Wednesday, July 18, 2012

யோகம் 4 ஞான கர்ம சந்நியாச யோகம் !!!

(இங்கு க்ளிக் செய்து சுலோகங்களை கேட்டுக்கொண்டே வாசிக்கவும்)



கீதை 4 :1 இறைதூதர் கிருஷ்ணர் கூறினார் : நான் இந்த அழிவற்ற விஞ்ஞானமாகிய யோகமுறைகளை ஆதியிலே மனிதர்களின் தகப்பனான மண்ணு /மணுவிற்கு உபதேசித்தேன் !!! அவர் தமது மகனான இஷ்வாகிற்கு உபதேசித்தார் !!

கீதை 4 :2 இந்த உண்ணதமான விஞ்ஞானம் வழிவழியாக சீடர்களின் பாராம்பரியத்தால் பெறப்பட்டு; ராஜரிஷிகளாகிய அரசர்களால் உணர்ந்து கடைபிடிக்க பட்டு வந்தது! இருப்பினும் நாளடைவில் இந்த பாராம்பரியம் உடைந்து இன்றைய தினம் காணப்படுவது போல இந்த உண்ணதமான விஞ்ஞானம் அறியப்படாமலேயே போயிற்று!!!

கீதை 4 :3 உண்ணதமான கடவுளோடு இயைந்து ஒருமித்து வாழும் அந்த ஆதி கலையை இன்று நான் உனக்கு உபதேசிக்கிறேன்!!! ஏனென்றால் நீ எனது நண்பனும் சீடனும் அத்தோடு உயிரோட்டமுள்ள நித்திய ஞானத்தை உணர்ந்து கொள்ள தகுதியுள்ளவனுமாய் இருக்கிறாய்!!! 

கீதை 4 :4 அர்ச்சுனன் கேட்டான்: தாங்கள் பிறந்திருப்பது இப்போது! அப்படியிருக்க ஆதியிலே இந்த விஞ்ஞானத்தை எப்படி மனுவிற்கு உபதேசித்தீர்கள்?

கீதை 4 :5 கிரிஷ்ணர் கூறினார்: நீயும் நானும் பலபிறவிகள் இப்பூமியில் வந்துள்ளோம்!! ஆனால் அவை பற்றிய உணர்வு உனக்கு அருளபடவில்லை!! எனக்கு மறைக்க படவில்லை!!!

கீதை 4:6 நான் பிறப்பற்றவனாகவும்; அழிவற்ற எனது ஆத்துமசரீரம் நித்தியஜீவனுள்ளதாகவும் இருந்தாலும் நான் அதனை தாழ்த்தி யுகங்கள் தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன்! எனென்றால் நானே இப்பூமிக்கு கடவுளின் பிரதிநிதியும்; பூமியில்உள்ள அனைத்து உயிரிணங்களின் யுகபுருஷனும் ஆவேன்!!

கீதை 4:7 எப்போதெல்லாம் எப்போதெல்லாம் ஆ
ன்மீக மதிப்பீடுகள் தொய்வடைந்து அதர்மம் தலைவிரித்தாடுகிறதோ அப்போதெல்லாம் நான் பூமிக்கு இறங்கி வருகிறேன்!!

கீதை 4:8 பக்தர்களை ரட்சிக்கவும் தீமை புரிந்து பூமியில் குழப்பம் செய்வோரை அழிக்கவும் மீண்டும் தர்மத்தை நிலைநாட்டவும் யுகங்கள்தோறும் யுகங்கள்தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன்!!

கீதை 4:9 யார் பூமியில் வெளிப்படும் எனது சரீரத்தின் தோற்றத்தையும்; நித்தியஜீவனுள்ள எனது ஆத்துமாவையும் உணர்ந்து அதன் செயல்பாடுகளில் தன்னை இனைத்துக்கொண்டு ஒத்திசைவாய் வாழ்கிறானோ அவன் இந்த லவ்கீகவாழ்வில் மீண்டும்மீண்டும் அல்லலுறுவதில்லை;மாறாக எனது நித்தியத்தின் மனநிலையை எய்துவான்!! நித்திய ஜீவனை அடைந்து என்னோடுகூட வாசம் செய்வான்!!

கீதை 4:10 பந்தத்திலிருந்தும் பயத்திலிருந்தும் கோபத்திலிருந்தும் விடுபட்டவர்களாய் ;முற்றிலும் கடவுளில் நிலைத்து கடவுளுக்குள் புகலிடம் தேடியவர்களாய் கடவுளை அறிகிற அறிவாலே நிறைய மனிதர்கள் தூய்மை அடைந்தார்கள்!! அதனாலே கடவுளின் நித்திய அன்பிலே நிலைத்தார்கள்!! 

