற்றலும் கற்பித்தாலும் ; பரமார்த்துவத்தை அனுபவத்தில் துய்த்தாலுமே பிராமணத்துவம் ஆகும்

கீதை 18 : 43 வீரமும் சூரமும் ; மிடுக்கும் ; பலமும் ; சாதுர்யமும் ; போரில் சளைக்காமல் முன்னேறுதலும் ; தானமும் தர்மமும் ; நிர்வாகமும் ஷத்ரியத்துவம் ஆகும்

கீதை 18 : 44 உழவு முதலான உற்பத்தி செய்தலும் ; பசுக்களை காப்பதும் ; வியாபாரத்தில் தர்மத்தை கடைபிடித்தலும் வைசியத்துவம் ஆகும் . அனைவருக்கும் சேவை செய்வதுமே ஸூத்ரத்துவம் ஆகும் .

பிராமணத்துவம் என்று சொல்லப்பட்ட சுய பரிசோதனையுடன் கூடிய ஆன்ம வாழ்வில் இடையறாத தேடல் என்பது பிறப்பால் வருவதல்ல . ஒரு பெருங்கூட்டத்திற்கு இருக்க கூடியதுமல்ல . இங்கொன்றும் அங்கொன்றுமாக சில நபர்களே இப்பயிற்சியில் இருப்பார்கள்

பூசைப்பணியை பிராமணத்துவம் என்று கீதை சொல்லவே இல்லை .
உண்மையில் பூசைப்பணி சேவை வகைப்பட்டது ஆனதால் சூத்ரத்துவதிலேயே வருகிறது

ஆனால் கருவறைப்பணியில் இருக்கும் போது ; கருவறைக்குள் நுழையும் போது கடைபிடிக்க வேண்டிய தூய்மை ; புறசுத்தம் மற்றும் அகசுத்தம் செய்து மடிகட்டிக்கொள்ளுதல் அவசியம் . மேலும் அங்கு வரும் மனிதர்களின் அசுத்தங்கள் தோஷங்கள் தொட்டு தீட்டு கருவறைக்குள் நுழைய கூடாது என்ற ஆகம நியமங்கள் கருவறைப்பணியில் இல்லாத போது செய்யக்கூடியவை அல்ல . அவசியமும் இல்லை

கருவறைப்பணியில் இல்லாத சமயம் மடி கட்டிக்கொள்ளாதபோது சாதாரண மனிதர்களுடன் இயல்பாக தொட்டு பேசுவது தவறே இல்லை

மிக ஆதியிலும் கிராம கோவில்களில் இன்றளவும் அவரவ்ர் குலத்தில் ஒரு குறிப்பிட்ட பூசாரி குடும்பம் பாராம்பர்யமாக வந்துகொண்டேதான் உள்ளது

அவர்கள் அன்றாட தொழில்களுடன் பூசைப்பணியை கூடுதலாக செய்வார்கள் . ஆனால் யார் வேண்டுமானாலும் கருவறைக்குள் நுழையலாம் என அங்கும் இல்லை . பிறப்பால் அந்த குடும்பங்களுக்கே அந்த தகுதி வருகிறது

அதாவது பூசைப்பணி என்பது ஒரு தேர்வு ; அந்தந்த தேவர்கள் அதற்கான ஒரு அங்கீகாரம் கொடுக்க வேண்டும்

கிறிஸ்தவத்திலும் அந்த தகுதியை அடைந்தவர்கள் மட்டுமே அல்டர் என சொல்லப்படும் பீடத்தில் நிற்க முடியும்

அதுபோல இசுலாத்திலும் இமாம் என்ற தகுதியுடையவர்களே மிம்பரில் நிற்க முடியும்

ஆனால் யூதர்களில் அதாவது ஆப்ரகாமிய வேதங்களின் துவக்க காலத்தில் மோசே மற்றும் அவரது தம்பி ஹாரூன் குலத்தாருக்கு மட்டுமே என பூசைப்பணி பிறப்பால் ஒதுக்கப்பட்டு அவர்கள் வேறு தொழில் செய்வதும் தடை செய்யப்பட்டது

அப்படி பூசைப்பணிக்கு மட்டுமே வேறு பிரிக்கப்பட்ட பூசாரிகள் காலப்போக்கில் தங்களின் பாதுகாப்பு கருதி மேட்டிமையை பிற குலத்தார் மீது பில்டப் செய்தது பைபிளிலேயே எழுதவும் பட்டுள்ளது

ஆக தீண்டாமை என்ற கொடுமைக்கு மூல காரணமானவர்கள் ஆப்ரகாமியர்களும் அவர்களின் வகையறாக்கள் ஆன கிறிஸ்தவர்களும் இசுலாமியர்களும் ஆகும்

இஸ்ரேலில் ஒரே கோவிலில் பூசைப்பணி செய்து ஹாரோனியர்கள் பிழைக்க முடியவில்லை என்றான பிறகு அவர்கள் வேறு இனத்தார் ; நாட்டுக்கும் ஏன் இந்தியாவுக்கும் வந்து அங்கு பூசைப்பணியை செய்கிறவர்களாக தங்களை மாற்றிக்கொண்டார்கள்

ஆனால் முந்தி வந்த ஹாரோனியர்கள் தாங்கள் வந்த இடத்தின் கலாச்சார பண்பாடுகளை வேதங்களை ஏற்றுக்கொண்டு தங்களை மாற்றிக்கொண்டார்களே தவிர தங்கள் மதத்தை திணிக்கவில்லை . மதமாற்றம் ; இனமாற்றம் செய்யவில்லை

ஆனால் யூதர்களில் இன்றளவும் ஹாரோனியர்கள் தங்களை ஆசாரியர்கள் என்ற மேட்டிமையை காட்டியே வருகிறார்கள் . அதுபோல பாஸ்ட்டர்கள் பாதிரிகளும இமாம்களும் மேட்டிமையை காட்டியே வருகிறார்கள்

ஆனால் இந்தியாவைப்போல ஒரு குலமே மேட்டிமையை கடைபிடிப்பதாக இல்லை

இந்து மதத்தில் முந்தி வந்த ஹாரோனியர்களே இந்த மேட்டிமையை கடைபிடித்து ; இப்போது அது அடக்கப்பட்டு விட்டது

தீண்டாமை என்ற கொடுமையே ஆப்ரகாமியர்களின் சரக்கு ஆக இருக்கும் நிலையில் பிந்தி வந்த ஆப்ரகாமிய கிறிஸ்தவர்களும் இசுலாமியர்களும் இந்துமதம் தீண்டாமை கொடுமையுள்ளது என தவறாக பரப்புரை செய்கிறார்கள் .இன்னும் பொய்யின் உச்சத்திற்கே சென்று இந்துமதமே இந்தியர்களின் மதமல்ல என அதை விட்டு வெளியே வாருங்கள் ; நாங்கள் உங்களை வேறு இனத்தானாக மதம் மாற்றி விடுகிறோம் என்கிறார்கள் .

