Wednesday, July 18, 2012

கீதை : 9 ராஜ வித்யா ராஜ குக யோகம் !!

(இங்கு க்ளிக் செய்து சுலோகங்களை கேட்டுக்கொண்டே வாசிக்கவும்)


கீதை 9:1 இறைதூதர் கிருஷ்ணர் கூறினார் : எனதருமை அர்ச்சுணா ! நீ எப்போதும் எனக்கு முரண்பட்டதில்லை ; ஆகவே எதை அறிந்தால் லவ்கீக உலகின் துன்பங்களிலிருந்து ஒருவன் தன்னை விடுவித்துக்கொள்ள முடியுமோ அந்த வெளிப்பாட்டையும் ரகசிய ஞானத்தையும் உன்னுள் விளைய வைக்கிறேன் !!

கீதை 9:2 இந்த அறிவே கல்விக்கெல்லாம் தலையாயது ! ரகசியங்களுக்கெல்லாம் ரகசியமானது ! இதுவே கலப்படமில்லாத தூய அறிவு ! இது தன்னை உணர்வதால் உண்டாகிற ஞானத்தை முழுமையாய் தரவல்லது ! எல்லா மதங்களின் ஞானத்தை தரவல்லது ! நித்தியமானது ! நிறைவோடு கைக்கொள்ள கூடியது !

கீதை 9:3 எதிரிகளை நிர்மூலமாக்குகிறவனே ! பக்தி தொண்டில் விசுவாசமற்றவன் ஒருபோதும் என்னை அடையவே முடியாது ! ஆகவே அவர்கள் மீண்டும் இந்த லவ்கீக உலகின் பிறப்பு இறப்பு சக்கரத்தில் விழுகிறார்கள் !!

கீதை 9:4 எனது யுகபுருஷன் என்ற அரூபத்தண்மையில் இந்த முழு பிரபஞ்சமும் பொதிந்திருக்கிறது ! எல்லாம் எனக்குள் இருக்கிறது ; ஆனால் நானோ அவைகளை கடந்தும் இருக்கிறேன் என்பது எனது இயல்பாகும் !! 

கீதை 9:5 நானே படைக்கபட்ட எல்லாவற்றையும் நிர்வகித்தாலும் ; நானே எங்கும் விரவி இருந்தாலும்  அசுரர்களின் மாயையால் படைப்பினங்கள் என்னில் நிலைபெறாமால் சுயம் - தன்முணைப்படைகின்றன !! அனைத்தும் என் மூலமாக கடவுளால் படைக்கப்படவையே ஆயினும் என்னில் ஒன்றாமல் கலக்கமடைகின்றன !!

கீதை 9:6 பலத்த காற்று எங்கும் சுற்றிசுழன்று வீசினாலும் அது வானத்தில் நிலைபெற்றிருப்பதைப்போல எல்லா உயிரினங்களும் சுயமாய் வினையாற்றினாலும் என்னிலேயே நிலைத்திருக்கின்றன என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்வாயாக !!

கீதை 9:7 குந்தியின் மகனே ! யுக முடிவில் எல்லா ஜட வெளிப்பாடுகளும் எனது அரூபத்தில் மறைகின்றன ! அதே போல அடுத்த யுகத்தில் நானே என்னிலிருந்து அவற்றை வெளிப்படுத்துகிறேன் !!  

கீதை 9:8 இந்த முழு பிரபஞ்ச இயக்கமும் எனது ஆளுகையிலேயே உள்ளது ! எனது சித்தத்தால் அவைகள் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப்படுகின்றன ! அதே போல முடிவில் அவைகள் மீண்டும் மீண்டும் அழிக்கவும் படுகின்றன !!

கீதை 9:9 தனஞ்ஜயா ! இருப்பினும் இவ்விவகாரங்கள் எதுவும் என்னை பாதிப்பதேயில்லை ! ஜட இயற்கை செயல்பாடுகளில் பந்தப்படாமல் தனித்தும் சலணமற்றும் ஓய்ந்தும் இருக்கிறேன் !!

கீதை 9:10 ஜட இயற்கையானது எனது சக்திகளில் ஒரு பகுதி மட்டுமே ! எனது வழிகாட்டுதலின் படி அது உயிரற்ற உயிருள்ள அனைத்தையும் உருவாக்குகின்றது ! அந்த இயற்கை விதிகளின் படி திரும்பதிரும்ப பிரபஞ்சமானது உருவாக்க பட்டும் அழிக்க பட்டும் வருகிறது !!

கீதை 9:11 அப்படியிருந்தும் இந்த பூமியில் நான் அவதரிக்கும் போதெல்லாம் அறிவீணர்கள் என்னை வெறுக்கிறார்கள் ! படைக்கப்பட்டவைகளின் தலைவன் - பெருமாள் என்ற எனது உண்ணதமான அரூப இயல்பை அவர்கள் அறிந்திருக்கவில்லை !!