கீதை 4:11 என்னிடம் எல்லா விசயங்களையும் கற்றுக்கொண்டு என்னை பின்பற்றி நடந்து கடவுளை முழுசரணாகதி அடைந்தவர்கள் அனைவருக்கும் கடவுள் அவரவருக்கேற்ற கூலியை வழங்குவார்!!

கிரிஷ்ண தெளிவு !!! 

கீதை 4:12 இப்பூமியில் பலன் கருதி பணியாற்றும் மனிதர்கள் சிலர் தாங்கள் நினைத்ததை அடைய அசுரர்களை வழிபடுகிரார்கள் ! அதனால் பூமிக்குரிய வாழ்வில் பல பலன்களையும் பெற்றுகொள்கிறார்கள் !! 

கீதை 4:13 மூன்று வகையாகிய மனித குணங்கள் மற்றும் அவற்றோடு தொடர்புள்ள உலகியல் செயல்பாடுகள் செவ்வையுற நடக்க நால்வகை தொழில்பிரிவுகள் சமுதாயத்தில் கடவுளால் உண்டாக்க படுகின்றன ! இந்த நால்வகை தொழில்பிரிவுகளின் செயல்பாடுகளை யுகபுருஷனாகிய நான் நிர்வகித்து பரிபாலித்தாலும் இவைகளால் பாதிக்க படாதவனாகவும் செயலற்றவனாகவுமே இருக்கிறேன் !

கீதை 4:14 எந்த செயல்பாடுகளும் என்னை பாதிப்பதில்லை; அல்லது அவற்றில் பலன் கருதி பணியாற்றுவதுமில்லை! யார் எனது செயல்பாட்டின் உண்மைத்தன்மையை உணர்ந்துகொண்டவனோ அவனும் பலன் கருதிய செயல்பாடுகளில் பட்டு உழல்வதில்லை !!


கீதை 4:15 நித்திய ஜீவன் அருளப்பட்ட எனது இயல்புகளை உணர்ந்து கொண்டவர்களாய் பலர் முந்தையகாலங்களிலேயே அதனை கடைபிடித்து விடுதலை பெற்ற ஆத்துமாக்களாய் மாறினார்கள்! அவர்களின் பாதையில் நடந்து உன் கடமைகளை செய்து வருவாயாக!!


கீதை 4:16அறிவுத்திறன் உடையவர்கள் கூட எது செயல் எது செயலை கடந்த தன்மை என்பதை நிதானிக்க முடியாமல் தடுமாற்றம் அடைகிறார்கள்! நான் எது செயல் என்பதை குறித்து விளக்குகிறேன் இதனை உணர்ந்து கடைபிடித்தால் தவறுகளிலிருந்து விடுபடுவாய்!!


கீதை 4:17 செயலின் நுட்பங்களை புரிந்து கொள்வது மிகவும் கடினமானது !அதற்கு முன்னால் செய்யக்கூடியது எது

செய்யக்கூடாதது எது செயலைகடந்தது எது
என்பதை புரிந்துகொள்வாயாக!!

கீதை 4:18 யார் தன் மீது சுமறும் எல்லா செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வினையாற்றினாலும் செயலில் செயலை கடந்த மனநிலையும் செயல்படாத போதும் செயலை நிர்வகிக்கிற மனநிலையும் அடையப்பெறுகிறானோ அவனே அறிவுதிறமுடையவன்! நித்திய ஜீவனை அடைவதற்கான பரிபக்குவத்தில் பயனிக்கிறவன்!!


கீதை 4:19 தனது புலன் இச்சைகளை நிறைவேற்றும் நோக்கத்தை வென்றவவனாய் யார் தனது அனறாட செயல்பாடுகளை நிர்வகிக்கிறானோ அவனே முற்றறிவை எய்தியவனாக கருதப்படுவான்!!


கீதை 4:20 பலன் விளைவுகளில் எவ்வித சிறு பற்றையும் கைவிட்ட மனநிலை உடையவன் தன்னில்தானே நிலைத்து பூரணத்தை எய்தி வாழ்வின் எல்லா விசயங்களிலும் செயல்படுவதால் பலன் விளைவில் பற்றற்றவனாகிறான்


கீதை 4:21 இந்த பரிபூரணத்தை எய்தியவன் தனது உடமைகளக்குறித்த பெருமைசிறுமை; உயர்வுதாழ்வு மனப்பாண்மையை கைவிட்டு மனதையும் அறிவையும் செம்மையாய் கட்டுப்படுத்தி தனது வாழ்வின் அத்யாவசிய தேவைகளை மட்டுமே தேடுகிறான் இவ்வாறு செயலாற்றுவதால் பாவவிளைவுகளால் பாதிக்கபடுவதில்லை!!