ஆனால் இந்து மதத்தின் வேதங்களை கொடுத்த எவரும் அவதாரங்களும் பிறப்பால் சாதாரண ஜாதிகளை சேர்ந்தவர்களே .

ஞானிகளாகவும் சித்தாந்திக்களாகவும் சாமியார்களாகவும் மகான்களும் வந்து சீர்திருத்துகிறவர்கள் இந்திய குடிகளே

ஏற்கனவே சேவை வகைப்பட்ட சூத்திரர்களே பூசாரிகள் என்றாலும் அவர்களை பிராமணர்கள் என ஜாதிப்பெயர் சொல்லப்பட்டது பிற்காலத்திய தவறு

ஆதியில் இல்லை.

ஆகவே பிராமணர்கள் என்ற ஜாதிபெய்ரை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என தடை செய்யப்படவேண்டும்

எல்லா ஜாதிகளிலும் குருமார்களே பிராம்ணர்கள் ; மற்றவர்கள் பூசைப்பணியாளர்களே ஆகும்

அதுபோல எல்லா ஜாதிகளிலும் அரசியல் தலைவர்கள் ; அரசு அதிகாரிகள் சத்ரியர்கள் ஆகும்

அதுபோல எல்லா ஜாதிகளிலும் தொழில் வியாபாரம் செய்வோர் வைசியர்களே

அதுபோல எல்லா ஜாதிகளிலும் முதல் போடாத நிர்வாகம் இல்லாத சேவைத்தொழில் செய்வோர் - பூசைத்தொழில் உட்பட சூத்திரர்களே ஆகும் .

இதில் சத்ரியர்கள் வைசியர்கள் நிர்வாகம் நிமித்தம் பிறரை அடக்கும் வேலை செய்வதால் அவர்கள் சந்ததி நீடித்திருக்க ஏதாவது ஒரு குருவை சார்ந்துகொண்டு பொருளால் அவரை தாங்குவது உத்தமம் .
சுயதர்மத்தை கைவிடாதே

கீதை 18 : 45 தன் மேல் தானாக வந்த கர்மங்களில் முழு முனைப்புடன் ஈடுபடும் மனிதன் சித்தி அடையும் பாதையில் பயணிக்கிறான்

அது எவ்வாறு என்பதை கேட்பாயாக

இறைவனின் அனுமதி இல்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சிலகர்மங்களை நாம் செய்யும் படியாக நாம் மேலே சுமருவதில்லை

பாவ சாப காரியங்கள் தவிர ; நமக்கு அதில் ஏதும் ஆதாயமில்லை ; சம்மந்தமில்லை என தட்டிக்கழிக்கலாகாது

தட்டிக்கழிப்பதால் அப்பொருப்பை இறைவன் மாற்றாருக்கு மாற்றியும் விடுவார்

அல்லது அரைகுறையாக செய்வதாலும் செயலை கெடுத்த பாவம் வரும்

இறைவனுக்காக என்று நாம் மேல் சுமரும் நல்ல கர்மங்களை முழு அக்கறையுடன் நிறைவேற்ற முயல வேண்டும்

கீதை 18 : 46 எந்த பரம்பொருளிலிருந்து சகல அசையும் அசையா பிரகிருதிகள் உண்டாகிறவையோ : எந்த பிரபஞ்சத்திலிருந்து உலகம் முழுமையும் உண்டாயிருக்கின்றபவோ அந்த பரமாத்மாவின் அங்கமாக தன்னுடைய கர்மங்களை அர்ப்பிக்கிறவன் பரம சித்தியை அடைவான்

தான் அந்த பரமாத்மாவின் அங்கம் என உணர்ந்து பிரபஞ்சம் முழுமையும் செயல்படுவதில் தன்னுடைய பங்கை நிறைவேற்றுகிறேன் என்ற அக்கறையுடன் நிறைவேற்ற வேண்டும்

லாபம் ஆதாயம் குறித்த சிந்தனைகள் நம்மை கட்டுப்படுத்தலாகாது

கீதை 18 : 47 நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பிறரது தர்மத்தை காட்டிலும் ; தன்னுடைய சொந்த தர்மம் எதுவோ அதை குறைகளுடன் நிறைவேற்றுவதே உத்தமம்

தன் மேல் சுமர்ந்த கடமைகளை நிறைவேற்றுகிற மனிதன் பாவத்தை அடையமாட்டான்

கீதை 18 : 48 குந்தியின் மகனே ! குறையே உள்ளதாயினும் தன் மேல் சுமந்த கர்ம்த்தை விட்டுவிடலாகாது

நெருப்பை சூழ்ந்துள்ள புகை போலவே எல்லா செயலகளும் ஏதோ ஒருவகையில் குறை உள்ளதாகவே உள்ளது

கீதை 18 : 49 எதிலும் பற்றற்ற மனநிலையுடன் ; ஆசைகளை கடந்து ; உள்ளத்தை அடக்கியவன் சாங்கிய யோகத்தால் கரமத்தளைகலிருந்து விடுதலை அடைகிறான்

அவதார தூதர் கிறிஷ்ணர் இயல்பாக வாழ்க்கையின் நிகழ்வுகள் வழியாக ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களும் உய்வடைவார்கள் என்று ஆறுதல் கொடுக்கிறார்

தானுண்டு தான் பெண்டு பிள்ளைகள் உண்டு என வாழ்வுக்காகவே சிலர் ஓடிக்கொண்டிருப்பார்கள்

அவர்களின் கடமைகளை பூர்த்தி செய்வதே அவர்களை சிறை படுத்தி விடுகிறது

அதை யுகபுருஷன் தவறு என்று சொல்லவில்லை

ஆனால் பிறர் வாழ்வை கெடுக்கலாகாது என்ற நியதியை தாண்டிவிடலாகாது

தான் வாழ பிறரை கெடுக்காதே என்ற லட்சியமே இறை பக்தி ஆகிவிடுகிறது

தன் மேல் சுமத்த கடமையாகிய குடும்பத்தை ஆளாக்குதல் ; சமுதாயத்திற்கு பாரம் ஆகாமல் சொந்த காலில் அவர்களை நிற்க வைத்தால் ; ஆரோக்கியமான வளமான அடுத்த தலைமுறையை உருவாக்குதல் ; இவையும் இறை தொண்டே ஆகும்

நேர்த்தியான முறையில் வளர்க்கப்படாத பிள்ளைகள் சமுதாயத்திற்கு தீங்கு ; துன்பம் தருகிறவர்களாக ஆகிவிடுவார்கள்

ஆகவே அதற்கென காலமும் திறனும் உள்ளவர்களை இறைவன் எழுப்புவார்

அதனால் தீமைகளை கண்டு விலகி ஓடினாலும் தன்னால் இயலாததை இறைவனிடம் பிரார்த்தனையாக வைத்துவிட்டால் போதுமானது

ஆனாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் நாம் நமக்கு சம்பந்தம் இல்லாத பொது காரியங்கள் சிலவற்றை செய்யும் படியாக அமையும்

