Wednesday, July 18, 2012

யோகம் 7 ஞான விஞ்ஞான யோகம் !!

(இங்கு க்ளிக் செய்து சுலோகங்களை கேட்டுக்கொண்டே வாசிக்கவும்)

கீதை 7:1 இறை தூதர் கிருஷ்ணர் கூறினார் : பிரதாவின் மகனே ! கடவுளை பற்றிய முழுஉணர்வில் நிரம்பி எவ்வாறு யோகத்தை அப்பியாசிப்பது ? கடவுளை பற்றிப்பிடித்த மன நிலையால் சந்தேகமற அவரை எவ்வாறு உணர்ந்தறிவது என்பதைப்பற்றி இப்போது கேள் !!

கீதை 7:2 எதை அறிந்தால் இனிமேலும் நீ அறியவேண்டுவது ஏதுமில்லையோ அந்த முற்றறிவை இப்போது உனக்கு அறிவிப்பேன் !!

கீதை 7:3 ஆயிரம் பேரில் ஒருவனே ஞானம் சித்திக்க தகுதியடைகிறான் ! அப்படி ஞானம் சித்திக்க பெற்றவர்களிலும் மிக கடிணமாக ஒருவனே கடவுளையும் என்னையையும் பற்றிய உண்மையை கண்டறிகிறான் !!

கீதை 7:4 நீர் , நிலம் , நெருப்பு , காற்று , ஆகாயம் . மனம் , மதிநுட்பம் , மற்றும் கேடான அஹம்பாவம் ஆகிய எட்டு அடிப்படைகளும் கடவுளிளிருந்தே தோன்றிய ஜட சக்திகளாகும் !!

கீதை 7:5 இந்த ஜட சக்திகளையும் ; இவற்றை சுரண்டியே வாழும் தாழ்ந்த தன்மையுள்ள உயிரிணங்கள் அனைத்தையும் தன்னகத்தே உறையவைத்தும் தாங்கியும் வருகிற இவற்றையும் விட மேலான சக்தியும் ஒன்று உள்ளது அர்ச்சுனா ! அதுவே கடவுளின் தெய்வீக சக்தி என்பதை அறிவாய் !!

கீதை 7:6 படைப்பினங்கள் அனைத்தும் இந்த இரண்டு சக்திகளிளிருந்தே தங்களின் ஆற்றலை பெறுகின்றன ! லவ்கீகமானவைகள் ஜட சக்திகளிலிருதும் ஆன்மீகத்தில் விளைந்தவைகள் தெய்வீக சக்தியிலிருந்தும் ஆற்றலை பெறுகின்றன ! இரண்டு வகை உயிரினங்களுக்கும் ஆதியும் அந்தமும் கடவுளே என்பதை அறிவாய் !!

கீதை 7:7 செல்வத்தில் திளைப்பவனே ! கடவுளை விட மேலான உண்மை ஏதுமில்லை ! எல்லாமே கடவுளிலே நிலைத்தும் ஊசலாடியும் வருகின்றன ! சாரத்தில் தொங்கும் முத்துகளை போலவே ஊசலாடுகின்றன !!

கீதை 7:8 குந்தியின் மகனே ! தண்ணீரின் சுவையும் ; சூரியன் சந்திரனின் வெளிச்சமும் ; வேத வாக்கியங்களில் ஓம் என்ற அட்சரமும் ; ஆகாயத்தின் பிராணசத்தமும் ; மனிதனுக்குள்ளிருக்கும் வல்லமையும் கடவுளே என்பதை அறிக !!

கீதை 7:9 நிலத்தின் பூர்வீக வாசனையும் ; தீயின் வெப்பமும் ; எல்லா உயிரினங்களின் உயிரும் ; தவம் செய்வோரின் தவயோகமும் கடவுளே !!

கீதை 7:10 இருப்பவைகளின் மூல வித்தும் ; அறிஞர்களின் ஞானமும் ; அதிகாரம் உடைய மனிதர்களின் அதிகாரமும் கடவுளே !!

கீதை 7:11 பலவான்களின் பலமும் ; தாபத்தால் தவிக்காத ஆசையும் ; பொறுமை மீறாத தேவையும் ; சமூக ஒழுங்கு கெடாத உடலுறவும் கடவுளே !!

கீதை 7:12 எல்லா வாழ்வு நிலைகளும் ; இருப்புகளும் அவை சத்துவம் ; ரஜஸ் ; தமஸ் எவையாகிலும் கடவுளின் சக்தியிலிருந்தே உண்டானைவையே ! ஒரு விதத்தில் எல்லாம் கடவுளே ! ஆனாலும் எல்லாமும் கடந்த தனித்தன்மையானவரும் கூட ! ஜட இயற்கை முக்குனங்களுக்கு அவர் உட்பட்டவறல்ல ! மாறாக அவை அவரிலிந்தே விளைந்தவை !!