கீதை 4:22 இடைவிடாது செயலாற்றி கொண்டேயிருந்தாலும் அச்செயலில் அதுவாக விளையும் பலனில் திருப்தியுற்று இருமைகளை கடந்து எரிச்சலடையாமல் வெற்றிதோல்வி இரண்டிலும் பாதிப்படையாமல் நிலைத்தமனதுடையவர்கள் எப்போதும் கலக்கமடைவதில்லை!!


கீதை 4:23 மூவகை குணங்களில் பிணைப்பற்று ஜீவனுள்ள அறிவில் நிலைத்த மனிதனின் செய்கை அனைத்தும் ஞானத்தில் போய் முடிகிறது!!


கீதை 4:24 யார் இந்த தெளிவில் நிலைக்கிறானோ--அதாவது கிருஷ்ண தெளிவு அடைந்த மனிதன் நிச்சயமாக பரலோக ராஜ்ஜியத்தை அடைவான் ஏனெனில் அவனின் செயல்பாடுகளெல்லாமம்  ஆ
ன்மீகமாகவே பரிமளிக்கும் அவன் விளைவித்ததெலலாம் ஆன்மீகமே அவன் உள்வாங்கியதெல்லாம் ஆன்மீகமே!!
யாகம் -வேள்வி என்பது என்ன?  

கீதை 4:25 யோகம் செய்கிறவர்களில் பலர் அசுரர்களை உபாவாசித்து அவர்களுக்கு பிரியமான பலவகைப்பட்ட உணர்வுகளை --பலிகளை செலுத்துகிறார்கள் ! ஆனால் வெகுசிலரே உன்னதமான கடவுளின் ஞானத்தீயில் தங்களையே பலியாக அர்ப்பணிக்கின்றனர்!!

கீதை 4:26 இன்பவேட்கையில் ஈர்க்கபடாத துறவறத்தினர் சிலர் மனக்கட்டுபாடு என்னும் வேள்வியில் ஐம்புலன்களையும் புலன் நுகர்ச்சியையும் அர்ப்பணித்தும் முறையான இல்லறவாசிகள் சிலர் புலன் நுகர்வுகளில் அளவை அர்ப்பணித்து புலன்களையே வேள்வியாக்கியும் தங்களையே வேள்வியாக மாற்றுகின்றனர்!


கீதை 4:27 மற்றும் சிலரோ தன் மனதையும் புலன்களையும் அடக்கியாண்டு அனுபவத்தால் முகிழ்த்த ஞானத்தீயில் புலன்களின் இயக்கத்தையும் பிராணனின் இயக்கத்தையும் வேள்வியாக்கி தன்னை உணர்தல் என்னும் சாதனையில் பயணிக்கிறார்கள்!


கீதை 4:28 சிலர் கடும் தவத்தில் ``தான்தனது`` என்ற அகம்பாவத்தையும் பற்றுகளையும் வேள்வியாக்கி ஞானத்தை அடைகிறார்கள்! சிலர் கடும் விரதத்தால் அஸ்ட்டாங்கயோகம் பயின்றும் சிலர் வேதங்களை ஆய்வுசெய்வதாலும் உன்னதமான ஞானத்தை அடைகிறார்கள்!


கீதை 4:29 மற்றும் சிலர் மூச்சு பயிற்சியில் ஈடுபட்டு ஆழ்மன தியானத்தில் லயிக்கிறார்கள் ! அந்த லயத்தை எட்டியோர் வெளிமூச்சின் இயக்கத்தில் உள்மூச்சையும் உள்மூச்சின் இயக்கத்தில் வெளிமூச்சையும் வேள்வியாக்குகின்றனர்!அந்த வேள்வியில் மூச்சை கடந்தும்; சிந்தனையை கடந்தும் ஆழ்மன தியானத்தில் நிலைக்கிறார்கள்!


கீதை 4:30 யாகம் -வேள்வி என்பதன் உன்மையான அர்த்தத்தை உணர்ந்தவர்களாய் மேற்கண்ட பயிற்சிகளில் ஒன்றில் ஈடுபடுவோர் பாவவினை மற்றும் எதிர்வினைகளிலிருந்து தூய்மைமேல் தூய்மை அடைந்து ஞானத்தீயினின்று விளையும் அமுதத்தை பருகி பரலோகத்திற்குரிய நித்தியஜீவனை அடைவது திண்ணம்!