அங்கு வேறு யாரும் இருக்கமாட்டார்கள் ; நாமே அதை செய்யும்படியாக இருக்கும்

அதனால் நமக்கென்ன ஆதாயம் என ஒதுங்கலாகாது என்றும் கிறிஷ்ணர் வழிகாட்டுகிறார்

இறைவனுக்கு அர்ப்பிதமாக அதை முடிந்தளவு முழு மானதுடம் செய்யவேண்டும்

தன் மேல் சுமரும் கடமைகள் என்ற அர்த்தம் இறைவனால் உண்டாக்கப்பட்டவை என்னும் அர்த்தத்தை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்

இவை எல்லாமே சுய தர்மமே ஆகும்

சொந்த வாழ்வில் குடும்பத்தை ஆளாக்குவது சுய தர்மம் என்றால் பிறப்பால் குலம் கோத்திரம் என்று ஒரு சுய தர்மம் என்று உள்ளது

ஜாதி என்பதே இல்லை என்பதாக பரப்புரை செய்யும் கிறிஸ்தவ்ர் ; இசுலாமியர் அவர்களின் வேதத்தில் குலம் கோத்திரம் பற்றிய குறிப்புகள் திரும்ப திரும்ப வருவதை கவணிக்க தவறுகிறார்கள்

மத்தேயு 1 : 1. ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:

2. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;

இப்படி சோர்ந்துபோய் படிக்கமுடியாத அளவு 42 தலைமுறை பெயர் சொல்லப்பட்டுள்ளது

16. யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.

17. இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.

மொத்தம் 42 தலைமுறை குறிப்பு எதற்காக பைபிளில் கொடுத்துள்ளார்கள் என்று சிந்திப்பதேயில்லை

யூதர்களின் எந்த குடும்பத்திற்கு சென்றாலும் இது போல வம்ச அட்டவணை அவர்கள் குடும்பத்தில் வைத்திருப்பார்களாம்

இதுவே குலம் பைபிள் முழுவதிலும் எல் அல்லது ஜெகோவா என்ற இறைவன் தன்னை யூதர்களின் குல தெய்வமாகவே வெளிப்படுத்திக்கொள்கிறார்

அவர்களில் 12 கோத்திரம் உண்டு

வெளி 21 :10. பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.

11. அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.

12. அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.

13. வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.

எதிர்காலத்தில் சம்பவிக்க உள்ளதாக வெளிப்பட்ட தீர்க்கதரிசனத்தில் கூட 12 கோத்திரத்தார் அவரவர் வாசல் வழியாகத்தான் பிரவேசிக்க முடியுமாம்

இந்த 12 கோத்திரத்தார் அல்லாமல் மதம் மாறி கிறிஸ்தவர்கள் ஆனவர்களை பைபிள் புறஜாதியார் (Jentiles) என்கிறது .

அதுபோல குரான் நெடுகிலும் குறைசி கோத்திரம் பனு கோத்திரம் என மனிதர்களின் முன்பு சேர்த்தே சொல்லப்படுகிறது

13:11. மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்தேவர்கள் ) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.

42:5. மலக்குகள் தங்களுடைய இறைவனின் புகழைக் கொண்டு தஸ்பீஹு செய்து, உலகில் உள்ளவர்களுக்காக மன்னிப்புத் தேடுகின்றனர்; அறிந்து கொள்க! நிச்சயமாக அல்லாஹ்வே மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.

மனிதர்களை காக்கும் மலக்குகள் குலதெய்வங்கேளே ஆகும் . அவாகள் தத்தமது குலத்தினருக்காக அல்லாஹ் விடம் பரிந்தும் பேசுகிறார்களாம்

இந்துமதத்தில் குலதெய்வத்தை வருடம் ஒருமுறையாவது கொண்டாடவேண்டும் அதாவது குலதெய்வத்தின் நாமத்தால் அல்லாஹ் வை வழிபடவேண்டும்

இந்த குலதெய்வங்களை மதிக்காமல் போனால் சிரியா லெபனான் ஈராக் ஆப்கானிஸ்தான் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் எடுத்ததெற்கெல்லாம் குண்டை வெடித்து குய்யோ முறையோ என அலறி நாட்டை சுடுகாடாக மாற்றிய நிலைமை வருகிறது

இத்தனை கலேபரத்திலும் அரேபியாவில் எந்த கலவரமுமில்லை

ஏனென்றால் ஆப்ரகாம் மூலமாக வந்த கிருபை என்னவென்றால் யூதர்களுக்கும் அரபியர்களுக்கும் அல்லாஹ் வே பரம்பரை குலதெய்வமும் கூட

அதில் தடுமாற்றம் ஆன அரபியர்களையே அடித்து உதைத்து கொன்று அச்சமூட்டி இஸ்லாத்திற்கு மாற்றினார் முகமது நபி

அவர் அடுத்த இனமக்களையோ நாடுகளையோ தாக்கவில்லை இஸ்லாத்துக்கு மதம் மாற்றவில்லை

முகமதுநபிக்கு பிந்திய நாடுபிடி பேராசைக்கார காலிப் கள் ஈரான் ஈராக் எகிப்து சீரியா லெபனான் துருக்கி என தாக்கி இசுலாத்துக்கு மாற்றினர்

தங்கள் குலதெய்வத்தை புறக்கணித்து அல்லாஹ் வை மட்டுமே வழிபடுவதால் இந்த நாடுகளில் குழப்பங்களே மிஞ்சுகின்றன்

ஆப்ரகாமியர் அல்லாத மக்களுக்கு ஆப்ரகாம் தகப்பனாக மாட்டார்

ஆகவே மாற்று இன முஸ்லீம்கள் தங்கள் குலதெய்வத்தின் நாமத்தினால் அல்லாஹ் என்று வழிபடுவதே உத்தமம்

அந்த குல தெய்வங்களும் அல்லாஹ் விடம் பரிந்துபேசுவார்கள்
கீதை 18 : 50 ஞான யோகத்தினால் அடையக்கூடிய உயரந்த நிலை எதுவோ அந்த நிஷ்காமிய சித்தியை அடைந்த மனிதன் பிரம்மத்தோடு ஒன்றுகிறான் ; அந்த முறையை சுருக்கமாக கூறுகிறேன் கேள்

கீதை 18 : 51 தெளிந்த புத்தியும் அதனால் விளையும் நுட்பமும் ; சாத்வீக உணவை அளவுடன் உண்பவனாகவும் : ஒலி முதலான பெளதீகத்தால் பாதிக்கப்படாத பயிற்சியுடையவனாகவும் ; ஏகாந்த இடத்தில் தனித்திருந்து ; உள்ளத்தையும் புலன்களையும் பரத்தில் நிலைநிறுத்தி ; மனம் வாக்கு காயம் (உடல்) இவற்றை வசப்படுத்தியவன் விருப்பு வெறுப்பு ; இன்பம் துன்பம் போன்ற இருமைகளை கடந்து விடுகிறான் .அதுவே திடமான வைரவ நிலை எனப்படுகிறது .ஆத்ம பலம் எனப்படுகிறது