கீதை 7:13 சத்துவம் ; ரஜஸ் ;தமஸ் என்ற முக்குனத்தால் கலப்படைந்து உலகம் முழுமையும் கடவுளை உணர முடியாமல் --அவர் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர் ; எல்லையற்றவர் ; தனித்தவர் என உணரமுடியாமல் மயங்கிக்கிடக்கிறது ! தன்னைப்போலவே அவரை கற்பித்துகொள்ள முயலுகிறது !!

கீதை 7:14 லவ்கீக உலகின் மூவகை இயல்புகளை தன்னகத்தே கொண்ட மாயை எண்ணும் சக்தி வெல்லுவதற்கரியது ! ஆனால் யார் கடவுளிடம் சரணாகதி அடைகிறானோ அவனால் மட்டுமே மாயைகளை ஒவ்வொன்றாக எளிதில் கடற முடியும் !!

கீதை 7:15 பூமியில் தீமைகளை விளைவிக்கும் முழு மூடர்களும் ; மனித தன்மையில் கடை நிலையில் உள்ளோரும் ; மாயைகளால் கவரப்பட்ட அறிவுடையோரும் ; ஆவி மண்டல அசுரர்களின் ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்தோரும் கடவுளை சரணடைவதில்லை !!

கீதை 7:16 பாரதவர்களில் சிறந்தவனே ! நால் வகையான நல்லோர்கள் கடவுளுக்கு பக்தி தொண்டாற்ற தொடங்குகின்றனர் ! துயறத்திற்கு ஆட்பட்டோர் ; சமூக நல் வாழ்வை விரும்புவோர் ; தத்துவ விசாரம் உள்ளோர் ; ஞானம் விளைந்ததால் பூரண ஞானத்தை நாடி வளர்வோர் தாமாகவே கடவுளுக்கு பக்தி தொண்டாற்றும் நிலைக்கு வந்து சேருவார்கள் !!

கீதை 7:17 இவர்களுள் யார் பூரண ஞானத்தை எய்தியதால் எதை செய்தாலும் அதை கடவுளுக்கு பக்தி தொண்டாகவே பாவித்து செய்யும் மன நிலையை அடைகிறானோ அவனே கடவுளுக்கும் எனக்கும் பிரியமானவன் !! அவன் எங்களிடத்தும் நாங்கள் அவனிடத்தும் வாசமாயிருப்போம் !!

கீதை 7:18 இந்த பக்தர்கள் எல்லோரும் ஐயமற பெருந்தகையாளர்களே ! இருப்பினும் யார் என்னைப்பற்றிய (யுக புருஷன் ) அறிவில் தெளிந்தவனோ அவனை நானாகவே கருதி என் குருகுலத்தில் காத்து கொள்ளுகிறேன் ! என் உபதேசத்தின் படி உண்ணதமான யோகத்தை பக்திதொண்டாக செய்கிறவன் நிச்சயமாக கடவுளை அடைந்து உயர்வான பூரணத்தை எட்டுவான் !!

கீதை 7:19 பலமுறை பிறந்தும் இறந்தும் வாழ்வில் கடவுளை சரணடைய தெளிவடைந்தவன் ; எல்லா விளைவுகளுக்கும் விளைவானவராகவும் எல்லாமுமானவராகவும் கடவுளை கண்டுணர்வான் ! அத்தகைய மகாத்துமா பிறவியெடுப்பது மிக ஆபூர்வமானது !!

கீதை 7:20 யாருடைய மதிநுட்பம் லவ்கீக ஆசைகளால் கவரப்பட்டுள்ளதோ ; அவர்கள் தங்கள் தேவைகள் நிறைவேற அசுரர்களை சரணடைகிறார்கள் ! அவர்களை பிரியப்படுத்த சடங்குகளையும் வழிபாடுகளையும் மதமாச்சரியங்களையும் உருவாக்கி சிறையாகி கொள்ளுகின்றனர் !!

கீதை 7:21 எல்லோரின் இதயத்திலும் பரமாத்துமாவாய் வாசம் செய்யும் கடவுள் ; ஒருவன் அசுரர்களை பின்பற்ற தொடங்கியதும் அவன் எதை நினைக்கிறானோ அதுவாகவே ஆகும் படி விட்டு விடுகிறார் !!