கீதை 9:12 இந்த உண்மையை ஏற்காமல் தடுமாற்றம் அடைகிறவர்கள் அசுரர்களாலும் நாத்திகவாதிகளாலும் ஈர்க்கபடுகின்றனர் ! குழம்பிய நிலையில் பலன் விளைவில் பற்றுகொண்ட செயல்பாடுகளில் விழுந்து ஞான வளர்ச்சியில் தோல்வியடைந்து ஆத்தும விடுதலைக்கான நம்பிக்கையை இழந்து போகிறார்கள் !!

கீதை 9:13 பிரதாவின் மகனே ! யார் கலப்படமடையாதவர்களோ ; அத்தகைய சிறந்த ஆத்துமாக்கள் கடவுளின் அருளுக்குள் பாதுகாக்கபடுகிறார்கள் ! என்னை யுகபுருஷன் என்றும் இறைதூதன் என்றும் ; மூலமும் அழிவுமற்றவன் என்றும் உணர்ந்ததால் அவர்கள் எப்போதும் பக்திதொண்டில் நிலைத்திருப்பார்கள் !!

கீதை 9:14 எனது மஹிமையை உணர்ந்து புகழ்ந்துபாடிக்கொண்டும் ; என்னை வழிகெடாது பின்பற்றிக்கொண்டும் ; உண்ணதத்தை அடையும் உறுதியான லட்சியத்துடன் அவர்கள் கடவுளை துதித்து பக்தி செய்வார்கள் !!

கீதை 9:15 யோகத்தால் மெய்ஞானத்தை விருத்தி செய்வோர் உண்ணதமான கடவுளை இனைவைக்காமலும் பலராக குழப்பாமலும் ஏக இறைவனையே வழிபடுவர் !!

கீதை 9:16 கடவுளை நோக்கிய எல்லா சடங்குகளும் நானே ! யோகங்களும் நானே ! குணமாக்கும் மூலிகையும் நானே ! உண்ணதமான மந்திரங்களும் நானே ! திருப்புகழும் நானே ! யாகங்களில் வெண்ணெயும் தீயும் பலியும் நானே !! 

கீதை 9:17 இந்த பிரபஞ்சத்தின் தாயும் தகப்பனும் நானே ! தாங்குவோனும் தேற்றரவாளனும் நானே ! ஞானத்தின் முதிர்ச்சியும் பரிசுத்தம் செய்வோனும் `` ஓம் `` என்ற அட்சரமும் நானே ! மேலும் ரிக் சாம யஜூர் வேதங்களில் மறைக்கபட்ட  உண்மைகள் நானே !! 

கீதை 9:18 தங்குமிடமும் செல்லுமிடமும் ;துன்பத்தில் புகலிடமும் நானே ! சகலத்திற்கும் சாட்சியும் ; தக்கவைப்போனும் ; வழிகாட்டுவோனும் நானே ! நல்ல நண்பனும் நானே ! படைப்பும் அழிப்பும் நானே ! எல்லாவற்றிற்கும் அடிப்படையும் ; அவை நிலைத்திருக்கும் இடமும் அவைகளின் தெய்வீக வித்தும் நானே !!

கீதை 9:19 வெப்பத்தை தருபவனும் ; மழையை பெய்விப்பவனும் நிறுத்துவோனும் நானே ! நித்தியமும் மரணமும் நானே ! ஜடமும் ஜீவனும் நானே !! 

கீதை 9:20 இந்திர லோக இன்பங்களை நாடி ரிக் சாம யஜூர் வேதங்களை வாசிப்போர் ; குண்டலினி சக்தியை பெருக்குவோர் மாற்று வழியில் என்னை பின்பற்றுவோரே ! பாவங்கள் நீங்கப்பெற்றால் இந்திர லோகத்தில் நல்லோர் மத்தியில் பிறந்து புண்ணியத்தின் பலனை அணுபவிக்கிறார்கள் !!

கீதை 9:21 இவ்வாறு இன்ப வாழ்வை நுகர்ந்து புண்ணியம் சமப்பட்டதும் மீண்டும் அவர்கள் நித்தியமற்ற இப்பூலோக வாழ்வுக்கு திரும்புகிறார்கள் ! இவ்வாறு அம் மூன்று வெதங்களில் காட்டியுள்ள இன்ப வாழ்வுக்கான வழியை கடைபிடிப்போர் மீண்டும்மீண்டும் பிறப்பு இறப்பு சக்கரத்திலேயே சுழல்கின்றனர் !!

கீதை 9:22 ஆனால் யார் எனது யுகபுருஷன் என்ற அரூபத்தை உணர்ந்து தியானித்து உள்ளர்ந்த பக்திதொண்டுடன் என்னை பின்பற்றி கடவுளை வழிபடுகிறார்களோ அவர்களின் குறைவை நான் சுமந்து நிறைவை காத்து பெருக்குகிறேன் !!

கீதை 9:23 யார் பலரை கடவுளுக்கு இணைவைத்து உள்ளார்ந்த பக்தி செலுத்துகிறார்களோ அவர்களின் பக்திதொண்டை நான் மதிக்கிறேன் ! ஆனாலும் அவர்கள் தவறான வழியில் பக்திதொண்டு செய்கிறார்கள் !!