கீதை 18 : 52 அகங்காரத்தையும் ,கர்வத்தையும் , காமத்தையும் ,குரோதத்தையும் , சொத்து குவித்தலையும் கடந்து எப்போதும் பரத்தோடு ஒன்றி இருமைகளை வென்று மங்காத சாந்தியோடு இருப்பான்

கீதை 18 : 53 அவனே சத்,சித்,ஆனந்தமயமாகி பரப்பிரமத்தில் இரண்டர கலப்பத்தற்கு தகுதி பெறுகிறான்

நிஷ்காமிய கர்மா ; நிஷ்கலங்கா என அடிக்கடி சிவன் ; நாராயணன் முதலான அதிதேவர்களைப்பற்றி கேள்விப்படுகிறோம்

அந்த தூய்மையான புனித நிலை ஆத்மா பெற வேண்டுமானால் ; யோக தியான தவ தானம் மட்டும் போதாது ; அவையெல்லாம் ஒரு பயிற்சி சாதனை முயற்சி மட்டுமே

ஆனால் விளையக்கூடியது எது ; தேவை எது என்றால் நமது ஆத்மா கலங்கங்கள் ஒவ்வொன்றாக களைந்து தூய்மை அடைவதுதான்

பல பிறவிகளாக நமது ஆத்மாவில் என்னென்ன கறை திரைகள் பதிவாகி உள்ளது என்பதை நாமே அறியோம்

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வராததால் வெளியே வராமல் நமக்குள்ளேயே ஒளிந்தும் இருக்கலாம்

வெளிப்பட்ட விஷயங்களை கடப்பதற்கே நாம் பெரும் போராட்டங்களை நடத்தி வெற்றியும் பெற்றிருக்கலாம்

அப்படிபட்ட பட்டறிவு இல்லாமல் அந்த விஷயத்தில் முக்தி இல்லை

ஒவ்வொன்றாக நாம் முக்தி அடைய அடைய எப்போது ஆத்மா முழு தூய்மை அடைகிறதோ அப்போது மட்டுமே எதனாலும் பாதிக்கப்படாத மன நிலையை நாம் எய்த முடியும்

ஞானிகள் ; மார்க்கங்களை உற்பத்தி செய்த அவதாரங்கள் எல்லாம் இப்படி நீ முயற்சித்தால் முழுமை அடையலாம் என தைரியத்தையும் தெம்பையும் டோக்கன் போட்டு நமக்கு கொடுத்திருக்கிறார்களே தவிர இந்த மார்க்க வழிபாடுகளை அல்லது பயிற்சியை தியானத்தை பிரார்த்தனையை செய்துகொண்டிருந்தாலே போதும் என சொல்லவில்லை

இப்பயிற்சிகள் செய்துகொண்டிருக்கும் போது அவரவர் ஒவ்வொரு விஷயத்திலும் ஒவ்வொன்றாக நாமே முக்தியை அடைந்தோமா என உள் முகமாக உணர்வதே தனிமனித முக்திக்கும் முடிவான சித்திக்கும் வழி

முக்தி என்பது முன்னுறு சாதனம்
சித்தி என்பது முடிவான பேரின்பமாம்

ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றார் வள்ளலார் ; ஆனால் மோட்ச வீடு என சொல்லவில்லை

இதோ இது ஒரு சாவி ; இதை வைத்து நீதான் பயணித்து மோட்சத்தை அடையவேண்டும்

இப்பயிற்சிகள் அனைத்துமே உயவு முன்னுறு கருவி அவ்வளவே

உடனே ஏதாவது ஒரு குரு மார்க்கத்தை அடைந்தவுடன் ஆகா ஓகோ எங்க குரு தண்டி ; எங்க மார்க்கமே உயர்ந்தது என மத பிரச்சாரம் செய்தாலே போதும் பரலோகம் போயிரலாம் என புற மார்க்கமாக எளிதாக பாதை கிடைத்து விட்டதாக மனிதர்கள் நம்பிக்கொள்கிறார்களே தவிர ; இவை எவையுமே புண்ணியம் பலம் கொடுக்குமே தவிர உன்னை நீ உணராமல் ; உன்னை நீ தூய்மை செய்யாமல் உனக்கு எந்த ஆத்ம முன்னேற்றமில்லை

உன்னை நீ உணர்வதும் பிரம்மத்தை உணர்வதும் ஒன்று

ஏனெனில் இறைவன் தனது முழு சாயலில் தன்னைபோலவே மனிதனை படைத்துள்ளார்

ஆதியாகமம் 1 : 26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.

29. பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது

தனது சாயலில் படைத்ததும் அல்லாமல் தன்னைப்போலவே ஆக்கல் ; அழித்தல் ; காத்தல் என்கிற முத்தொழிலும் ஓரளவு உள்ளவனாகவும் திறன் கொடுத்துள்ளார்

குரான் 7:11. நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு (சிவனுக்கு) ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் (தேவர்களிடம்) கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.

7:12. “நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.

7:16. (அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.

7:17. “பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்).

மனிதர்களுக்கு முந்திய படைப்புகளான தேவர்களில் சிலர் இறைவனை பகைத்து அசுரர்களாக மாரியாதே மனிதனை படைத்ததை வைதுத்தான்

அந்த முதல் மனிதனே சிவன்

இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவர் ; மட்டுமல்லாது அல்லாஹ் வை வழிபடுவது போலவே தேவர்கள் அனைவரும் சிவனையும் (ஆதமையும்) வழிபடவேண்டும் என்றே உத்தரவிட்டார்

சிவன் அல்லாஹ் வால் படைக்கப்பட்டவர் என்றாலும் அதிதேவர் அந்தஸ்தோடு வழிபடப்பட வேண்டியவர் என்றே ஆப்ரகாமிய வேதங்களும் சொல்கின்றன

மேற்போக்காக மதம் மாற்றுவது ஒரு பக்தி தொண்டு என மனிதர்களாக மதபேதம் செய்துகொண்டார்களே தவிர வேதங்களை உற்று நோக்கினால் ஒன்றினால் ஒன்று செழுமைப்படுவதாகவே உள்ளது

இறைவனின் தூதர்கள் அருளாளர்கள் அவதாரங்கள் சொன்ன இறை வாக்குகளை ; தங்கள் ஆட்சி அதிகாரத்திற்காக மத பேதமாக செய்து இன மாற்றம் ; பெயர் மாற்றம் செய்து மக்களை பிரிப்பதற்காக பயன்படுத்திக்கொண்டார்கள்

மத பேதங்கள் ; மத வெறிகள் ; மத சண்டைகள் அசுர ஆவிகளின் வழிகேடு ஆகும்

இருமைகள் அற்ற தூய்மை ஆத்மாவில் அடையாமல் இறைவனை உணரமுடியாது ; சொர்க்கம் செல்லவும் முடியாது

மத்தேயு 5:8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

5:9 சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.