கீதை 7:22 எதை விரும்புகிறானோ ; அதற்கான அசுரனை பின்பற்றி அதையும் அடைந்து கொள்ளுகிறான் ! எதை நினைக்கிறானோ அதுவாகவே ஆகும் படி கடவுள் தான் அனுமதித்தார் என்பதை அறியாமலேயே போகிறான் !!

கீதை 7:23 சிற்றின்ப நாட்டமுள்ள சிறு மதியுடையோர் ; அது அதற்கான அசுரனை வழிபட்டு அதனை அடைந்து கொண்டாலும் ; அந்த பலன்கலெல்லாம் தற்காலிகமானவையும் குறைந்த நிம்மதியை தறுபவை ஆகும் ! அவர்கள் பூமிக்குரியவைகளை நாடி பூமியிலேயே பிறந்து பிறந்து இளைக்கிறார்கள் ! ஆனால் எனது சீடர்களோ உண்ணதமான கடவுளின் பரலோகத்தை அடைவார்கள் !!

கீதை 7:24 ஞானமற்ற மனிதர்கள் என்னை பூரணமாக அறிந்து கொள்ள முடியாமல் நான் இதற்கு முன்பு இல்லாமலிருந்து இப்போது இறைதூதர் கிரிஷ்னர் என்ற நபராக வந்திருப்பதாக நினைக்கிறார்கள் ! அவர்களின் சிற்றறிவால் எனது அழிவற்ற நித்திய ஜீவனையும் ; யுக புருஷன் என்ற உண்ணத தன்மையையும் உணராதவர்களாக இருக்கிறார்கள் !!

கீதை 7:25 மூடர்களுக்கும் ஞானமற்றவர்களுக்கும் என்னை நான் வெளிப்படுத்தி கொள்ளுவதில்லை ! அவர்களுக்கு எனது உள்ளார்ந்த தன்மை மறைக்க பட்டுள்ளது ! ஆகவே நான் பிறப்பு இறப்பு அற்றவன் என்பதை அறியார்கள் !!

கீதை 7:26 அர்ச்சுணா ! யுக புருஷன் என்ற நிலையால் இதுவரை நடந்தது அனைத்தும் நான் அறிவேன் ! இப்போது நடந்து கொண்டிருப்பதும் இனிமேல் நடக்க போவதும் கடவுளால் எனக்கு மறைக்க படவில்லை !! அனைத்து உயிரிணங்களையும் நான் அறிவேன் ; ஆனால் அவைகளோ என்னை அறியாமலிருக்கின்றன !!

கீதை 7:27 பரத குலத்தோன்றலே ! எதிரிகளை வெல்வோனே ! எல்லா ஜீவாத்துமாக்களும் மயங்கிய நிலையிலேயே பிறந்துள்ளன ! அவை விருப்பு ; வெறுப்பு என்னும் இருமைகளால் குழம்பியுள்ளன !!

கீதை 7:28 ஜீவாத்துமாக்களில் எவை முந்தய பிறவிகளில் நன்மைகளையே செய்து இப்பிறவியிலும் நல் வழியில் நடக்கிறார்களோ அதனால் பாவங்கள் முற்றிலுமாக துடைக்கப்பட்டால் மயக்கத்தின் இருமைகளை கடறுகிறார்கள் ! அவர்களே எனது வழியில் திட மனதுடன் கடவுளுக்கு பக்தி தொண்டாற்ற தொடங்குகிறார்கள் !!

கீதை 7:29 ஞானம் விளையப்பெற்றோர் பிறப்பு இறப்பு தளையிலிருந்து வீடு பேறடைய என் குருகுலத்தில் புகளிடம் தேடி பக்தி தொண்டாற்றுவர் ! அவர்களே உண்மையான பிராமனர்கள் ! எனென்றால் அவர்களே உண்ணதமான யோக வாழ்வின் நெறி முறைகள் அனைத்துமறிந்து கடைபிடிப்பவர்கள் !!

கீதை 7:30 அவர்கள் கடவுளையும் என்னையும் பற்றிய முழு உண்மையை --இப்பூவுலகம் என் மூலமாகவே படைக்க பட்டு எனது ஆளுமையிலேயே வைக்கபட்டு உள்ளது ; கலகம் செய்யும் அசுரர்களின் குழப்பங்களிலிருந்து விடுபட்டு அனைத்து விதமான வழிபாடுகளும் யாகங்களும் யோகங்களும் என் மூலமாகவே உண்ணதமான கடவுளுக்கு செலுத்தப்பட வேண்டும் என்பதை இறக்கும் தருவாயிலாவது அறிந்தால் நித்திய ஜீவனை பெறுவார்கள் !!