கீதை 9:24 எல்லா யஞ்னங்கள்-யாகங்கள் யோகங்களின் துய்ப்பாளனும் தலைவனும் நானே ! அவ்வாறிருக்க யார் யுகபுருஷன் என்ற எனது உண்ணதமான நிலையை உணர்ந்தறிய முடியாதவர்களோ அவர்கள் ஆண்மீக நிலையில் வீழ்ச்சியே அடைவர் !! 

கீதை 9:25 யார் ஞானிகளையும் மஹான்களையும் வழிபடுகிறார்களோ அவர்கள் அவர்கள் பிறவியெடுத்துள்ள இடத்தில் பிறப்பர் ! யார் முன்னோர்களை வழிபடுகிறாற்களோ அவர்களும் அவர்கள் பிறவியெடுத்துள்ள இடத்தில் பிறப்பர் ! யார் அசுரர்களை வழிபடுகிறாற்களோ அவர்களும் அவர்களின் ஆதிக்கம் உள்ளோரிடத்தில் பிறப்பர் ! ஆனால் யார் என் மூலமாக கடவுளை வழிபடுகிறார்களோ அவர்கள் எனது நித்திய இடத்தை அடைந்து பிறவாப்பெருனிலை பெறுவர் !! 

கீதை 9:26 ஒருவர் என் மூலமாக உள்ளார்ந்த பக்தியுடன் இலையையோ , பூவையோ , கணியையோ அல்லது தண்ணீரையோ சமர்ப்பித்தாலும் அதனை கடவுள் அங்கீகரிப்பார் !!

கீதை 9:27 நீ எதை செய்தாலும் ; எதை உண்டாலும் ; எதை கொடுத்தாலும் ; எதை சமர்பித்தாலும் எந்த புண்ணிய சடங்குகளை செய்தாலும் அதை கடவுளுக்கு பக்திதொண்டாகவே என் மூலமாக அர்ப்பணிப்பாயாக !!

கீதை 9:28 இவ்வாறு செயல்பட்டால் நீ பாவபுண்ணிய விளைவுகள் என்ற கர்மத்தளையிளிருந்து விடுபட்டவனாவாய் ! மனதை என்னிலே நிலைபெற செய்து பலன் விளைவுகளில் பற்றற்றவனாய் செயல்பட்டால் நீ விடுதலை பெறுவாய் ! என்னிடமும் வந்து சேருவாய் !!

கீதை 9:29 யாரையும் நான் பட்சாபாதம் செய்வதுமில்லை ; யாரையும் எதிரியாகவும் கருதுவதுமில்லை ! எல்லோரையும் சமமாகவே பாவிக்கிறேன் ! ஆனால் யார் கடவுளுக்கு பக்திதொண்டாக என்னை பின்பற்றுகிறார்களோ அவர்கள் எனக்கு நண்பனும் என்னில் நிலைத்தவருமாவார் ! நானும் அவர்களுக்கு நண்பனுமாவேன் !!

கீதை 9:30 இத்தகு பக்திதொண்டில் நிலைத்திருப்போர் ஒருவேளை தன்னை அறியாமல் கொடுமையான காரியத்தை செய்ய நேரிட்டாலும் அவர் புண்ணியராகவே கருதப்படுவர் !! 

கீதை 9:31  அவர் இந்த தூய மார்க்கத்தில் நிலைத்திருப்பதால் விரைவில் நேர்வழி பெற்று தூய்மையடைந்து மங்காத சமாதானத்தை அடைவார் !! ஆகவே அர்ச்சுணா ! எனது சீடன் ஒருபோதும் அழிவதில்லை என்பதை உரத்து சொல்வாயாக !!

கீதை 9:32 யார் என்னிடம் அடைக்கலம் பெற்றார்களோ அவர்கள் பிறப்பால் எத்தனை தாழ்ந்தவர்கள் ஆயினும் ; பெண்ணானாலும் வணிகர்களானாலும் கடைனிலை ஊழியர்களானாலும் உண்ணதமான எனது இருப்பிடத்தை அடைவது திண்ணம் !!

கீதை 9:33 தன்னை உணர்ந்து தெளிந்த ஆண்மீகவாதிகள் ; சிறந்த பக்தர்கள் ; புனிதமான ஆட்சியாளர்கள் போலவே எனது சீடர்கள் உண்ணதமடைவர் !! ஆகவே துன்பமும்துயறமும்  நிறைந்த தர்காலிகமான இப்பூவுலகில் வந்ததின் நோக்கம் ஈடேறும் வகையில் என் மூலமாக பக்திதொண்டாற்றுவாயாக !!

கீதை 9:34 மனதை எப்போதும் என்னில் நிலைபெற செய்து ; எனது சீடனாகி ; எனது வழிகாட்டுதல்களை கைக்கொண்டு கடவுளை வழிபடுவாயாக ! அப்போது முற்றிலுமாக என்னுள் நீ உள்வாங்கப்பட்டு எனது உண்ணத நிலையை நிச்சயம் அடைவாய் !!