5:5 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
கீதை 18 : 54 சத் , சித் ,ஆனந்த மயமான பிரம்மத்தில் ஒன்றி அதன் பிரசன்னத்திலேயே திளைக்கும் ஆத்மாவாக மாறிவிடுகிறான் . அதானால் அவனுக்கு எதிலும் ஈர்ப்புகளும் இல்லை ; வருத்தமும் இல்லை என்னும் நிலை அடைகிறான் . அனைத்து படைப்புகளிடமும் சம பாவனை ; சாந்தியோடு பரபிரம்மத்தின் மீதான பக்தியை எட்டுகிறான்

பிரம்மம் ; பரப்பிரமம் என்ற இரு வார்த்தைகளும் மேலோட்டமாக ஒன்று போல அறியப்படுகின்றன

ஆனால் கீதையின் சாரத்தை உணர்ந்த பிறகே பிரம்மம் வேறு பரப்பிரமம் வேறு என்ற நுட்பமான ஞானம் எட்டப்படுகிறது

சர்வ படைப்புகளும் ஆனது பிரம்மம் என்றால் பரப்பிரமம் என்பது அந்த பிரபஞ்சத்தை தன்னிலிருந்து வெளிப்படுத்திய வெட்டவெளியை குறிக்கிறது

பிரம்மம் என்பது பஞ்சபூதம் அடிப்படையான ஜடம் அதாவது பால்வெளிமண்டலத்தில் இயங்கிக்கொண்டுள்ள ஜடமான நட்சத்திரங்கள் அவற்றின் கோள்கள் விண்மீன்கள் உட்பட அனைத்தும் அவைகளில் உயிருடன் இயங்கி வருகிற சகல தேவர்கள் ; அசுரர்கள் ; விலங்குகள் ; மனிதர்கள் ; பல லோகங்களில் தங்கியிருக்கிற ஆத்மாக்கள் ; பாதாளத்தில் அடைக்கப்பட்டுள்ள ஆத்மாக்கள் ; இன்னும் இடமில்லாமல் பூமியின் வான மண்டலத்தில் அலைந்து திரிக்கிற தண்டிக்கப்பட்ட ஆத்மாக்கள் உட்பட அனைத்தும் பிரம்மத்தில் அடங்கும்

இந்த முழுபடைப்பும் பரமாத்மா - பிரம்மம் என்ற நாராயணனே ஆகும் . ஆகவேதான் அறிதுயில் கொள்கிறவராக அவரை உருவம் கொடுத்தார்கள்

ஃப்ரஹ்மபூத ஃப்ரஸந்நாத்மா என்ற பதம் முமுக்தன் -என்ற நிலையை அடைந்த சகஜயோகியை குறிக்க ஸ்ரீகிறிஷ்ணர் பயன்படுத்துகிறார் .

பிரம்மஸ்ரீ என்று சிலர் இப்போது ஸ்டைலாக பட்டம் போட்டுக்கொள்கிறார்களே அவர்கள் இந்த நிலையை அடைந்துவிட்டார்களா என தெரியாவிட்டாலும் இந்த நிலையே பிரமரிஷி என்பது .

அப்படி பிரமரிஷி நிலையை அடைந்த பிறகே அதையும் உருவாக்கிய பரபிரம்மம் என்ற அருவநிலை இறைவனை - ஆதியும் அந்தமும் இல்லாத ஆதிபகவனை பற்றிய வெளிப்பாடு தொடர்பே கிடைக்கும் .

அந்த உன்னதமான இறைவனின் தொடர்பு ; பக்தி லாபமாக கிடைக்கும்

லாபதே என்ற பதம் இங்கு பயன்படுத்தப்படுகிறது

பிரம்மமாகிய ஸ்ரீகிறிஷ்ணர் தன்னில் நிலைத்து தன்னோடு இரண்டர கலந்த ஜீவாத்மனுக்கே தன்னை விட பெரியவரான அருவ இறைவனைப்பற்றிய ஞானம் தொடர்பு போனஸாக கிடைக்கும் என்கிறார்

இன்னும் கீதை 9:25 ல் பூமியை விட்டு கடந்து தனது வாசஸ்தலமான வைகுந்தத்தை அடையும் தகுதியை நீ அடைந்தால் அங்கிருந்து உன்னதமான இறைவனை தரிசித்து பக்தி செய்ய உனக்கு வழிகிடைக்கும் என்கிறார்

இதே கருத்தை ஸ்ரீகிறிஷ்ணர் வெளிநாட்டுக்காரர்களுக்கான அடுத்த அவதாரமான இயேசுவாக வந்து பரம் ஏறுமுன்பும் வலியுறுத்துகிறார்

யோவான் 14 : 1. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; இறைவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.

2. என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

3. நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

அவதார தூதர்கள் பூமியில் இருந்த காலத்தில் மிக சரியாகவே தங்களை குரு என்றுதான் வெளிப்படுத்திக்கொண்டார்கள்

அவர்கள் சென்றுபோன பிறகு அவரது சீடர்களே அவரை இறைவனுக்கு இணையாக்கிக்கொண்டார்கள் . அவர்கள் நாமத்தால் இறைவா என வழிபட வழிகாட்டப்பட்டிருந்தும் இறைவனை விட்டுவிட்டு குருவையே வழிபடுகிறவர்களாக மாறிக்கொள்கிறார்கள்

ராமரை விட ராம நாமமே பெரியது என பட்டிமன்றம் போடுவார்கள் ; ராம நாமம் என்பதும் ராமரும் ஒன்றுதான் என செயல்படுத்துவார்கள்

ராமநாமம் என்றால் என்ன என்பதைக்குறித்த தெளிவான விளக்கத்தை இயேசுவாக வந்த போதும் சொன்னார்

யோவான் 16 : 23. அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்.

24. இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.

25. இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்.

26. அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக்கொள்வீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்வேனென்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை.

27. நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் இறைவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார்.

28. நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார்.

அருவமான அறியமுடியாத இறைவனை இன்றைக்கு பெரும்பான்மையான மனிதர்கள் அல்லாஹ் என அரபியில் அழைக்கும் நிலை உருவாகிவிட்டது

முகமதுநபி அதிதேவர்கள் ஜிப்ரீல் (நாராயணன்) மீகாயீல் ( சிவன்) தரிசனம் பெற்று அவர்கள் மூலமாக அல்லாஹ் வுடன் தொடர்பும் அறிவிப்பும் பெற்று இறக்கிய குரானில் அல்லாஹ் வைப்பற்றி அறிந்து அல்லாஹ் அல்லாஹ் என இசுலாமியர் தொழுதாலும் அல்லாஹ் வின் ஸ்பரிசம் தொடர்பு உணர்வு அற்றவர்களாகவே உள்ளனர் . ஸ்கூல் பிள்ளைகளாக கீழ் படிகளிலேயே வாழ்கிறார்கள் .