கீதை 4:31 குருவம்சத்தில் சிறந்தவனே !இந்த பிரபஞ்சத்திலும், வாழ்விலும் இத்தகைய வேள்விகளின்றி ஒருவன் மகிழ்ச்சியாக வாழவே முடியாது! அப்படியிருக்க மறுமையை பற்றியென்ன?
கீதை 4:32 இப்படி பலவகைப்பட்ட செயல்பாடுகளில் கைக்கொள்ளப்படும் மனநிலை யோகங்களால் உண்டாகிற யாகங்கள் மட்டுமே வேதங்களால் அங்கீகரிக்கபட்டவை ! இதன் நுட்பத்தை சரியாக புரிந்துகொள்வதால் மட்டுமே மாயைகளிளிருந்து விடுதலை பெற்ற ஆத்துமாவாய் மாற முடியும் !!
கீதை 4:33 எதிரிகளை நிர்மூலமாக்குகிற பார்த்தா ! யோகங்களின் வழியான யாகங்களே ; உலகத்தினர் பொருட்களால் செய்யும் யாகங்களை விட சரியானது ! செயல்பாடுகளின் வழியான யோகங்களே ஞானத்தையும் விளைவிக்க கூடியது !!

கீதை 4:34 ஆன்மாவை உணர்ந்த குரு ஒருவரை அணுகி அவருக்கு பணிவிடைகள் செய்தும் தாழ்மையுடன் விசாரித்தும் அவரிடமிருந்து உண்மையை உள்வாங்குவாயாக !தன்னை உணர்ந்த ஆத்துமாக்கள் மட்டுமே தாங்கள் அறிந்த அளவு உண்மையை உனக்கு உணர்த்த முடியும்!!


கீதை 4:35 முழு உண்மையை நோக்கி வளரும் அறிவை அறிந்த பல ஆத்துமாகளிடமிருந்து நாளும் உள்வாங்குபவனாய் இருந்தால் தேங்கிப்போய் பின்தங்க மாட்டாய்! அத்தகைய அறிவால் எல்லா உயிரினங்களும் உன்னதமானவரின் அங்கங்களே மற்றும் அவரிலிருந்து வந்த அவருடையவைகளே என்ற மெய்யுணர்வில் திளைப்பாய் !!


கீதை 4:36 பாவிகளில் பெரும் பாவியாய் ஒருவன் பிறந்திருந்தாலும் ; உன்னதமான ஞானம் என்கிற படகில் ஏறி விட்டால் ``துக்கசாகரம்`` என்ற பிறவிக்கடலை நிச்சயமாக கடப்பது திண்ணம் !!


கீதை 4:37 கொளுந்து விட்டு பரவுகிற நெருப்பு எல்லாவற்றையும் எரித்து சாம்பலாக்குவது போல ஞானத்தீயானது உலகியல் செயல்பாடுகளால் விளையும் பாவங்கள் அனைத்தையும் எரித்து இருவினைகளையம் கடரச்செய்யும்!!
கீதை 4:38 உயிரோட்டமான--நித்தமும் வளர்கிற அறிவிற்கு ஈடுஇணையானதும் அதைப்போல தூய்மையானதும் இந்த உலகில் ஏதுமில்லை! அது எல்லா யோகங்களின் முற்றிய பலனால் விளைவது!! யார் ஆன்மீக பயிற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளுகிராறோ அவர் தனக்குள்ளாகவே இந்த அறிவை ஏற்ற காலத்தில் துய்க்க தொட்ங்குவார்!!!

கீதை 4:39 இந்த உயிரோட்டமான அறிவில் லயித்த பக்தன் தனது புலண்களை அடக்குவதில் வெற்றி பெற்று ஞானம் சித்திக்கபெறுகிறான்! ஞானம் சித்திக்க பெற்று உண்ணதமான தெய்வீக சமாதானம் நிறம்பியவனாய் மாறுகிறான்!!!

கீதை 4:40 அவபக்தியுள்ளவர்களும் அறியாமையில் உழல்வோரும் கடவுளால் அந்தந்த காலத்திற்கு வெளிப்படுத்திய வெளிப்படுத்த போகும் வேதங்களில் சந்தேகம் கொள்ளுவதால் இந்த இறைஉணர்வை அடையமாட்டார்கள்!! அவர்கள் தங்கள் ஆன்மீகநிலையிலிருந்து மேலும் வீழ்சியடைந்து இம்மையிலும் மறுமையிலும் ஆனந்தத்தை இழப்பது திண்ணம்!!!

கீதை 4:41 யார் இந்த ஆன்மீக பயிற்சியிலும் பலனில் பற்று வைக்காத கர்மயோகத்திலும் அப்பியாசிக்கிராறோ அவரது சந்தேகங்கள் உயிரோட்டமான அறிவால் அழிக்கபடும்!! செயலின் விளைவுகளால் பாதிக்க படாத மன நிலையை எட்டி தன்னில்தானே நிலைத்திருப்பார்!!!

கீதை 4:42 ஆகவே அறியாமையினால் உனது மனதில் எழும் சந்தேகங்களை முற்றறிவால் துடைத்தெறிவாயாக!!! யோகங்களால் உன்னை
பலப்படுத்திக்கொண்டவனாய் போரிடுவாயாக!!!