ஆகவேதான் ரூபத்தில் அறிந்தவர் மூலமாக அரூபத்தை வழிபாடு என்று இந்துதர்மத்தில் மந்திரங்கள் அனைத்திற்கும் ஒரு பார்மேட் - வடிவம் பீஜமந்திரம் என கொடுத்துள்ளார்கள்

எந்த தேவரின் சிலையின் முன்பு நிற்கிறோமோ அந்த தேவராக ஆனவனை வழிபடுகிறேன் என்ற அர்த்தம் வரும்

ஓம் நம .................... யாய

பெண்ணாக இருந்தால் யை யாய என மந்திரம் சொல்ல பிரார்திக்கவேண்டும்

இன்னும் சிவனுக்கு உருவம் இருந்தும் உருவ வழிபாடு செய்யாமல் உருவமாகிய சிவனும் அருவமாகிய அல்லாஹ் வும் சேர்ந்த அரு உருவம் என சிவலிங்கத்தை ஆலயங்களில் அமைத்து வழிபட்டார்கள்

ஓம் நம சிவா ய - சிவனாக ஆன அல்லாஹ் வை வழிபடுகிறேன்

ஆனால் காலப்போக்கில் இந்த உண்மை மறைந்து ; அறியாதவரை வழிபடுவதற்கு பதிலாக அறிந்தவரையே வழிபடுகிறவர்களாக மாறிக்கொள்கிறார்கள்

இயேசு இவ்வளவு சொல்லியிருந்தும் இயேசுவையே கிறிஸ்தவர்கள் இறைவனாக்கி கொண்டதுபோல

இறைவனை விட்டுவிட்டு தங்கள் மதத்தையே இறைவனாக ஆக்கிக்கொகிறார்கள்

மதமாற்றம் செய்து மதசண்டைகளை போட்டு இன்பம் காண்கிறார்கள்

இதனை சரிப்படுத்தவே மும் மத சமரச வேதம் இப்போது வெளியாகிக்கொண்டுள்ளது

கீதை 18 : 55 பராபக்தியின் மூலமாக அநாதி காலம் முதல் இருக்கிறவரான அருவமான இறைவனைப்பற்றி உள்ளது உள்ளபடியாக தன்மைகளை தத்வார்த்தமாக உணரத்தொடங்குவான் .அதுபோலவே பிரம்மமாகிய என்னையும் உணர்வான் .

கீதை 18 : 56 தத்வார்த்தமான அந்த சமரச நெறியில் எங்களில் நிலைத்திருக்கிறவன் சதா சர்வ கர்மங்களை செய்துகொண்டிருந்தாலும் ; எங்களது அருளால் நித்திய ஜீவனை அடைவான்

கீதை 18 : 57 எல்லா கர்மங்களையும் எங்களிடம் அர்ப்பணம் செய்து ஆத்ம சமநிலை யோகத்தை உடையவனாக எப்போதும் எங்களையே உள்ளத்தில் கொண்டு அடைக்கலம் புகுவாயாக

கீதை 18 : 58 மேற்கூறியபடி எங்களில் நிலைத்திருந்து எங்களது அருளால் இவ்வுலகத்தின் எல்லா இன்னல்களையும் எளிதாக கடந்து பரலோக வாழ்வை அடைவாய் . சுயத்தின் காரணமாக இப்போதனைகளை அலட்சியம் செய்தால் நித்திய ஜீவனை அடையாமல் பெரும் பாடுகளை இவ்வுலகில் அனுபவிப்பாய்

யோவான்
15 : 1. நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர்.

2. என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.

3. நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.

4. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.

5. நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

6. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.

7. நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.

8. நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.

9. பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.

10. நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.

11. என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.

குரு இல்லாத வித்தை பாழ் என்பார்கள்

கண்ணால் காணாத இறைவனை வாயிலேயே தொழுது கொண்டிருந்தாலும் பேப்பரில் வாசித்துக்கொண்டிருந்தாலும் அவரை உணர்வது கடினம்

அதையே அவரின் பிரதிநிதியான அறிந்தவரை குருவாக வைத்து அல்லாஹ் வை வழிபட்டால் தொடர்பு எளிதாகும்

20:109. அந்நாளில் அர்ரஹ்மான் எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்து கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவருடைய ஷஃபாஅத்தும் (பரிந்துரையும்) பலனளிக்காது.

எவருடைய பரிந்துரை அனுமதிக்கப்படும் என்றால் யார் இறைபணிக்கென இறைவனால் பரத்திலிருந்து பூமிக்கு அனுப்பப்பட்டார்களோ அத்தகையவர்களின் பரிந்துரை ஏற்கப்படும்

வேதங்களில் யார் இறைவனால் அனுப்பபட்டவர்கள் என்ற சாட்சி உண்டு

மனித தரத்திலிருந்து உயர்ந்து குருவாகிறவர்களுக்கு அத்தகைய தகுதி இல்லை

இசுலாத்திலும் தக்பீர் முழக்கத்தில் முக்மது ரசூல் அல்லாஹு என முகமதுநபியை குருவாகவே அடையாளப்படுத்துகிறது

முகமதுநபியின் நாமத்தினால் அல்லாஹ் என அவ்வப்போது பிரார்திக்கிறவர்களுக்கு இறைவனின் அருள் தொடர்பு சித்திக்கும்

அவ்வாரும் இல்லாமல் நேரே அல்லாஹ் என்று அவர்கள் அழைப்பதால் பலர் அல்லாஹ் வை உணராதவர்களாகவே காலம் கழிக்கிறார்கள்
கீதை 18 : 59 எந்த சுயத்தின் காரணமாக நீ யுத்தம் செய்யமாட்டேன் என தயங்குகிராயோ ; அது அர்த்தம் அற்றது ; உன்னுடைய பிறப்பின் அர்த்தமே உன்னை போரில் ஈடுபடுத்துகிறது என உணர்வாயாக

கீதை 18 : 60 குந்தியின் மகனே ; அறிவு மயக்கத்தின் காரணமாக தயங்கினாலும் ; உன்னுடைய கர்ம வினையால் ஆட்கொள்ளப்பட்டு அரைகுறையாக செய்ய நேரிடுவாய்

மனிதன் தன் சிற்றறிவினால் நன்மை செய்வதாக நினைத்து தன் கண்ணை தானே குத்திக்கொள்கிறான் என்பது

இறைவனின் ஒட்டுமொத்த திட்டத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு காரியம் நம் மேல் சுமரும் . அது ஆழமான பல் நோக்கில் நடக்க வேண்டிய ஒரு காரியமாக இருக்கும்

அதை முழு மனதாக செய்து முடித்தால் உலகத்தாருக்கும் நமக்கும் பேராசிர்வாதமாக் முடிந்திருக்கும்

ஆனால் அதை நமோ சுய பாட்சாபாதம் சுய நீதி பாராட்டிக்கொண்டு செய்யாது தட்டிக்கழித்துக்கொண்டிருப்போம்

ஆனாலும் சூழ்நிலை ஸந்தர்பம் உருவாகி நம்மை வீழ்த்தும் போது உணர்வு வயப்பட்டு அரைகுறையாக அக்காரியம் நடந்தேறும்

இறைவனின் திட்டங்கள் மனிதர்களால் அரைகுறையாக செய்யப்பட்டு கால நீடிப்பு அடைகின்றன

அதற்கும் வேறு வேறு நபர்களை அவர் பயன்படுத்தி காரியம் நிறைவேறும்

அதற்குள் எதிர்தரப்பும் சமுதாயத்தில் வேறு பல பாதிப்புக்களை உண்டாக்கியிருப்பார்கள்

பூமியில் தேவ அசுர யுத்தம் என்பது மனிதர்கள் மூலமாக இன்றளவும் நடந்து கொண்டுதானே உள்ளது

அதில் கருவியாக பயன்படும் மனிதர்கள் தங்கள் சுய அறிவால் அதில் உலப்புதல் செய்ய அதிகாரம் இருக்கிறது . ஏனென்றால் மனிதன் தேவசாயலில் படைக்கப்பட்டவன்

அப்படியில்லாமல் இறைவனது திட்டத்தை உணர்ந்து அதை முழு மூச்சாக செய்து முடித்தால் அது பெரும் பேறாக உலகிற்கே பயன் விளைவிக்கும்

அதை எப்படி அறிவது என்பதே இப்போதைய பிரச்சினை

இறை தூதுவர் ; இறைவனது வாயாக இருப்பவர் பூமிக்கு ராமர் , கிறிஷ்ணர் , இயேசு , முகம்துநபி போல நேரடியாக வந்த காலத்தில் வாழ்ந்தோர் மிக பேறு பெற்றவர்கள்

ஆனாலும் அவருக்கு கீழ்படிந்து ஆசீர்வாதத்தை சுவீகரித்தவர்களைக்காட்டிலும் அவரை புறக்கணித்து விழுந்து போனவர்களும் அதிகம்

2:87. மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.

6:10. (நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர்; முடிவில் அவர்கள் எதைப் பரிகசித்துக் கொண்டிருந்தனரோ அதுவே பரிகசித்தவர்களை வந்து சூழ்ந்துகொண்டது.

6:48. (நன்மையைக் கொண்டு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை; எனவே எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

இன்றைய காலகட்டத்திற்கு சமரச வேதத்தை கொண்டுவந்து உலகம் முழுவதும் சமாதானத்தை நிலைநாட்டி சத்திய யுகத்திற்கு மக்களை தயார் படுத்தக் கூடிய சமரச வேதாந்தி (அல்மஹ்தி) ஒருவர் இறைவன் புறத்திலிருந்து வரப்போகிறார் என அனைத்து மதங்களிலும் தீர்க்கதரிசனங்கள் உள்ளன

அவருக்கு இரண்டு அடையாளங்கள் முன் மொழியப்பட்டுள்ளன

வள்ளல்பெருமான் வடலூரில் எழுவார்மேடை ஒன்றை கட்டிவைத்து போயிருக்கிறார்

யார் வடலூரில் ஜீவசமாதியில் உள்ள கல்பட்டு ஐயா முத்ல் மூவரை மீண்டும் உயிரோடு எழுப்பி இந்த மேடையில் சாட்சி சொல்ல வைக்கிறாரோ அவரே வரப்போகிற ஆண்டவர் என்று அறிவித்துள்ளார்

முகமதுநபியிடம் வரப்போகிற அல்மஹ்தியின் அடையாளம் என்ன என கேட்டதற்க்கு யார் வானத்திலிருந்து தங்க காசுகளை பெற்று வாரி வாரி வழங்கி பூமியில் வறுமையை ஒழிக்கிறாரோ அவரே என்றார்

இப்படி ஒருவர் வந்தால் மட்டுமே பூமியை கலியுகத்தை விட்டு சத்திய யுகத்திற்குள் நடத்த முடியும்

அப்படி ஒருவர் வரும்வரை அவர் விரைவில் வரட்டும் என்று பிரார்திப்பது உணர்ந்தோர் கடமையாகும்

கீதை 18 : 61 அர்ச்சுனா ; உடல் என்ற இயந்திரத்தில் ஏற்றி வைக்கபட்டுள்ள சர்வ பிராணிகளையும் மனிதர்களையும் ஆதி அனாதியான இறைவன் தனது மாயையினால் கட்டி அவரவர் கர்ம வினைகளுக்கேற்ப இயங்க செய்துகொண்டுள்ளார்

கீதை 18 : 62 நீ எல்லாவகைகளிலும் அந்த ஏக இறைவனையே தஞ்சம் அடைவாயாக .பரமாத்மாவாகிய எனக்கும் கீழ்படிவாயானால் மங்காத சமாதானத்தையும் நிலையான பரம பதத்தையும் சுவீகரிப்பாய்

கீதை 18 : 63 இவ்வாறு மறைபொருளுக்கெல்லாம் மறைபொருளான ஞானம் என்னால் உனக்கு உபதேசிக்கப்பட்டது . ரகசியமான இந்த ஞானத்தை முழுமையாக ஆராய்ந்து குரு வழியை விருப்பத்தோடு பின்பற்றுவாயாக

மறைபொருளான அந்த ஏக இறைவனை ; ஆதியும் அந்தமும் இல்லாதவனை ; வெட்டவெளியானவனை ; அருவமானவனை ; உலகின் பெரும்பான்மை மக்களால் அல்லாஹ் என்று அழைக்கப்படும் பொதுவானவனை என்னை குருவாக வைத்து வழிபாடு என தெளிவாகவே யுகபுருஷன் ஸ்ரீகிறிஷ்ணர் உபதேசித்துள்ளார்

அறியாப்படாத இறைவனை அறிந்தவர் நாமத்தால் அறிந்தவர் மூலமாக வழிபடு என்பதே ராமராக அவர் பூமியில் அவதரித்த போது கொடுத்த உபதேசம்

ராம நாமம் என்பது வழ்பாட்டு முறை

நாமத்தால் வழிபடுதல்

இந்துமதத்தின் பீஜ மந்திரங்கள் இரண்டே இரண்டுதான்

ஓம் நம் சிவா ய - சிவனாக வெளிப்பட்ட இறைவனை நமஸ்கரிக்கிறேன்

ஓம் நம நாராயணா ய - நாராயணனாக வெளிப்பட்ட இறைவனை நமஸ்கரிக்கிறேன்

நாராயணனாகவும் சிவனாகவும் உருவமாக வெளிப்பட்ட அருவமே ஆதி

நாம் அறிந்த தேவர்கள் யார் மூலமாகவும் இதே மந்திரத்தை பயன்படுத்தி வழிபடுவதே ஆதி இந்து நெறி

அதுவே பொதுநெறி

இயற்கை தொன்மையாம் ஆதிநெறி

இந்த ஆதிநெறியே இஸ்லாம் ஆக இருந்ததாக முகமது நபிக்கும் அறிவிக்கப்பட்டது

இஸ்லாம் என்றால் தூய மார்க்கம் என்று பொருள்

ஆதியில் படைக்கப்பட்ட மனிதர்களாகிய தமிழர்கள் எந்த நெறியில் வாழ்ந்தார்களோ அதுவே ஆதி இஸ்லாம் என்றே குரானும் சொல்கிறது

30:30. ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.

குரானில் இறக்கப்பட்ட 20000 வசனங்களில் தங்களுக்கு புரியாத வசனங்களை எடுத்துவிட்டு வெறும் 7000 வசனங்களை வைத்து மதபேதம் செய்து வருகிறார்கள்

ஆனால் வரப்போகிற அல்மஹ்தி இவை அனைத்தையும் சீர் செய்து சமாதானத்தை சாந்தியை உலகம் முழுவதும் நிலைநாட்டுவார்

2 comments:

kirubarp said...

ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் கடந்து விட்டது

கீதை 18 ஆம் அத்தியாயத்தை மறு பொழிப்பு செய்ய ஆரம்பித்து இப்போது 26- 28 சுலோகத்தை கடந்திருக்கிறேன்

ஒரு சுலோகத்தை பற்றி எழுதும் முன்பு அது தொடர்பாக அனுபவம் காரியம் வாய்க்கும்

அப்புறம் எழுத உள்ளுணர்வு பல முறை வந்த பின்பே எழுதுவேன்

கொஞ்ச நாள் கழித்து அதை வாசித்தால் அதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லாதது போலவே இருக்கும்

கீதை உபதேசிக்கப்பட்ட காலத்தில் கிறிஷ்ணர் ; அர்ச்சுணர் ; சுற்றி இருந்த கொஞ்ச பேர் மட்டுமே கேட்டார்கள்

அதை ஞான திருஸ்ட்டியில் சஞ்சயர் கண்டு திருதுராஷ்ட்ரருக்கு கூறினார்

அதை பிற்காலத்தில் பல ஆண்டுகள் கழித்து எழுதினார்கள்

ஆகவே அது எழுதப்படும் முன்பே எவ்வளவோ கலப்படம் அடைந்து விட்டது

அதனால் முழுமையான கீதை இப்போது இல்லை என்பதே உண்மை

அதற்கு விரிவுரை எழுதியவர்களோ அவரவர் சம்பிரதாயங்கள் என்ற கண்ணாடியை போட்டுக்கொண்டு அந்த பார்வையிலேயே எழுதியதாலும் அதிலும் முழுமையான விளக்கம் இல்லை

கடைசியாக பொழிப்புரை சொன்ன பிரபுபாதா கூட கிறிஷ்ணரே முழு முதல் கடவுள் என நிரூபிப்பதே வேலை என்பதுபோல மாஞ்சு மாஞ்சு பக்கம் பக்கமாக எழுதியிருப்பார்

மார்க்கங்கள் ; சமயங்கள் ; யார் கடவுள் என ஆராய்வது என்பதற்கு அப்பாற்படு கீதை யோகங்களை ஆழ்ந்து விளக்கும் இலக்கண நூல்

இன்று உலகத்தில் அப்பியாசத்தில் உள்ள ; அத்தோடு இனிமேல் வரப்போகிற எந்த யோகக்கலையையும் 18 வகையான யோகங்களுக்குள் கிறிஷ்ணர் வரையறுத்துள்ளார்

அந்தந்த யோகத்தின் அடிப்படை என்ன ; அதன் கூறுகள் என்ன ; சிறப்புற கடைபிடித்து தேர்ந்து முன்னேறி செல்ல என்ன வழி என மிக அருமையாக உபதேசித்துள்ளார்

18 வகை யோகங்களே 18 அத்தியாயங்கள்

அந்தந்த யோகங்களை நான் உணர்ந்தது எதுவோ அது பயன்படக்கூடிய யாருக்கேனும் பயன்படட்டும் என்பதற்கு மேலாக இந்த எழுத்தாக்கத்தில் எதுவுமில்லை

சில சுலோகங்களுக்கு பொழிப்புரை எழுதப்பட்டால் ; இதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என 10 நிமிடமாவது தியானித்து மறந்தும் விடுவேன்

ஆனாலும் இந்த முயற்சி எப்போது முடிவடையும் ; இன்னும் பலருக்கு பலனளிக்க புத்தகம் ஆக்கப்படுமா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை

இந்த பக்கம் பலருக்கு பலனளிக்கிறது என்பதை அறிவேன்

அவர்கள் இம்முயற்சி பூரணம் அடையட்டும் என வேண்டிக்கொள்ளுங்கள்

kirubarp said...

எவருடைய பிரார்த்தனை நிச்சயமாக கேட்கப்படுமோ ; யுகமாறுதலை கொண்டு வர வல்ல சின்னசிவன் ; அல்மஹ்தி பூமியில் அவதரித்துவிட்டார்

தன்னை உணராத நிலையில் உனது தொடர்பில் உள்ளார் .உன்னால் ஏறெடுக்கப்படும் பிரார்த்தனையில் அவர் பங்கு கொள்வதால் இவை நிச்சயம் நடக்க காண்பாய்

முன் அறிவிப்பாளனும் அல்மஹ்தியின் குருவுமான நீ அவரை வளர்த்துக்கொண்டிரு

தன்னை அவர் வெளிப்படுத்தும் காலத்தில் இறைவனின் சத்ததை கேட்டவன் ; முன்னோடி என அங்கீகரிக்கப்படுவாய்

தங்களுக்குள்ள சின்ன அருள்பலத்தால் சுய ஆவர்த்தனம் செய்கிறவர்கள் உன்னை உணரமாட்டார்கள்

இறைவனுக்கு கீழ்படிய அவர்கள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை

வரப்போகிறவர் சுயதம்பட்டம் செய்யமாட்டார் ; அலட்டவுமாட்டார்

சடுதியில் அவர்மீது என் அபிஷேகம் கடந்துவரும் ; தேவதூதர்கள் அவருக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள் ; இறைபேரரசின் ஆட்சி துவங்கும்

அதுவரை அவர் ஏதுமறியா பாலகன் போல உன் குருத்துவத்தில் ஒழிந்திருப்பார்

அவர் இன்னாரென்று உன்னாலும் அறிய முடியாது

அவர் உன்னோடு இருப்பதால் உன் கோரிக்கை நிறுவேறுதலை காண்பாய்

உன் பிரார்த்தனை பணியை அறிவித்து செய்துகொண்டிரு

உன் குரலுக்கு செவிசாய்த்தால் பேறு பெறுவார்கள்

இன்றைய பிரார்த்தனையின் வெளிப்பாடு இது

கேட்க காதுள்ளோர் கேட்கட்டும்